|
|
கருடன் நடிப்பு
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரோஷிணி, ஷிவிதா, சமுத்திரக்கனி, ஆர்.வி. உதயகுமார், ரேவதி ஷர்மா, மைம் கோபி, வடிவுக்கரசி, பிரிகிடா சாகாஒளிப்பதிவு
ஆர்தர் எ வில்சன்படத்தொகுப்பு
பிரதீப் ஈ ராகவ்இசை
யுவன் சங்கர் ராஜாகதை
வெற்றிமாறன்திரைக்கதை, இயக்கம்
துரை செந்தில்குமார்தயாரிப்பாளர்
வெற்றிமாறன்தயாரிப்பு நிறுவனம்
கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ்வெளீயீடு:
31 மே 2024***** நடிகர் சூரியின் நடிப்பில் இந்த ஆண்டு (2024) மே 31ம் தேதி வெளியான திரைப்படம் கருடன். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தேனி மாவட்ட வட்டாரத்தில் நிகழும் கதையாக உருவாகியுள்ளது இப்படம். விடுதலை படத்திற்கு பிறகு காமெடியன் என்பதைத் தாண்டி இப்போது கருடன் திரைப்படன் மூலம் நாயகனாக ஸ்கோர் செய்து வருகிறார் சூரி. வெற்றிமாறனின் எழுத்தில், துரை செந்தில்குமார் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் சூரியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்க, இவர்களுடன் உன்னி முகுந்தன், சமுத்திரகனி உட்பட பலரும் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மாபெரும் வெற்றிப் படமாக உருவெடுத்துள்ளது. பாடல்கள்
1. பஞ்சவர்ண கிளியே
படம் : கருடன் (2024) பாடியவர் : யுவன் சங்கர் ராஜா இசை : யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர் : சிநேகன் வீடியோ என் காதல் கத பேச உன் கூட உன் கூட எத வச்சி நான் பேச மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்த தவிக்கும் உன்ன பாத்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும் ஒத்த சொல்ல நீயும் சொல்ல கேட்க நினைக்கும் மனம் உன்ன கண்டா மட்டும் ஏனோ பறபறக்கும் பஞ்சாரத்தில் மாட்டிக்கிட்ட கோழிக்குஞ்சா கிடக்குறனே பஞ்சவர்ண கிளியே உன்ன நெஞ்சுக்குள்ள சுமக்குறனே சுண்ணம் ஒன்னு இல்லயேனு ஏங்கி தவிச்சேன் உன்ன கண்ட பின்னால தூங்கி முழிச்சேன் என்னுடைய பேர நீயும் சொல்ல ரசிச்சேன் உங்கிட்ட மட்டும்தான்டி மெய்யா சிரிச்சேன் உன்னுடைய மனசுக்குள்ள இருப்பத படிக்க தெரியலியே சூசகமா பேசுற வாசகம் எதுவும் புரியலியே தரையில் விழுந்த மீனாட்டம் தவிக்கிறேன் நானும் உன் கிட்ட ஓங்கி அறஞ்சி சொல்லாமா எதுக்குடி என்ன நீ விட்ட யாரோட யாரோட என் காதல் கத பேச உன்கூட உன்கூட எத வச்சி நான் பேச ***** |