வணங்கான்

vanangaan
நடிப்பு
அருண் விஜய், ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, ஜான் விஜய், மிஷ்கின், ராதாரவி, சிங்கம்புலி, பிருந்தா சாரதி, ரவி மரியா

ஒளிப்பதிவு
ஆர். பி. குருதேவ்

படத்தொகுப்பு
சதீஷ் சூர்யா

இசை
ஜி. வி. பிரகாஷ் குமார்

பின்னணி இசை
சாம் சி. எஸ்.

கதை, இயக்கம்
பாலா

தயாரிப்பாளர்கள்
பாலா, சுரேஸ் காமாட்சி

தயாரிப்பு நிறுவனம்
பி ஸ்டூடியோஸ், வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்

வெளீயீடு:
10 ஜனவரி 2025

*****

பாடல்கள்
1. இறை நூறு
படம் : வணங்கான் (2025)
பாடியவர் : மது பாலகிருஷ்ணன்
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா

வீடியோ


ஆண் : இறை நூறு இருந்தால் என்ன
மதம் நூறு ஆண்டால் என்ன
பொய் வாழ்ந்தால் என்ன
மெய் வீழ்ந்தால் என்ன
புவி வாழும் பேரன்பிலே

குழு : விஞ்ஞானம் ஒரு பாதி
மெய்ஞானம் ஒரு பாதி
அஞ்ஞானம் சரி பாதியே

ஆண் : கடவுளைக் காப்பாற்ற
மனிதன் உண்டு
மனிதனைக் காப்பாற்ற
கடவுள் உண்டோ

ஆண் : எவர் வேதம் தான் விடை கூறுமோ
ஆங்காரம் ஓர் கண்ணிலே
ஓம்காரம் ஓர் கண்ணிலே
வா நாம் வாழ வாழ்வுண்டு மண் மீதிலே

குழு : சார்வாகம் வைதீகம்
ஆன்மிகம் தெய்வீகம்
நாள்தோறும் ஏதேதோ சொல்கின்றதே
இவை ஏதும் கேளாமல்
இயல்பான ஓர் அன்பில்
இரு ஜீவன் வாழ்கின்றதே

ஆண் : துறவியும் காணாத அமைதி ஒன்று
இவர் வாழ்விலே நிறைந்தோடுதே
ஆகாயம் ஓர் உண்மையே
பூலோகம் ஓர் உண்மையே
வா நாம் காணும் பாசங்கள்
பேருண்மையே

குழு : வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி
நீராகி நூறாகி நிலையாகுமே
ஊனாகி உயிராகி நானாகி நீயாகி
நாமாகி உறவாடுமே

*****