|
|
ரத்னம் ![]() நடிப்பு
விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராமச்சந்திர ராஜு, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, முரளி சர்மா, மோகன் ராமன், லிவிங்ஸ்டன், முத்துக்காளைஒளிப்பதிவு
சுகுமார்படத்தொகுப்பு
டி.எஸ். ஜேஇசை
தேவி ஸ்ரீ பிரசாத்கதை, இயக்கம்
ஹரிதயாரிப்பாளர்
கார்த்திகேயன், சந்தானம், அலங்கார் பாண்டியன்தயாரிப்பு நிறுவனம்
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்டுடியோஸ், இன்வெனியோ ஆரிஜன்வெளீயீடு:
26 ஏப்ரல் 2024***** தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஹரியும் விஷாலும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ரத்னம். இது விஷாலின் 34வது படமாகும். ரத்னம் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யோகி பாபு, சமுத்திரக்கனி, ராமச்சந்திர ராஜு, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, முரளி சர்மா, மோகன் ராமன், லிவிங்ஸ்டன், முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விவேகா இப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். பாடல்கள்
1. உயிரே என் உயிரே நீதானா
படம் : ரத்னம் (2024) பாடியவர்கள் : கபில் கபிலன், ரணினா ரெட்டி இசை : தேவி ஸ்ரீ பிரசாத் பாடலாசிரியர் : விவேகா வீடியோ என் கண்கள் காண்பது மெய்தானா இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என் கண்ணில் ஏன் படவில்லை இறைவன் உன்னை ஒளித்தே வைத்தானா எப்படி எப்படி பார்த்தாலும் இதுபோல் இன்னோர் உறவில்லை கற்பனைக்கெட்டா கனவே இதுதானா எனக்கெனவே கடவுள் உன்னை இங்கே அனுப்பி வைத்தானா ஆ... உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா பெண்: உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என் கண்ணில் ஏன் படவில்லை இறைவன் உன்னை ஒளித்தே வைத்தானா எப்படி எப்படி பார்த்தாலும் இதுபோல் இன்னோர் உறவில்லை கற்பனைக்கெட்டா கனவே இதுதானா எனக்கெனவே கடவுள் உன்னை இங்கே அனுப்பி வைத்தானா ஆ... உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா ***** 2. வாராய் ரத்னம்
படம் : ரத்னம் (2024) பாடியவர் : செண்பகராஜ் இசை : தேவி ஸ்ரீ பிரசாத் பாடலாசிரியர் : விவேகா வீடியோ யுத்தம் தொடங்கி விட சித்தம் பதறி மொத்தம் விலகி விட நித்தம் எதிரி சத்தம் அலற விடு பித்தம் தெளியவே பித்தம் தெளியவே எட்டுத் திசையும் தட்டித் திறந்து விடு முட்டும் பகையை வெட்டிச் சரிய விடு கோட்டம் தணிய கொட்டிக் குமிய விடு முற்றும் அதிரவே முற்றும் அதிரவே ரத்தக் களரி யுத்தம் தொடங்கி விட சித்தம் பதறி மொத்தம் விலகி விட நித்தம் எதிரி சத்தம் அலற விடு பித்தம் தெளியவே எட்டுத் திசையும் தட்டித் திறந்து விடு முட்டும் பகையை வெட்டிச் சரிய விடு கோட்டம் தணிய கொட்டிக் குமிய விடு முற்றும் அதிரவே குழு : தீரா தீரா ஆறாய் ரத்தம் தீரன் நீயே வாராய் ரத்னம் ரத்னம் ***** 3. டோண்ட் ஒர்ரீடா மச்சி
படம் : ரத்னம் (2024) பாடியவர் : தேவி ஸ்ரீ பிரசாத் இசை : தேவி ஸ்ரீ பிரசாத் பாடலாசிரியர் : விவேகா வீடியோ டோண்ட் ஒர்ரீடா மச்சி இத்த விட எத்தனையோ கஷ்டம் பார்த்தாச்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி இத்த விட எத்தனையோ கஷ்டம் பார்த்தாச்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி இத்த விட எத்தனையோ கஷ்டம் பார்த்தாச்சி சின்ன வயசுல தாயை தொலைச்சி கண்ணீரை மொத்தமா கொட்டி தீத்தாச்சி ஒன்வேயில எதுக்கால ஓடுற வண்டி நான் டிசைன் டிசைனா கஷ்டம் முட்டிப் பார்த்தாச்சு உப்பில்லாம சோறு தின்னு நாக்கு செத்து போச்சி ஜிப் இல்லாம ஜீன்ஸ் போட்டேன் பேரு கெட்டு போச்சி டப்பு இல்லாம நான் திரிஞ்சேன் நட்பு விட்டு போச்சி எல்லாம் தாண்டி வாழமுடியும் நானே அதுக்கு சாட்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி இத்த விட எத்தனையோ கஷ்டம் பார்த்தாச்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரி ஏ ஜப்பானுல வீந்துச்சுடா அப்போ ரெண்டு குண்டு சாம்பலான ஊரு இப்ப நிக்கலையா மீண்டு டோண்ட் ஒர்ரி டோண்ட் டோண்ட் டோண்ட் ஒர்ரி அட தெரு விளக்குல படிச்சவங்க பேரில் தெரு உண்டு வைரமுன்னா என்னா அது முன்னால் கரித்துண்டு டோண்ட் ஒர்ரி டோண்ட் டோண்ட் டோண்ட் ஒர்ரி ஏய் சர்ரு புர்ரு பைக்க பாத்து பொண்ணு ஆகும் ஃபிரெண்டு புடிக்கலைனா நிமிஷத்துல பிரேக் அப் ஆவர டிரெண்டு டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி இத்த விட எத்தனையோ கஷ்டம் பார்த்தாச்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சி எச்சப்பய ஈத்தரன்னு இவனப்பத்தி ஏச்சு இஸ்டாவுல ரீல்லு போட்டா எட்டு மில்லியன் போச்சு டோண்ட் ஒர்ரி டோண்ட் டோண்ட் டோண்ட் ஒர்ரி ஆஹா லட்சரூபா கடிகாரம் இருக்குதுன்னு பேச்சு அதே டைம்ம காட்டலயா ஒன்னார் ரூபா வாட்சு டோண்ட் ஒர்ரி டோண்ட் டோண்ட் டோண்ட் ஒர்ரி அட கஷ்டப்பட்டு தாலி கட்டி வாழும் வாழ்க்கை போச்சு லிவிங் டுகெதரா வாழுறது நார்மல் ஆக ஆச்சு டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி இத்த விட எத்தனையோ கஷ்டம் பார்த்தாச்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சி டோண்ட் ஒர்ரி டோண்ட் ஒர்ரீடா மச்சி ***** 4. எதனால எதனால
படம் : ரத்னம் (2024) பாடியவர் : சிந்தூரி விஷால் இசை : தேவி ஸ்ரீ பிரசாத் பாடலாசிரியர் : விவேகா வீடியோ |