கேப்டன் மில்லர்

Captain Miller
நடிப்பு
தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார், சுதீப் கிஷன், அதிதி பாலன், ஜான் கொக்கன்

ஒளிப்பதிவு
சித்தார்த்தா நுனி

படத்தொகுப்பு
நாகூரன் ராமச்சந்திரன்

இசை
ஜி. வி. பிரகாஷ் குமார்

திரைக்கதை
அருண் மாதேஸ்வரன், மதன் கார்கி

இயக்கம்
அருண் மாதேஸ்வரன்

தயாரிப்பாளர்
செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்

தயாரிப்பு நிறுவனம்
சத்ய ஜோதி பிலிம்ஸ்

வெளீயீடு:
12 ஜனவரி 2024

*****

பாடல்கள்
1. கோரனாரு
படம் : கேப்டன் மில்லர் (2024)
பாடியவர்கள் : தேவா, சந்தோஷ் ஹரிஹரன், அலெக்ஸாண்டர் பாபு
இசை : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : உமா தேவி

வீடியோ


மத்தாள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

எட்டூரு எல்லை தாண்டி
கோரனாரு
எக்காலம் தட்டினாரு
கோரனாரு

கொள்ளையாடும் கூட்டத்த
கொள்ளும் பகை கூட்டத்த
கொடல உருவி மாலையா போட்டு
காவ காத்து நின்னாரு

மத்தாள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

எட்டூரு எல்லை தாண்டி
கோரனாரு
எக்காலம் தட்டினாரு
கோரனாரு

கோட்டை கோபுரம் தந்தாலும்
கோடி சுகத்த தந்தாலும்
சேனை காக்கும் வீரக் கோரன்
உன்ன போல வேறாரு

கூட்ட கலைக்கும் கூட்டங்கள்
சூழ்ச்சி செய்து தான் வந்தாலும்
ஆழிப்பேரலை போலெழுந்து
ஆடும் தாண்டவ கோன் யாரு

கோரனாரு
எங்கள் கோரனாரு

மத்தாள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

கொள்ளையாடும் கூட்டத்த
கொள்ளும் பகை கூட்டத்த
கொடல உருவி மாலையா போட்டு
காவ காத்து நின்னாரு

மத்தாள பாற மேல
கோரனாரு
மாதங்கமா நின்னாரு
கோரனாரு

எட்டூறு எல்லை தாண்டி
கோரனாரு
எக்காலம் தட்டினாரு
கோரனாரு

*****

2. உன் ஒளியிலே
படம் : கேப்டன் மில்லர் (2024)
பாடியவர் : சீன் ரோல்டன்
இசை : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : கேபர் வாசுகி

வீடியோ


விதி சிரிக்குதா அழுகுதா தெரியல
கதி நன்றியா குற்றமா புரியல
நடின்னு நான் என்னைய தேத்துறேன்
உண்மைய மறைச்சு

உன் ஒளியிலே
என் நிழல் விரியுதே
உன் வெளிச்சத்தில்
என் இருள் புரியுதே

சில கோணத்தில்
சதி ஆகுதே
நீதி விதி போல்
விளையாடுதே

சில நேரத்தில்
பழியாகுதே
இதயம் கிழிச்சி
விலை பேசுதே

உன் கருணையில்
என் வெறி தெரியுதே
உன் அருகிலே
ஆறுதல் இயலுதே

ஆறாத காயங்கள்
கரம் பூட்டுதே
மாறாத சாயங்கள்
மனம் ஏற்குதே

போகாத தூரங்கள்
என்னை ஈர்க்குதே
துண்டித்த காத்தாடி நான்

உன் ஒளியிலே
என் நிழல் விரியுதே
உன் வெளிச்சத்திலே
என் இருள் புரியுதே

*****

3. கொம்பாரி வேட்ட புலி பாரு
படம் : கேப்டன் மில்லர் (2024)
பாடியவர் : தீ
இசை : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : உமா தேவி

வீடியோ


கொம்பாரி வேட்ட புலி பாரு
அது கூத்தாட போன கதை கேளு
வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு
அட ஆட்டுக்கு ஏது புலி வாலு

தினம் நெல்லறுக்கும் ஆச்சி
பசி உண்ணும் கதை போல
அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள
பதுங்கிப் போனான்

