சைரன் 108

Siren 108
நடிப்பு
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி, யோகி பாபு, அழகம் பெருமாள்

ஒளிப்பதிவு
எஸ்.கே. செல்வகுமார்

படத்தொகுப்பு
ரூபென்

பின்னணி இசை
சாம் சி.எஸ்.

இசை
ஜி.வி. பிரகாஷ் குமார்

கதை, இயக்கம்
அந்தோணி பாக்யராஜ்

தயாரிப்பாளர்
சுஜாதா விஜயகுமார்

தயாரிப்பு நிறுவனம்
ஹோம் மூவி மேக்கர்ஸ்

வெளீயீடு:
16 பிப்ரவரி 2024

*****

ஆயுள் சிறைக் கைதியான திலகன் (ஜெயம் ரவி), 14 வருடங்களுக்குப் பிறகு தன் அப்பாவைப் பார்க்க பரோலில் வருகிறார். அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியின் அரசியல் பிரமுகர்களான மாணிக்கமும் (அழகம் பெருமாள்), அவர் கட்சியைச் சேர்ந்த அஜய்யும் கொல்லப்படுகிறார்கள்.

இந்தக் கொலைகளைத் திலகன்தான் செய்திருப்பார் என்று நம்புகிறார் காவல்துறை ஆய்வாளர் நந்தினி (கீர்த்தி சுரேஷ்).

திலகன் கொலைகாரனா? கொல்லப் பட்டவர்களுக்கும் திலகனுக்கும் என்ன தொடர்பு என்ன? திலகன் ஏன் சிறையில் இருக்கிறான்? லாக்கப் மரணத்தால் ஏற்கெனவே கெட்டப் பெயரை சம்பாதித்த காவல் அதிகாரி நந்தினி இந்த வழக்கை எப்படி கையாள்கிறார்? போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது திரைக்கதை.

அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ், எமோஷனல் த்ரில்லர் வகைப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

ஜெயம் ரவி, வழக்கம்போல் அர்ப்பணிப்புடன் அருமையாக நடித்திருக்கிறார். நடுத்தர வயது மனிதனின் தோற்றத்தையும் உடல்மொழியையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கொலைப் பழி சுமந்தபடி மேலதிகாரிகளின் ஏளனத்தைச் சகித்துக் கொண்டு கொலை காரனைப் பிடிக்க முயற்சிக்கும் காவல்துறை அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் திறம்பட நடித்துள்ளார்.

யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி ஆகியோரும் தமக்கான பாத்திரங்களை சரிவர நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. சாம்.சி.எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார்.

ஏற்கெனவே பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் சிறந்த திரைக்கதை உருவாக்கத்தால் வெற்றிப் படமாக திகழ்கிறது சைரன் 108.

பாடல்கள்
1. கண்ணம்மா
படம் : சைரன் 108 (2024)
பாடியவர் : ஹரிச்சரண்
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : பா. விஜய்

வீடியோ


கண்ணம்மா கண்ணம்மா
காண்பேனா உன்னை
கை வைத்து மூடாதே
எந்தன் கண்ணை

கண்ணம்மா கண்ணம்மா
காண்பேனா உன்னை
கை வைத்து மூடாதே
எந்தன் கண்ணை

கண்ணீர் எல்லாம்
ஒன்னா நின்னு
உங்கிட்ட பேசணும்
கண்ணே கண்ணு

உன் பிஞ்சு பாதம்
தீண்டாத நெஞ்சு
தீ வச்சும் வேகாத
ஈர பஞ்சு

எந்தன் உயிராய்
வந்த உயிரே
கையில் தவழும்
சாமி நீதானே

ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஹோ ஓ

கண்ணான கண்ணுக்கு
இமை மேல பெருங்கோபம்
தீராதா? தீராதா?

சருகான உறவொன்னு
உசுரான மலரொன்னு
சேராதா? சேராதா?

