சிங்கப்பூர் சலூன்

Singapore Saloon
நடிப்பு
ஆர்.ஜே. பாலாஜி, மீனாக்ஷி சௌத்ரி, சத்யராஜ், லால், கிஷண் தாஸ், தலைவாசல் விஜய், சின்னி ஜெயந்த், ரோபோ ஷங்கர், ஒய்.ஜி. மகேந்திரன், இமான் அண்ணாச்சி, அரவிந்த்சாமி, லோகேஷ் கனகராஜ், ஜீவா

ஒளிப்பதிவு
எம். சுகுமார்

படத்தொகுப்பு
ஆர்.கே. செல்வா

பின்னணி இசை
ஜாவத் ரியாஸ்

இசை
விவேக் - மெர்வின்

கதை, இயக்கம்
கோகுல்

தயாரிப்பாளர்
ஐசரி கே. கணேஷ்

தயாரிப்பு நிறுவனம்
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்

வெளீயீடு:
25 ஜனவரி 2024

*****

தென்காசியில் ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற கடை வைத்திருக்கும் சாச்சாவைப் (லால்) பார்த்து தானும் ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக விரும்புகிறார் கதிர் (ஆர்ஜே பாலாஜி). தன் லட்சியத்தை அடைய மாமனாரின் (சத்யராஜ்) பணத்தைப் பெற்றும் கடன் வாங்கியும் சென்னையில் சலூன் கடை திறக்கிறார். ஆனால், சில பிரச்சினைகளால் கடை திறக்க முடியாமல் போகிறது. கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கும் பாலாஜி, பிறகு அதிலிருந்து மீண்டு, எப்படி வெற்றி பெறுகிறார் என்பது படத்தின் கதை.

ஹேர் ஸ்டைலிஸ்ட் வேலையை, யாரும் செய்யலாம் என்கிற சமூக ரீதியிலான கருத்தை நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கோகுல்.

ஆர் ஜே பாலாஜிக்கு படம் முழுக்க சீரியஸ் ரோல். அதனை அவர் திறம்பட கையாண்டுள்ளார். மீனாட்சி சௌத்ரி வந்து போகிறார்.

சத்யராஜ், கஞ்சராக வந்து படத்தில் அடிக்கும் லூட்டிகள் கதையோட்டத்துக்கு வலு சேர்க்கின்றன.

லால், ரோபோ சங்கர், ‘தலைவாசல்’ விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் தமக்கான பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சுரேஷ்மேனன், அரவிந்த்சாமி, ஜீவா, லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்கள்.

பாடல்களுக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளார். ஜாவேத் ரியாஸ் பின்னணி இசையமைத்துள்ளார்.

முதல் பாதி படம், சத்யராஜ் நடிப்பில் செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதி குறிக்கோள் ஏதுமின்றி செல்கிறது. மழை வெள்ளத்தில் கட்டிடம் உடைவது, ஒரு டான்ஸ் ரியலிட்டி ஷோ, மக்கள் ஒரு நிலத்தில் இருந்து விரட்டப்பட்டு இன்னொரு இடத்தில் குடி பெயர்வது, ஆலமர கிளிகளின் கதை, சலூனைக் காப்பாற்ற நடக்கும் சோஷியல் மீடியா போராட்டம் என கதை இயல்பாக செல்லாமல் செயற்கையாக அல்லாடுகிறது. இதனால் திரைப்படம் முழு திருப்தி அளிக்கமால் போகிறது.

சிங்கப்பூர் சலூன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

பாடல்கள்
1. வந்தா மலை
படம் : சிங்கப்பூர் சலூன் (2024)
பாடியவர்கள் : அறிவு, விவேக் சிவா, மெர்வின் சாலமன்
இசை : விவேக் - மெர்வின்
பாடலாசிரியர் : அறிவு & விவேக் சிவா

வீடியோ


அவன் சொன்னான் இவன் சொன்னான்
முடியாதுன்னு எவன் சொன்னான்
அவன் சொன்னான் இவன் சொன்னான்
நடக்காதுன்னு எவன் சொன்னான்

அவன் சொன்னான் இவன் சொன்னான்
முடியாதுன்னு எவன் சொன்னான்
அவன் சொன்னான் இவன் சொன்னான்
நடக்காதுன்னு எவன் சொன்னான்

ஹே ஹே
எவன் சொன்னான்
ஆஹ
ஹூ இஸ் தட்
கமான்
ஹ்ம்ம் ஆஹ்
ஹ்ம்ம் ஆஹ்

அவன் சொன்னான் இவன் சொன்னான்
முடியாதுன்னு எவன் சொன்னான்
அவன் சொன்னான் இவன் சொன்னான்
நடக்காதுன்னு எவன் சொன்னான்

இறங்கு இறங்கு வாடா
இப்போ எவன் தடுக்குறான் போடா
நம்ப மனச வச்சிட்டா
நெனப்பு வெச்சதா
நடத்தி காட்டணும் வாடா

தப்பில்ல அது தட்டி தொறக்கணும்
தட்டினா அது எட்டி ஒதைக்கணும்
ஒசந்து நம்ப பட்டம் பறக்கணும்
றெக்கைய விரி வழி விடும் விதி

ஹ்ம்ம் வந்தா மலை ஆ போனா ஹ்ம்ம்
வந்தா மலை போனா ஹ்ம்ம்
ஹ்ம்ம் வந்தா மலை ஆ போனா ஹ்ம்ம்
வந்தா மலை போனா ஹ்ம்ம்

வந்தா மலை மலை மலை
வந்தா மலை மலை மலை
வந்தா மலை மலை மலை

வரப்போகும் காலம்
பறப்போமே
வானை அளப்போமே வா
எல்லை ஏதும் இல்லையே

விழுந்தாலும்
பாதை உடைந்தாலும்
ஓடு வருந்தாதே நீ
மாறும் இங்கு நாளையே

ஏதேதோ காரணங்களால்
தூரமானோம் வேர் இழந்ததால்
ஆனாலும் சோகம் இல்லையே
உனது தாகம்
வாசலாக்கும் வானவில்லை

வரப்போகும் காலம்
பறப்போமே
வானை அளப்போமே வா
எல்லை ஏதும் இல்லையே

விழுந்தாலும்
பாதை உடைந்தாலும்
ஓடு வருந்தாதே நீ
மாறும் இங்கு நாளையே

கனவ தூக்கினு வா
கண்ணுல வெறியை ஊத்தினு வா
அப்பால ஒதுக்கி விட்டவன்லாம்
இப்பால வணக்கம் வைக்கணும்
வருசையா நிக்கணும்

இருட்டு இருட்டுன
நம்பள மிரட்டி ஒதுக்குனா
அவன் நெனப்ப உரசித்தான்
அங்க விளக்க ஏத்தனும்
வெளிச்சம் காட்டணும்

அட்றா புட்றா
அட்றா புட்றா
தர தர தர
தல தெறிக்கனும்

இர்றா தொடுறா
இர்றா தொடுறா
எவன் தடுத்தாலும்
இடம் புடிக்கனும்
அட்றா புட்றா
அட்றா புட்றா
பட்டுனு வெச்சா
பொட்டுன்னு போவான்

உட்டு குடுத்தா
எத்துன்னு போவான்
ஜெய்ச்சி நின்னா
கத்துன்னு போவான்

நாமளும் நெனச்சா
ஆகலாம் பெருசா
நேரம் வந்துருச்சு
பாருங்கடா

நாமளும் நெனச்சா
ஆகலாம் பெருசா
நேரம் வந்துருச்சு
பாருங்கடா

*****