|
|
பைசன் காளமாடன் ![]() நடிப்பு
துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேசுவரன், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள், ரெடின் கிங்ஸ்லிஒளிப்பதிவு
எழில் அரசு கேபடத்தொகுப்பு
சக்தி திருஇசை
நிவாஸ் கே. பிரசன்னாகதை, இயக்கம்
மாரி செல்வராஜ்தயாரிப்பாளர்கள்
சமீர் நாயர், தீபக், பா. ரஞ்சித், அதிதி ஆனந்த்தயாரிப்பு நிறுவனம்
அப்ளாஸ் என்டெர்டெயின்மென்ட்,
நீலம் ஸ்டூடியோஸ்வெளீயீடு:
17 அக்டோபர் 2025***** தூத்துக்குடியில் பிறந்து இந்திய அளவில் கபடியில் சாதித்த மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, மாரி செல்வராஜ் உருவாக்கியுள்ள படம்தான் ‘பைசன் காளமாடன்’. சாதி மோதல்கள் அடிக்கடி நிகழும் வனத்தி கிராமத்தைச் சேர்ந்த கிட்டான் (துருவ் விக்ரம்) சிறுவயதில் இருந்தே கபடியில் சாதிக்க வேண்டும் என்ற விரும்புகிறான். ஆனால் கபடியில் ஆர்வம் காட்டிய பலரும் பின்னாளில் வன்முறை பாதைக்கு சென்று விட்டதால், தன் மகனும் அப்படி ஆகிவிடக்கூடாது என்று அஞ்சுகிறார் கிட்டானின் தந்தை வேலுசாமி (பசுபதி). அதே சமயம் கிட்டானின் கபடிக் கனவை நனவாக்க பாடுபடுகிறார் அவரது பி.டி. வாத்தியார் (அருவி மதன்). ஊரில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களான பாண்டியராஜன் (அமீர்), கந்தசாமி (லால்) இருவருக்கும் இடையிலான பகை, ஊர் முழுக்க எதிரொலிக்கிறது. ஜப்பானில் நடக்கும் ஆசிய கபடி விளையாட்டு போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகிற காட்சியில் இருந்து படம் தொடங்குகிறது. இந்திய அணியில் விளையாடும் துருவ் விக்ரம், அந்த இடத்துக்கு எப்படி வந்தார், என்னென்ன பிரச்னைகளைச் சந்தித்துள்ளார் என அவரின் பள்ளி வாழ்க்கையில் இருந்து படம் நகரத் துவங்குகிறது. பேருந்தில் ஒரு ஆடு எதிர் தரப்பினரின் காலில் சிறுநீர் கழித்த நிகழ்வு உடனே பெரிய வன்முறையாக எப்படி மாறுகிறது என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். கபடி வீரராக உடல்வாகு, கபடி ஆட்டம், நெல்லை ஸ்லாங், கோபம், என அனைத்தும் துருவ் விக்ரமிற்கு அழகாக வந்திருக்கிறது. அவரின் திரை வாழ்க்கையில் இது சிறந்த படம் என்று கூறலாம். அதே நேரம் அப்பாவாக வரும் பசுமதி, தான் ஏன் கபடி விளையாட்டை எதிர்க்கிறேன் என்பதில் ஆரம்பித்து, மகனுக்காக போலீஸிடம் கெஞ்சுவது வரை நடிப்பில் கலக்கியிருக்கிறார். துருவ் அக்காவாக வரும் ரஜிஷா விஜயனும், கதாநாயகி அனுபமா பரமேஸ்வரனும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி நடித்துள்ளார்கள். நல்லா வாத்தியாராக வரும் அருவி மதன், அண்ணாச்சியாக (வெங்கடேச பண்ணையார் கேரக்டர்) வரும் லால், பாண்டியராஜாவாக (பசுபதி பாண்டியன்) வரும் அமீர் ஆகியோரும் தங்களின் பங்களிப்பை சரியாக வழங்கியிருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்ட கிராமப்புற மக்களின் வாழ்வியல், மற்றும் அந்த வட்டார இயற்கையை அழகாக காண்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் எழில் அரசு. கபடி தொடர்பான காட்சிகளில் எடிட்டர் சக்தி திரு தனித்து தெரிகிறார். தென்மாவட்ட நையாண்டி