பொன் ஒன்று கண்டேன்

Pon Ondru Kanden
நடிப்பு
அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வசந்த் ரவி, தீபா ஷங்கர், குமாரி சச்சு

ஒளிப்பதிவு
ஏ.டி.பகத்

படத்தொகுப்பு
சதிஷ் சூர்யா

இசை
யுவன் சங்கர் ராஜா

திரைக்கதை
ப்ரியா. வி, ரீமா ரவிச்சந்தர்

கதை, இயக்கம்
ப்ரியா. வி

தயாரிப்பாளர்
ஜோதி தேஷ்பாண்டே, யுவன் சங்கர் ராஜா

தயாரிப்பு நிறுவனம்
ஜியோ ஸ்டூடியோஸ், ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ்

வெளீயீடு:
14 ஏப்ரல் 2024

*****

கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் திரிபுர சுந்தரி எனும் மாணவியைச் சந்திக்கின்றனர் சாய் மற்றும் சிவா. இருவரும் அவருடன் நட்பு கொள்ள முயல்கின்றனர். இதனால் இருவருக்குள்ளும் மோதல் பிறக்கிறது. பிரச்சனை தலைமையாசிரியர் மீனா வரை செல்ல, அந்த மாணவி பள்ளியை விட்டே செல்கிறார். இரு மாணவர்களிடையே பகை தொடகிறது.

சில ஆண்டுகள் கழித்து பள்ளி மறுசந்திப்பில் சாய் மற்றும் சிவா இருவரும் சந்திக்கின்றனர். சிவா (அசோக் செல்வன்) சென்னையில் மகப்பேறு மருத்துவராக இருக்கிறார். சாய் (வசந்த் ரவி) கும்பகோணத்தில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட தனது தாய் மீனா (குமாரி சச்சு) உடன் வசித்து வருகிறார்.

சிவாவின் தூண்டுதலால் தாயின் சிகிச்சையை முன்னிட்டு சாய் சென்னைக்கு இடம்பெயர்கிறார்.

சாய் தனது குடியிருப்புக்கு புதிதாக குடிவரும் சாண்டி எனும் சுந்தரியைக் (ஐஸ்வர்யா லட்சுமி) கண்டதும் காதலில் விழுகிறார்.

சாய் - சாண்டி உறவு வளர, சிவா சில யோசனைகள் தருகிறார். ஆனால் அவர்கள் இருவரையும் நேரில் சந்திக்கும் போது அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. சுந்தரிதான் சிவாவின் முன்னாள் மனைவி. இருவருக்கும் திருமணமாகி விவாகரத்து நடந்திருக்கிறது.

இந்நிலையில் சிவாவும் சாயும் தாங்கள் இருவரும் ஒருவரையொருவர் தெரிந்தவர்கள் என்பதை காட்டிக் கொள்ளாமல் சாண்டியின் முன்னால் வேஷம் போடுகின்றனர்.

முன்னாள் மனைவியின் மீது இப்போது காதல் பிறப்பதாக உணர்கிறார் சிவா. சாய், சிவா இருவரும் சாண்டியின் கவனத்தை கவர முயல்கின்றனர். ஆனால் சாண்டிக்கு பின்னால் இருவரும் மோதிக் கொள்கின்றனர்.

இறுதியில் இந்த முக்கோணக் காதலுக்கு என்ன தீர்வு கிடைத்தது என்பது தான் கதை.

ஏ.டி. பகத்தின் ஒளிப்பதிவு திரையில் அழகியலை கொட்டுகிறது. சூர்யா ராஜீவனின் கலை வடிவமைப்பு, மற்றும் சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு நேர்த்தியாக உள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில், ‘சுந்தரி’ பாடல் மட்டுமே மனதை ஈர்க்கிறது.

ப்ரியா.வி, ரீமா ரவிச்சந்தர் உடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தாலும், கதை வசனத்தை அவரே கையாண்டுள்ளார்.

முக்கோணக் காதல் கதை தமிழ் சினிமாவிற்கு புதியதல்ல என்றாலும், அதனை தக்க திரைக்கதை மூலம் கையாண்டு, ரசிகர்களை ஈர்த்திருக்கலாம். ஆனால் ப்ரியா.வி படத்தில் எவ்வித புதுமையையோ, சுவாரஸ்யத்தையோ சேர்க்காமல் நம்மை ஏமாற்றி விட்டார் என்று தான் கூற வேண்டும்.

