கமல்ஹாசனுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 18, 2018, 08:45 [IST] மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் நேற்று மாலை திடீரென்று சந்தித்தார். சுமார் 10 நிமிடம் இந்த சந்திப்பு நீடித்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பெற்று விட்டதால் வெகுவிரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது திரையுலகினரின் போராட்டம் நடைபெற்று வருவதால் வெளியீட்டு தேதியை அறிவிக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் இந்த சந்திப்பின் போது விஷால் கமல்ஹாசனிடம் டிஜிட்டல் சேவை கட்டணம் தொடர்பாக பட அதிபர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம் தொடர்பாகவும், வேலைநிறுத்தத்துக்கு தங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்ததாகவும், மேலும் தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ரஜினி தற்போது ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளதால் அவர் திரும்பிய பின் அவரையும் விஷால் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|