தக் லைஃப்

Thug Life
நடிப்பு
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், சான்யா மல்ஹோத்ரா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், பங்கஜ் திரிபாதி, தனிகில்லா பரணி, வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த், வையாபுரி

ஒளிப்பதிவு
ரவி கே. சந்திரன்

படத்தொகுப்பு
ஏ. ஸ்ரீகர் பிரசாத்

இசை
ஏ.ஆர். ரஹ்மான்

கதை, இயக்கம்
கமல்ஹாசன், மணிரத்னம்

இயக்கம்
மணிரத்னம்

தயாரிப்பாளர்கள்
கமல்ஹாசன், ஆர். மகேந்திரன், மணிரத்னம், சிவா ஆனந்த், உதயநிதி ஸ்டாலின்

தயாரிப்பு நிறுவனம்
ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஜ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ்

வெளீயீடு:
5 ஜூன் 2025

*****

பாடல்கள்
1. ஜிங்குச்சா
படம் : தக் லைஃப் (2025)
பாடியவர்கள் : வைஷாலி சமந்த், சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் ஆதித்யா ஆர்.கே
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : கமல்ஹாசன்

வீடியோ


குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

குழு : ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண் : எங்க சுந்தரவல்லியே
இன்னும் சுந்தரம் ஆக்குங்க
இந்த சர்க்கரைகட்டிய சேத்து
பொங்கல் ஆக்குங்க

பெண் : எங்க கங்க கொடுத்தோம்
உங்க அடுப்பில் சேத்துக்க

பெண் : உலையில அறம்பொருளின்பம்
மூனையும் சேத்து மூட்டுங்க

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண் : பந்தலுக்கு ஈசானி மூல

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண் : பதமா பள்ளம் பறிச்சாச்சு

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண் : குங்குமமும் மஞ்சளும் சேர்த்தாச்சு

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண் : மங்களமோ மங்களம் உண்டாச்சு

ஆண் : அப்பனின் கண்மணியாம்
அற்புத பாவை இவள்
நடத்தின சுயம்வரத்தில்
தேர்ந்தவன் என் மகன்தாங்க

ஆண் : தூரத்து சொர்க்கத்திலே
நிச்சயம் செய்யாமல்
கிட்டத்து நட்புலையே
பிடிச்ச என் கிரகலட்சுமி

பெண் : ஹே ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா

குழு : பெரிசுங்க சம்மதிச்சு

பெண் : ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா

குழு : சம்மந்தம் செய்யாட்டி

பெண் : ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா

குழு : பிரசவம் முடிஞ்சதும்தான்

குழு : ஓஹூ ஓஹூ.ஓஓஹூ ஓஹூ ஓஓஓ

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண் : பந்தலுக்கு ஈசானி மூல

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண் : பதமா பள்ளம் பறிச்சாச்சு

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண் : குங்குமமும் மஞ்சளும் சேர்த்தாச்சு

குழு : ஆஆஆ ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பெண் : மங்களமோ மங்களம் உண்டாச்சு

பெண் : ஒருமையிலே பேரைச் சொல்லி
அடிச்சு வைதவா
பந்தலிலே பணிவு காட்டும்
வேஷம் போடுறா

பெண் : பல நாளாய்
கனவில் மட்டும்
பாத்த காட்சிய
முதலிரவில் தணிக்கயின்றி
பார்க்க போகிறா

ஆண் : ஓஹ் ஓ அடியே

ஆண் : சிங்காரமாய் சிரிப்பை
அடக்கும் கள்ளி
என் குளத்தில் மட்டும்
மலரும் இந்த அல்லி

ஆண் : சிறு குண்டுமல்லி போல்
பல புள்ள குட்டிய
இவ பெத்து போட
போவதெல்லாம் இங்கத்தான்

பெண் : சிக்கிட்டான் சிக்கிட்டான்
சிக்காத காளை
சமயலுக்கு உதவ
ஆளு கெடச்சிட்டான்

பெண் : சம்சாரம் சொன்னதையே
வேதம்ன்னு ஓதுவான்
பொண்டாட்டி தாசனவே மாறுவான்

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண் : ஊருக்குள்ள வம்பு பண்ணுவான்