மகளோட பிரிவென்ன லேசா
உடையாத மனசென்ன மனசா?
அறை நொடியாவது பாரேன்
சுடு சொல்லாவது சொல்லேன்
என் மனசோட காயங்கள் ஆற

போற உயிரே
போற உயிரே
பெத்த நொடிதான்
திரும்பி வாராத

கண்ணம்மா கண்ணம்மா
காண்பேனா உன்னை
கை வைத்து மூடாதே
எந்தன் கண்ணை

கண்ணம்மா கண்ணம்மா
காண்பேனா உன்னை
கை வைத்து மூடாதே
எந்தன் கண்ணை

*****

2. நேற்று வரை
படம் : சைரன் 108 (2024)
பாடியவர் : சித் ஸ்ரீராம்
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : தாமரை

வீடியோ


நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை

அனலாகவே வேகும் பனிபோல மோதும்
மழை கால மேகம் கண்டேன்
கரை சேர வேண்டும் கடல் என்று தேயும்
உனை தேடி கண்டு கொண்டேன்

பேசும் போதிலே கேளா ஒலி
பார்வை ஆகுமே தீபாவளி
உன்னை போல யாருமில்லை
என் இறைவி

நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை

மௌனம் என்னும் உன் மொழியில்
மழலையாய் ஆகி பேசுகிறாய்
ஒலிகளினால் நம் உலகில்
கவிதை சாயம் பூசுகிறாய்

கனவா நானவா தெரியா நிலையே
பகலை இரவாய் பழகும் கலையே

நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை

எனது காற்றில் நீ கரைந்தாய்
எனது வானம் நீ அளந்தாய்
எனது வாசல் நீ திறந்தாய்
எனது ஓசை நீ உணர்ந்தாய்

ஒரு நாள் நிழலாய்
தரையில் இருந்தாய்
பிறகு என் மனதில்
நிழவாய் நிறைந்தாய்

நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை

*****

3. அடியாத்தி
படம் : சைரன் 108 (2024)
பாடியவர்கள் : அந்தோணி தாசன், சிந்தூரி விஷால்
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : முருகன் மந்திரம்

வீடியோ


குழு : சின்ன மொட்டு ஒன்னு பூத்து
இப்பம் வெட்கப்படும் ஜோரு
வண்ண பொட்டு வச்சி
பூவும் வச்சி நிக்கிறத பாரு

குழு : வாழை மர தோரணமா
வாச நடை பாதைங்க
சீர் வரிசை ஊர்வலமா
சொந்த பந்தம் சேருங்க

குழு : கூடி வாங்க பொண்ணுகளே
கொலவய போட்டு ஆடுங்க
மாடி வீடு கட்டித்தரும்
மாப்பிள்ள வேணுன்னு கேளுங்க

பெண் : பளபளப்பும் கூடிச்சா
மினுமினுப்பும் ஏறிச்சா
கண்ணாடியில் உன்ன நீயும்
பாக்கிறப்போ தோனிச்சா

பெண் : பத்திரமா இருந்துக்க
பக்குவமா நடந்துக்க
கண்ட கண்ணும் பட்டா தப்பு
கண்மணியே ஏத்துக்க
கண்ணத்துல பூத்துக்க

பெண் : அடியாத்தி அடியாத்தி
ஆளான பேத்தி
ஆகாசமே கண்ணு வைக்க
பொங்கி நிக்கும் பருத்தி

பெண் : அடியாத்தி அடியாத்தி
ஆளான பேத்தி
ஆகாசமே கண்ணு வைக்க
பொங்கி நிக்கும் பருத்தி

பெண் : ஊராடுற வாய கொஞ்சம்
உள்ள பூட்டி வையி
வாலாட்டுற வேலையெல்லாம்
வேணா தள்ளி வையி

பெண் : காலாடுற கொலுசுக்குத்தான்
பூத்த கத சொல்லு
மேலாடுற சட்ட துணிய
லூசா தைக்க சொல்லு

பெண் : ஆகமொத்தம் நீயும்
இப்போ பொம்பள தான் கேளு
பொத்தி வெச்சு பாத்துக்கம்மா
மோசமான ஊரு