மேளம், மற்றும் பின்னணி இசையில் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா உழைப்பு தெரிகிறது. காளமாடன் கானம், தென்னாடு பாடல்கள் சிறப்பு. ஜாதி, அரசியல், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு கிராம வாழ்க்கையில் இருந்து, ஒரு சாதாரண இளைஞன் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரராக பரிணமிப்பது எப்படி என்பதைக் கூறுவதில், மனத்தி கணேசன் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது என்றே கூறலாம். ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலத்திலும், சாதிய கொடுமைகளும், ஆணவக் கொலைகளும் நடந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், பைசன் காளமாடன் போன்ற படங்களின் வருகை, இத்தகைய கொடுமைகளை எதிர்த்துப் போராடுபவர்களின் மனதிற்கு உரமூட்டும் என்பதில் சந்தேகமில்லை. பாடல்கள்
1. ரெக்க ரெக்க
படம் : பைசன் காளமாடன் (2025) பாடியவர்கள் : அறிவு மற்றும் வேடன் இசை : நிவாஸ் கே பிரசன்னா பாடலாசிரியர்கள் : மாரி செல்வராஜ் மற்றும் அறிவு வீடியோ ஒத்தயில போறவனே அச்சம் ஏதும் தேவை இல்லை ஓடுடா ஆண் : உச்சிப்பாற மேட்டு மேல கட்டி வெச்ச கோட்டக்குள்ள முட்டி மோதி முன்னேறு நீ மாடண்டா ஆண் : கனவ மறச்சிட படையில்லைடா கண்ணுக்கு தெரிவது தடையில்லைடா திமிரும் திமிலுக்கு பகையில்லைடா பயந்த உடலுக்கு உயிரில்லைடா ஆண் : கெளம்புடா இனி கலங்காத பாயுடா இனி பதுங்காத தேடுடா நீ தயங்காத விளையாடுடா நீ அடங்காத ஆண் : ப ோ ஆண் : அடச்சு வச்ச கூடு இப்ப தெறக்குது ஆண் : தோல் ஆண் : கிழிஞ்சும் என்ன பட்டாம் பூச்சி பறக்குது ஆண்: வான் ஆண் : உயரம் என்ன யாரு இப்போ அளப்பது ஆண் : நீ ஆண் : பொறந்து வந்த ஏக்கம் இங்க ஏக்கம் இங்க ஏக்கம் இங்க பறப்பது ஆண் : அத்துவான காட்டுக்குள்ள ஒத்தயில போறவனே அச்சம் ஏதும் தேவை இல்லை ஓடுடா ஆண் : ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ஏ மண்ணை விட்டு மரத்த விட்டு வானத்துக்கு நீ பறக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ஏ வயல விட்டு வரப்ப விட்டு வானத்துக்கு நீ பறக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ஏ பகைய விட்டு பழிய விட்டு வானத்துக்கு நீ பறக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க ரெக்க யே இருள விட்டு ஒளிய தொட்டு வானத்துக்கு நீ பறக்க ஹாஹாஹாஹாஆ ஆண் : ஏய் உன்னத்தான் வாடா உனக்கு காளமாடன் கதை சொல்றேன் வாடா ஏய் உன்னத்தான் வாடா ஊரு கொம்பு மாடன் கதை சொல்றேன் வாடா ஏ வாடா ஆண்கள் : ஏ உன்னத்தான் புழுதி கெளப்பிட்டு உன் மண்ணைத்தான் எடுத்து பூசிகிட்டு வா முன்னதான் திமிலு சிலுப்பிட்டு வா முன்னத்தான் ஆண் : காட்டு யானைக்கு ஒரு பாதை உன் கால்கள் தேடட்டும் புது பாதை ஆண் : பூமி சுத்துது உனக்காக புகுந்து புறப்படு புயலாக ஆண் : ப ோ ஆண் : மறைச்சு நிக்கும் மலையெல்லாம் துளைச்சிட்டு ஆண் : நீ ஆண் : ஒளிச்சு வெச்ச வெளிச்சத்த எடுத்துட்டு ஆண் : வா ஆண் : திறக்கும் அந்த வாசல் வழி தொடங்கட்டும் ஆண் : போர் ஆண் : நடக்க இங்க வேலி எல்லாம் தீ புடிக்க தீ புடிக்க எரியட்டும் ஆண் : அத்துவான