|
|
J.பேபி நடிப்பு
ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன், கவிதா பாரதி, ஏழுமலை, ஜெய மூர்த்திஒளிப்பதிவு
ஜெயந்த் சேது மாதவன்படத்தொகுப்பு
சண்முகம் வேலுசாமிஇசை
டோனி ப்ரிட்டோகதை, இயக்கம்
சுரேஷ் மாரிதயாரிப்பாளர்கள்
பா. ரஞ்சித், அபயானந்த் சிங், பியூஷ் சிங், சௌரவ் குப்தா, அதிதி ஆனந்த், அசுவினி சௌத்ரிதயாரிப்பு நிறுவனம்
விஸ்டாஸ் மீடியா, நீலம் தயாரிப்பு நிறுவனம்வெளீயீடு:
8 மார்ச் 2024***** சென்னையின் பின்தங்கிய பகுதியொன்றில் வசிக்கும் அண்ணன் செந்திலும் (மாறன்) தம்பி சங்கரும் (தினேஷ்) பேசிக் கொள்வதில்லை. காணாமல் போன தங்களின் தாய் ஜே. பேபியை (ஊர்வசி) அழைத்து வர, இருவரும் கொல்கத்தாவுக்கு செல்கிறார்கள். அவர்கள் இருவரும் எதனால் பேசிக் கொள்வதில்லை, ஜே.பேபி எதற்காக எவ்வாறு கொல்கத்தா போனார், சகோதரர்களின் கொல்கத்தா பயணம் மூலம் அவர்கள் எதை கற்றுக் கொண்டார்கள் என்பது தான் கதை. உண்மையாக வாழ்ந்து மறைந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி. நிஜ வாழ்க்கையில், கொல்கத்தாவில் ஜே.பேபியின் மகன்களுக்கு தன் வேலையை விட்டுவிட்டு உதவிய மூர்த்தி என்கிற ராணுவ ஊழியரையே, அதே பெயருடன் நடிக்க வைத்திருப்பது வியத்தகு முயற்சி. செந்திலாக நடித்துள்ள மாறன் மதுப்பழக்கம் குடிநோயாக இருப்பதையும் அதன் அனத்தல்களையும் தனது நடிப்பில் நேர்த்தியாக கொண்டு வந்துள்ளார். அட்டக்கத்தி தினேஷ் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்களில் இது மிகச் சிறந்தது என்று கூறலாம். வயதுக்கேற்ற வாழ்நாள் கதாபாத்திரம் வாழ்ந்திருக்கிறார் ஊர்வசி என்று கூறினால் அது மிகையில்லை. ‘நெடுமரம் தொலைந்ததே’, ‘யார் பாடலை’ ஆகிய பாடல்கள் மூலம் இசையமைப்பாளர் டோனி ப்ரிட்டோ தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜெயந்த் சேதுமாதவனின் ஒளிப்பதிவு திரைக்கதையை வருடிச் செல்கிறது. 5 பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி முடிக்கும் வேளையில் கணவர் இறந்து விட, அதன் பின் ஒரு பெண் தன் வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களை எதார்த்தாமாக எடுத்துக் கூறிய இப்படம் தமிழ் சினிமாவின் வித்யாசமான படங்களில் ஒன்றாகும். பாடல்கள்
1. நெடுமரம் தொலைந்ததே
படம் : J.பேபி (2024) பாடியவர்கள் : பிரதீப் குமார், அன்னி ஜே இசை : டோனி பிரிட்டோ பாடலாசிரியர் : உமாதேவி வீடியோ ஹாஹாஹா ஹாஹாஹா ஆண் : நெடுமரம் தொலைந்ததே நிழல் இங்கு மறைந்ததே கூடோடு குயில் வீழந்ததே ஆண் : பசியினை உணர்ந்தும் மடியில் பால் சுரந்திடும் தாய்மைக்கு ஈடேது இங்கே ஆண் : ஊரும் தண்ணீர் கூட ஒரு நேரம் காயும் உன் பாசம் தீராதம்மா ஆண் : காணும் முகம் யாவும் உன் சாயல் போலே கானல் காட்சி ஏனோ ஆண் : நெடுமரம் தொலைந்ததே நிழல் இங்கு மறைந்ததே கூடோடு குயில் வீழந்ததே ஆண் : பசியினை உணர்ந்தும் மடியில் பால் சுரந்திடும் தாய்மைக்கு ஈடேது இங்கே பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் : பிள்ளை கூவத்தில் கள்ளம் சேர்ந்ததா கண்கள் தாண்டியே கங்கை போனதா ஆண் : உன் வாழ்த்து இல்லாமல் நான் ஆகாயம் நான் போனாலுமே என் தோகை வான் ஏறுமா ஆண் : உன் கால்கள் இல்லாத ஓர் பொன் வீட்டில் வாழ்ந்தாலுமே என் வாழ்வு வாழ்வாகுமா ஆண் : சுற்றும் பூமியே நீ ஊட்டும் அன்பில் தானம்மா எந்தன் வாழ்க்கையே நீ போட்ட பிச்சை தானம்மா ஆண் : நெஞ்சனைச்சி கெஞ்சிடனும் எங்கிருக்க என் அம்மா ஆண் : விழி உனை இழந்ததும் விளக்குகள் அணைந்ததே இருள் வந்து எனை சூழ்ந்ததே ஆண் : பிழைகளை பொறுத்திடும் வலிகளை துடைத்திடும் தாயே உன் நிழல் வேண்டுமே குழு : ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ***** 2. இதத்தானே எதிர் பார்த்தேன்