பெண் : இஷ்டத்துக்கு ஊற சுத்த
கூடாதடி ரோசு
சத்தம் போட்டு பேசாதடி
மெள்ளமா நீ பேசு

பெண் : ஏ அடியாத்தி அடியாத்தி
வலையலு குலுங்குற ஓசை
வானத்தை எட்டும் தான்
தாவணி போடுற ஆசை
நாணத்தக் கூட்டும் தான்

ஆண் : பூவே உன்ன பாக்குறப்போ
போகுதம்மா நெஞ்சு
தாயும் வந்து பாத்திடத் தான்
ஏங்குதம்மா கண்ணு

ஆண் : சாத்திரத்த சொல்லி உன்ன
பூட்டி வைக்கும் ஊரு
ஏத்துக்காத பெண்ணே நீயும்
எதித்து கேள்வி கேளு

ஆண் & குழு : உண்மையிலே பெண்ணினந்தான்
படைக்கிற கடவுள்
ஆணக் கூட பொம்பளதான்
சுமக்கணும் கருவில்

ஆண் & குழு : தீட்டு என்று தள்ளி வைக்கும்
வேலையத்த ஊரு
சாத்திரத்த கொள்ளி வச்சி
உன் வேலைய பாரு

பெண் : அடியாத்தி அடியாத்தி
ஆளான பேத்தி
ஆகாசமே கண்ணு வைக்க
பொங்கி நிக்கும் பருத்தி

பெண் : பளபளப்பும் கூடிச்சா
மினுமினுப்பும் ஏறிச்சா
கண்ணாடியில் உன்ன நீயும்
பாக்கிறப்போ தோனிச்சா

பெண் : பத்திரமா இருந்துக்க
பக்குவமா நடந்துக்க
கண்ட கண்ணும் பட்டா தப்பு
கண்மணியே ஏத்துக்க
கண்ணத்துல பூத்துக்க

பெண் : கெண்டை காலு கெளுத்தி
கொண்ட போட்ட கொழுந்தி
உலகத்து பேரழகா
உன்ன பெத்த ஒருத்தி

பெண் : அடியாத்தி அடியாத்தி
யே... அடியாத்தி அடியாத்தி

*****

4. ஆகாயம் உடஞ்சி
படம் : சைரன் 108 (2024)
பாடியவர் : ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : சிநேகன்

வீடியோ


ஆகாயம் உடஞ்சி
தல மேல விழுந்தா
அருகம்புல் தாங்குமா ஐயா

சதிகார கூட்டம்
அரங்கேற்றும் ஆட்டம்
தடுக்காம போனேனே ஐயா

எந்த சாமி வரும் கேட்க
இந்த சங்கடத்த போக்க
வாய் விட்டு அழக் கூட
அவ கிட்ட மொழியில்ல

எப்படி அவ தாங்குனாளோ
என்னென்ன சொல்ல ஏங்குனாளோ
யாரிடம் போயி நானும் கேட்க
எப்படி இந்த பாவம் போக்க

ஓஓ.. ஓஓ... ஓஓ...
ஓஓ... ஓஓ... ஓஓ...

என்ன விட்டு போயிட்டாளே
வாழ்வே வெறுப்பாகிப் போச்சே
வாய்மை நெருப்பாகிப் போச்சே

தாயப் போல தூய அன்ப
தந்தவள பறிகொடுத்தேனே
பூமி சுழலாம நிக்கும்
வானம் தீயாக கக்கும்

சிலர் தின்னும் பிணமா
போகுதே இங்கே
என்னோட சாமி
மாசில்லா நிலவே
மனசாட்சி இன்றி
தின்னுமா பூமி

உசிர தின்னு வாழும்
உசிருக்குப் பேரென்ன சொல்லு
உசிருக்குப் பேரென்ன சொல்லு

அந்த உசிருக்குப் பேரென்ன சொல்லு
உசிருக்குப் பேரென்ன சொல்லு

*****