காட்டுக்குள்ள ஒத்தயில போறவனே அச்சம் ஏதும் தேவை இல்லை ஓடுடா ஆண் : கனவ மறச்சிட படையில்லைடா கண்ணுக்கு தெரிவது தடையில்லைடா திமிரும் திமிலுக்கு பகையில்லைடா பயந்த உடலுக்கு உயிரில்லைடா ஆண் : கெளம்புடா இனி கலங்காத பாயுடா இனி பதுங்காத தேடுடா நீ தயங்காத விளையாடுடா நீ அடங்காத ஆண் : ப ோ ஆண் : அடச்சு வச்ச கூடு இப்ப தெறக்குது ஆண் : தோல் ஆண் : கிழிஞ்சும் என்ன பட்டாம் பூச்சி பறக்குது ஆண்: வான் ஆண் : உயரம் என்ன யாரு இப்போ அளப்பது ஆண் : நீ ஆண் : பொறந்து வந்த ஏக்கம் இங்க ஏக்கம் இங்க ஏக்கம் இங்க பறப்பது ***** 2. காளமாடன் கானம்
படம் : பைசன் காளமாடன் (2025) பாடியவர் : வி.எம். மகாலிங்கம் இசை : நிவாஸ் கே பிரசன்னா பாடலாசிரியர் : மாரி செல்வராஜ் வீடியோ தான தந்தந தந்நானே ஏ தான தந்தந தந்தந தந்தந தந்தந தந்தந தந்நானே ஏ தந்தந தந்தந தான தந்தந தான தந்தந தந்நானே ஏ தான தந்தந தந்தந தந்தந தந்தந தந்தந தந்நானே சாம கொட தொடங்கிடுச்சு ராசா நல்ல சங்கெடுத்து ஊதுங்கய்யா ராசா சந்தனத்த எடுத்துக்கிட்டு ராசா நம்ப ஊரு சனம் திரட்டி வையி ராசா அந்த ஒத்தையடி பாதையில அவன் ஓடி வரான் காளமாடன் அங்க உச்சிப்பன உசரத்துல அவன் ஆடி வரான் காளமாடன் கொம்பு ரெண்டு குறுகுறுக்க கண்ணு ரெண்டும் தீப்பிடிக்க நாலு காலு பாய்ச்சலிலே பாடி வரான் காளமாடன் கொம்பு ரெண்டு குறுகுறுக்க கண்ணு ரெண்டும் தீப்பிடிக்க நாலு காலு பாய்ச்சலிலே பாடி வரான் காளமாடன் ஏ காட்டரளி மாலை கட்டி கெளம்பி வரான் காளமாடன் காட்டரளி மாலை கட்டி கெளம்பி வரான் காளமாடன் அவன் பச்ச கறி படையல தான் கேட்டு வரான் காளமாடன் பச்ச கறி படையல தான் கேட்டு வரான் காளமாடன் கழுத்து மணி ஓசை கட்டி புழுதி மண்ண பூசிகிட்டு கழுத்து மணி ஓசை கட்டி புழுதி மண்ண பூசிகிட்டு அவன் நாலு காலு பாய்ச்சலிலே பாடி வரான் காளமாடன் நாலு காலு பாய்ச்சலிலே பாடி வரான் காளமாடன் ஏ செவ்வரளி காடு இங்க சிந்து ரத்தம் பாரு ஏ செவ்வரளி காடு சிந்து ரத்தம் பாரு பகை இங்க ஆடும் பேயாட்டமே திசையெங்கும் போடும் வெறியாட்டமே பகை இங்க ஆடும் பேயாட்டமே திசையெங்கும் போடும் வெறியாட்டமே வெறியாட்டமே ஏஏஏ தீப்பந்தம் கொளுத்துங்கய்யா ராசா ராசா தொரட்டும் தீமையெல்லாம் எரியட்டுமே ராசா ராசா வேல் கம்ப தூக்கிகிட்டு ராசா மறிக்கும் வேலியெல்லாம் ஒடச்சி எறி ராசா ஏஏஏ வேட்டெடுத்து வெடி வெடிக்க வெளிச்சமாக வாராங்கய்யா ஏ எதிரியெல்லாம் கொல நடுங்க கொலவ போட்டு பாடுங்கய்யா கண்ணுக்குள்ள கனவிருக்க களம் இங்க காத்திருக்க நெஞ்சுக்குள்ள திமிருருக்க நித்தம் அது துடிச்சிருக்க கண்ணுக்குள்ள கனவிருக்க களம் இங்க காத்திருக்க நெஞ்சுக்குள்ள திமிருருக்க நித்தம் அது துடிச்சிருக்க ஏ காட்டரளி மாலை கட்டி கெளம்பி வரான் காளமாடன் ஏ காட்டரளி மாலை கட்டி கெளம்பி வரான் காளமாடன் அவன் பச்ச கறி படையல தான் கேட்டு வரான் காளமாடன் அவன் பச்ச கறி படையல தான் கேட்டு வரான் காளமாடன் கழுத்து மணி ஓசை கட்டி புழுதி மண்ண பூசிகிட்டு கழுத்து மணி ஓசை கட்டி புழுதி மண்ண பூசிகிட்டு அவன் நாலு காலு பாய்ச்சலிலே பாடி வரான் காளமாடன் நாலு காலு பாய்ச்சலிலே பாடி வரான் காளமாடன் ***** |