படம் : J.பேபி (2024) பாடியவர் : ஸ்வேத்தா மோகன் இசை : டோனி பிரிட்டோ பாடலாசிரியர் : விவேக் வீடியோ அம்மா ஹே... அம்மா... பெண் : இதத்தானே எதிர் பார்த்தேன் மனசோடு அடை காத்தேன் பெண் : தினந்தோறும் காத்தோட குயிலாக திரிஞ்சேனே அடஞ்சாச்சு என் கூட்டையே பெண் : திச தேடி அலையோட படகோட அலஞ்சேனே கிடச்சாச்சே என் வாழ்க்கையே பெண் : நீ வாழ நான் பாக்கனும் வாயாற நான் வாழ்த்தனும் எனக்காக வேண்டாம உனக்காக வரம் கேப்பேனே அம்மா... பெண் : அழுதாலும் விழ வேணும் என் மேல தான் தொடச்சாலும் என் சேல தான் பெண் : என் தோளில் உன் கைகள் பூமால தான் அடையாளம் உன்னால தான் பெண் : கையோடு கைகோர்த்து ஊர்கோலமாய் சிறு பிள்ளை ஆவோம் வா பெண் : மனம் விட்டு நான் பேச நீ தேற்றினாய் இருப்பேனே சந்தோஷமா பெண் : ஓ... கடிகாரம் பாக்காமா உன் நேரம் எனக்காகுமா ஓ... நான் செய்த நன்மைகள் உன் மேல மழையாகுமா பெண் : என் காலம் பூரா நீ கூட வேணும் என் ஆயுள் கூட நீ வாழ வேணும் நான் பெண் : பார் உயிரெல்லாம் வெவ்வேறு தான் அன்பென்ற ஒரு நூலுதான் கதை மாலையாய் பெண் : எனக்குள்ள உனை பாத்து உனக்குள்ள எனை பாப்பதேன் அம்மா பெண் : ஓ... கடிகாரம் பாக்காமா உன் நேரம் எனக்காகுமா ஓ... நான் செய்த நன்மைகள் உன் மேல மழையாகுமா ***** 3. யார் பாடலை
படம் : J.பேபி (2024) பாடியவர் : கே.எஸ். சித்ரா இசை : டோனி பிரிட்டோ பாடலாசிரியர் : கபிலன் வீடியோ ஆஆஆ ஆஆஆ யார் பாடலை யார் பாட தோணும் தாய் பாடலை நான் பாட வேணும் உன் பாசமோ கருணை பாய்மரம் உன் பாதமே கடவுள் கோபுரம் யார் பாடலை யார் பாடத் தோணும் அம்மாவின் மூச்சில் வாழாத பிள்ளை அகிலத்தில் யாரும் இல்லை சேயாக பாதி தாயாக பாதி நீயாக நீயே இல்லை காச சேத்து முந்தானைக்குள் வைத்து முடி போட்டு வாழாதவள் கையில் உள்ள கை ரேகை கேட்டாலும் கொடுக்கின்ற ஆளானவள் சாலையோரம் வாழும் யார்க்கும் சோறு ஊட்டும் தாயானவள் கண்ணை மூடி தெய்வம் பார்க்கும் கற்பூர தீயானவள் கடமை மறந்து போகின்ற செல்வங்களே தனியாய் தவிக்கும் உன் தாயின் உள்ளங்களே ஆஆஆ ஆஆஆ ஆராரிராரோ ஆராரிராரோ கண்ணே நீ கண்ணுறங்கு ஆஆஆ ஆஆஆ ஆராரிராரோ ஆராரிராரோ கண்ணே நீ கண்ணுறங்கு யார் பாடலை யார் பாட தோணும் தாய் பாடலை தாலாட்டும் வானம் ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பூமி பந்து எனை விட்டு உருண்டோடி எங்கேயோ போனதென்ன நேற்று தந்த தாய் பாலையெல்லாம் கண்ணீராய் ஆனதென்ன காற்று தெய்வம் ரெண்டும் ரெண்டு கண்ணுக்கு அறியாதது தாயின் துன்பம் என்றும் என்றும் யாருக்கு தெரியாதது உறவு இருந்தும் எனக்கேதும் நாதி இல்லை திசைகள் இருந்தும் நான் போக பாதை இல்லை ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ கண்ணே நீ கண்ணுறங்கு ஆஆஆ ஆஆஆ கண்ணே நீ கண்ணுறங்கு யார் பாடலை யார் பாட தோணும் என் பாடலை நீ பாட வேணும் தாய் ஆனது அதுதான் பாவமா நான் வாழ்வது இனியும் நியாயமா ஆஆஆ ஆஆஆ ஆராரிராரோ ஆராரிராரோ கண்ணே நீ கண்ணுறங்கு ஆஆஆ ஆஆஆ ஆராரிராரோ ஆராரிராரோ கண்ணே நீ கண்ணுறங்கு ***** |