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண் : வீட்டுகுள்ள சொம்பு தூக்குவான்

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண் : ஊருக்குள்ள வம்பு பண்ணுவான்

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா

பெண் : வீட்டுகுள்ள சொம்பு தூக்குவான்

குழு : ஜிங்குச்சா ஜிங்குச்சா

பெண் : அருந்ததி பார்த்தாச்சா

குழு : ஜிங்குச்சா ஜிங்குச்சா

பெண் : அம்மி மிதிச்சாச்சா

குழு : ஜிங்குச்சா ஜிங்குச்சா

பெண் : மெட்டிய போட்டாச்சா

குழு : ஜிங்குச்சா ஜிங்குச்சா

பெண் : ஏழடி வெச்சாச்சா

பெண் : வந்த வேலை முடிஞ்சுதுங்க
ஆஹா அஹாங்க ஆஹாங்க
பந்திக்கு முந்துங்க ஆஆஆ

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜா ஜா

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜா

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜா.

குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜா

*****

2. முத்த மழை
படம் : தக் லைஃப் (2025)
பாடியவர்கள் : தீ மற்றும் சிவா ஆனந்த்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : சிவா ஆனந்த்

வீடியோ


பெண் : முத்த மழை இங்கு
கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ

பெண் : சங்கம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ
சொல்லா உறவோ
இல்லா ஒருவனை
வேண்டி ஏங்கும் உசுரோ

பெண் : கண்ணாளா
என்னாளா
பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை

ஆண் : நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
த்ரு தோந்த தீம்தன தோம்தன தோம்

பெண் குழு : தீம் தன தோம் தன தீம் தன தோம்

இருவர் : தீம் தன தோம் தன தீம் தன தோம்

பெண் : காலை கனவினில்
காதல் கொண்டேன்
கண் விழித்தேன்
அவன் காணவில்லை

பெண் மற்றும் குழு : கண் விழித்தேன்
அவன் காணவில்லை
கண் விழித்தேன்
அவன் காணவில்லை

பெண் : என்னோடு உன்னை
ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும்
வலி தீரவில்லை

பெண் மற்றும் குழு : கண்ணான கண்ணே
என் கண்ணாளா
என் உள் மன காதலை கண்டாயா

பெண் : கரு மை கண்ட கண்ணோக்கி
பொய் சொல்லி நின்றாயா

பெண் மற்றும் குழு : போதும் போதும்
என சென்றாயா

ஆண் : காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ

பெண் : முத்த மழை இங்கு
கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ

பெண் : சங்கம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்

ஆண் குழு : நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ

பெண் குழு : க ரி க ரி க ம க ரி க ரி க ரி

ஆண் குழு : நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ

பெண் குழு : க ரி க ம க ரி க ரி க ரி க ரி க ரி க ரி த நி த ப த ப

ஆண் : ஓ பாலை நிலத்தினில்
சோலை நிழலென
காதல் சொல்வேன் நான்
காதல் சொல்வேன்

ஆண் : மோக பனி போர்வையில்
கரம் கோர்கையில்
காதல் சொல்வேன் காதில்
காதல் சொல்வேன்

பெண் : நான் காதலி
காதலன் நீ
வேறு எல்லாம்
வெறும் வேஷம் என்பேன்

ஆண் மற்றும் பெண் : வேஷம் என்பேன்
வெறும் வேஷம் என்பேன்

பெண் : காலம் யாவும் நீதானே
இந்தக் காலன்
வந்தால் வெல்வேனே

ஆண் : மறுமொரு சூரியன்
பல தாரகை
மண்ணில் மின்னல் வீழாதே
மண்ணில் மின்னல் வீழாதே

பெண் : காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ

பெண் : இன்னும் ஒரு முறை
எந்தன் கதை சொல்லவா

பெண் குழு : சொல் சொல் சொல்
சொல் சொல் சொல்

பெண் : காதில் விழும் வரை
காதல் பாடவா பாடவா ஆ... ஆ...

பெண் : சங்கம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ
சொல்லா உறவோ
இல்லா ஒருவனை
வேண்டி ஏங்கும் உசுரோ...

பெண் : கண்ணாளா
என்னாளா
பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை

*****