சினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 19, 2018, 00:05 [IST] திரைத்துறையில் உள்ள பிரச்சினைகளைக் களைவதற்காக, கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய படங்களை ரிலீஸ் செய்யாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளான 50% வி.பி.எஃப் கட்டணக் குறைப்பு, திரையரங்குகள் கணினி மயமாக்கல், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் கட்டண குறைப்பு எனத் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறப்பட்டன. இந்த சூழ்நிலையில் 47 நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை முதல் (17-04-2018) முடிவுக்கு வந்தது என தயாரிப்பாளர் சங்கத்தால் அறிவிக்கப்பட்டது. எனவே, வருகிற வெள்ளிக்கிழமை முதல் படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. முதலாவதாக ‘மெர்க்குரி’ படம் ரிலீஸாகிறது. சைலண்ட் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ளார். ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ‘மேயாத மான்’ இந்துஜா, ஷஷாங்க், அனிஷ் பத்மநாபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ் தவிர மற்ற மொழிகளில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 13) இந்தப் படம் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது. இனி படங்களின் ரிலீஸ், சென்சார் சான்றிதழ் பெற்ற வரிசைப்படியே நிகழும் என முடிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெரிய படங்களின் போட்டியைத் தவிர்க்க சிறிய படங்கள் மொத்தமாக ரிலீஸ் ஆவது எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த புதிய முறைகளைக் கையாளவிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். வாரத்திற்கு மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸ் செய்வது எனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இந்த முறைப்படி சென்சார் சான்றிதழ் பெற்ற தேதி அடிப்படையில் மூன்று மூன்று படங்களாக ரிலீஸ் ஆனால், 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|