இத்திரைப்படம் ‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் தமிழ் புத்தாண்டு அன்று நேரடியாக வெளியானது. பின்னர் ‘ஜியோ சினிமா’ தளத்தில் காணக் கிடைக்கிறது.

பாடல்கள்
1. சுந்தரி
படம் : பொன் ஒன்று கண்டேன் (2024)
பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா, சத்யபிரகாஷ், ஜிதின் ராஜ், கரீஷ்மா ரவிச்சந்திரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர் : நிரஞ்சன் பாரதி

வீடியோ


ஆண்: ஜென் மஞ்சள் மேகம் போல
நேரில் வந்த சுந்தரி
நெஞ்சுக்குள் காதல் வீசும்
சாரல் சுந்தரி

பெண்: எண்ணங்கள் மேலே ஏறி
பயணம் செய்யும் சுந்தரா
எல்லைகள் ஏதும் இல்லா
எந்தன் சுந்தரா

ஆண்: கலவரமே உந்தன் யோசனை
காதல் காதல் தான்
பெண்: கருவிடுமே உந்தன் வாசனை
தீண்ட தேடல் தான்

ஆண்: நினைவுகளால் செய்யும் சங்கமம்
தொட்டு தொட்டுச் செல்லுமே
விட்டு விட்டுக் கொல்லுமே
உன் போதை அள்ளுமே

பெண்: கள்வா என்னவா
இல்லை துன்பமே
என்றும் வேண்டுமே
உன் அருகினில் தோன்றும்
அழகழகான அதிசயங்கள்
வித விதமான அனுபவங்கள்

ஆண்: ஹே மின்னல்
உந்தன் தேகம் என்று
கண்டேனே கண்டேன்
பெண் இன்னல் தோன்றும்
மறையாதென்று
சொன்னாயே முன்னே

பெண்: இசை காற்றுக்குள்ளே
உருவம் உண்டு
என்பேனே நானும்
பூ தென்றல் தானே
உன்னை போல
உருமாறி தீண்டும்

ஆண்: நான் நேரே செல்லும் போது
நீ வளைவில் முந்தாதே

பெண்: அட போதும் போதும் அன்பே
நீ கவிதை சிந்தாதே

ஆண்: ஹே தூரத்தில் பார்க்கின்ற
இன்பம் என்னை கொல்லும் போது
பக்கத்தில் பார்க்கின்ற
இன்பம் சொர்கமே

பெண்: சில்லென்று போகின்ற
உள்ளம் ஓட்டாதோ
போதாதோ காயம் இன்றி
மேலும் மாயம் செய்யுதே

பெண்: நித்தம் ரத்தம் முத்தம்
சத்தம் போடும் ரீங்காரமே
என் ஆதி அந்தம் எல்லாம்
உள்ள பூலோகம் நீயே

ஆண்: என் பார்வை வார்த்தை
யாவும் தோன்றும் ஆதாரம் நீயே
நான் ரெக்கை கட்டி பயணம்
போகும் ஆகாயம் நீயே

பெண்: ஒரு தீயும் தேகம் கண்டேன்
என் பக்கம் வாராயோ

ஆண்: அருவி போல பாயும்
பேரன்பை தாராயோ

பெண்: பேரத்தை பார்க்கின்றேன்
தேவை ஏதும் தோன்றிடாமல்
பாரத்தை தீர்த்தாயே
எந்தன் பாதியே

ஆண்: ஓசைகள் இல்லாத
பாஷை கேட்காதோ
நம் ஜீவன் ரெண்டும்
சந்திக்காமல் பேசும் போதிலே

ஆண்: கண்ணோரம் தேனை கொட்டும்
காதல் தேரின் சுந்தரி
நெஞ்சோரம் எண்ணம்
தின்னும் தீனி சுந்தரி

பெண்: ஓ தித்திக்கும் எண்ணத்தாலே
என்னை தீண்டும் சுந்தரா
தேகத்தில் மின்சாரத்தை
தூவும் சுந்தரா

பெண்: கலவரமே உந்தன் யோசனை
காதல் காதல் தான்
கருவிடுமே உந்தன் வாசனை
தீண்ட சாரல் தான்

ஆண்: நினைவுகளால் செய்யும் சங்கமம்
தொட்டு தொட்டுச் செல்லுமே
விட்டு விட்டுக் கொல்லுமே
உன் போதை அள்ளுமே

*****