லப்பர் பந்து

lubberpandhu
நடிப்பு
அட்டக்கத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண், சுவாஸிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், ஜென்சன் திவாகர், காளி வெங்கட், தேவதர்ஷினி, டிஎஸ்கே, கீதா கைலாசம்

இசை
ஷான் ரோல்டன்

பாடல்கள்
மோகன் ராஜன்

ஒளிப்பதிவு
புருஷோத்தமன்

படத்தொகுப்பு
மதன் கணேஷ்

கதை, இயக்கம்
தமிழரசன் பச்சமுத்து

தயாரிப்பாளர்
சுபாஸ்கரன் & அல்லிராஜா

தயாரிப்பு நிறுவனம்
பிரின்ஸ் பிக்சர்ஸ்

வெளீயீடு:
20 செப்டம்பர் 2024

*****

பாடல்கள்
1. சில்லாஞ் சிறுக்கியே
படம் : லப்பர் பந்து (2024)
பாடியவர்கள் : பிரதீப் குமார் & சிவாங்கி கிரிஷ்
இசை : ஷான் ரோல்டன்
பாடலாசிரியர் : மோகன் ராஜன்

வீடியோ


ஆண் : சில்லாஞ் சிறுக்கியே
என் சில்லஞ்சிருக்கியே
சில்லாஞ் சிறுக்கியே
என்ன கொல்லுற அரக்கியே ஏஏஏ

ஆண் : சொல்லாமா என் மனச
புழிஞ்சிபுட்டியே
உள்ளார ஓடி வந்து
ஒரஞ்சிபுட்டியே
சொல்லமா என் மனச
புழிஞ்சிபுட்டியே
உள்ளார ஓடி வந்து
ஒரஞ்சிபுட்டியே

ஆண் : கண்ணால
கண்ணால மோதி
என் முன்னால போற
பந்தாவா என்ன நீ
பந்தாடா வார
என் உசிரெடுத்து
இப்போ தாரேன்
தேதி சொல்லேன்டி

ஆண் : சில்லாஞ் சிறுக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ் சிறுக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
சில்லாஞ் சிறுக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ் சிறுக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே

ஆண் : வச்சக்கண்ணு பத்தாமலே
உன்ன ரசிக்கிறேன்
தெள்ளழக தாங்கமாலே
துண்டா விழுகுறேன்
ஊருப்பட்ட ஆசையெல்லாம்
உள்ள மொனகுறேன்
உன் ஊசி குத்தும் பார்வையிலே
ரொம்ப இளைக்குறேன்

ஆண் : மல்லாட்ட கண்ணால
தள்ளாட்டம் போடுறேன்
அம்பையரு இல்லமா
ஆல் அவுட் ஆகுறேன்
ஒரு பந்தாட்டம் உன் பின்ன
சுத்தி திரிஞ்சேன்
உன் பொல்லாத அன்போட
வாழத்தவிச்சேன்

ஆண் : என் ஆசைகள
கொட்டி வைக்க
வானம் போதல
அத வார்த்தைகளா
சுருக்கி சொல்ல
நேரம் போதல

ஆண் : சில்லாஞ் சிறுக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ் சிறுக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
சில்லாஞ் சிறுக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ் சிறுக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே

பெண் : உன்ன சுத்தி
உன்ன சுத்தி
எண்ணம் சொழலுது

பெண் : உள்ளுக்குள்ள
சொந்த புத்தி
என்ன மறக்குது

பெண் : உன்ன சுத்தி
உன்ன சுத்தி
எண்ணம் சொழலுது
உள்ளுக்குள்ள
சொந்த புத்தி
என்ன மறக்குது
மனசெரங்கி எப்பொம் வர
ஏக்கம் எகிறுது
கட்டிவெச்ச கோட்டையெல்லாம்
பூட்டி கெடக்குது

பெண் : என்னோட இருக்குற
எனக்குனு இருக்கியா
பக்கத்துல நடக்குற
பாசமா இருக்கியா

பெண் : என் சொல்லாத
பொல்லாப்பா காட்ட நெனச்சு
நீ சொல்லாத நேசத்த
வாங்க தவிச்சேன்

பெண் : நான் தேகிவச்ச
தேவையெல்லாம்
உனக்கு புரியல
அத கோத்து சொல்ல
வார்த்தை எதும்
எனக்கு தெரியல

ஆண் : சொல்லமா என் மனச
புழிஞ்சிபுட்டியே
உள்ளார ஓடி வந்து
ஒரஞ்சிபுட்டியே
கண்ணால மோதி
என் முன்னால போற
பந்தாவா என்ன
நீ பந்தாட வார

ஆண் : என் உசுரெடுத்து
இப்போ தாரேன்
தேதி சொல்லேன்டி

ஆண் : சில்லாஞ் சிறுக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ் சிறுக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
சில்லாஞ் சிறுக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ் சிறுக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே

*****