ஒரு பேரழக பாக்க
அவன் கேட்டதெல்லாம் நோக்க
அவன் தோலா போன மண்ணுக்குள்ள
தயங்கி போனான்

ஒய்யார தூண்டிலொன்னு காணு
வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு
துப்பாக்கி முன்ன நிக்கும் கோணு
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு

அட ஒட்டட தட்ட போனா
அது கொத்துற சர்ப மாச்சு
ஏன் ஒத்தடம் குத்த பச்சல வச்சா
குத்துற நஞ்சாச்சு
ஏன் சக்கர நக்க நிக்கிற
வண்டு சட்டினி ஆயாச்சு

புலி தொடும் காடிப்ப
ஒரு இடுகாடாச்சு
புது வரலாற புயலாறு
குறி வச்சாச்சு

கொம்பாரி வேட்ட புலி பாரு
அது கூத்தாட போன கதை கேளு
வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு

வெளக்கு ஒளிய பாக்க
அவன் வளஞ்சு ஒளிஞ்சு போனான்
ஒரு வெளிச்ச நிலவு
பரிச கொடுக்க இறங்கி வந்தாளே

இடுப்பு அசையும் தேரு
தங்கம் தெளிச்ச கலச மாறு
அவ சிரிச்சா வெளிச்சம்
சீமை கடந்தும் கெடச்சுருக்காமே
வனப்புல பேயா நின்னா
மனசுல ஆத்தா தானா
உசுருல ஒரழகி சாராய
நீராக சேந்துப்புட்ட
கொம்பாரி வேட்ட புலி பாரு
அது கூத்தாட போன கதை கேளு

தினம் நெல்லறுக்கும் ஆச்சி
பசி உன்னும் கதை போல
அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள
பதுங்கி போனான்

ஒய்யார தூண்டிலொன்னு காணு
வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு
துப்பாக்கி முன்ன நிக்கும் கோணு
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு

*****

4. அடங்குற நிலை இல்ல
படம் : கேப்டன் மில்லர் (2024)
பாடியவர் : அருண்ராஜா காமராஜ்
இசை : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : அருண்ராஜா காமராஜ்

வீடியோ


அடங்குற நிலை இல்ல
அடக்கி வைக்க உரம் இல்ல
எதுக்குற மனசோட
எரிச்சு விடு பார்வையால

அடங்குற நிலை இல்ல
அடக்கி வைக்க உரம் இல்ல
எதுக்குற மனசோட
எரிச்சு விடு பார்வையால

தொடங்குற வரும்காலம்
தெரிஞ்சுகிட்டும் உன் பேர
தயங்குற மனசு எல்லாம்
தாண்டி வரும் நீ கூற

பயணமும் முடியாது
பயந்த மனம் சிரிக்காது
தடைகள உடைக்காம
தக்க பாதை கெடைக்காது

முடிஞ்சது முடிஞ்சு போச்சு
முக்தி எல்லாம் அடஞ்சு போச்சு
எனக்கு ஒரு எதிரி இங்க
என்ன தவிர வேறாரு

வஞ்சிக்கிற மனிதர்களை
கெஞ்ச விடும் தனியனடா
சிந்தனையில் கடவுளடா
செயல்கள் அனைத்தும் சாத்தான்டா

அஞ்சுகிற ஆளு இல்லடா
அரவம் அலறும் தீதான்டா
பஞ்சணையில் பதுங்கியவன்
விதியை முடிக்கும் நீதியடா

எட்டு திசை முழக்கமடா
இறைவன் குணமே வழக்கமடா
கொள்ளைகார கொடுமைகளை
கொள்ளி போடும் அரக்கனடா

எட்டு திசை முழக்கமடா
இறைவன் குணமே வழக்கமடா
கொள்ளைகார கொடுமைகளை
கொள்ளி போடும் அசுரனடா

*****

5. கில்லர் கில்லர்
படம் : கேப்டன் மில்லர் (2024)
பாடியவர் : தனுஷ்
இசை : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : கேபர் வாசுகி

வீடியோ


யூ பிலீவ் டெவில்?
ஐ ஆம் த டெவில்
அண்ட் யூ வில் கால் மீ
கேப்டன் மில்லர்

ஓ ஹெர்ட் யூ வாண்ட் தி பைட்
வெல், ஹியர் இஸ் எ வார்
ஐ ஹேவ் டேஸ்டெட் ஸ்டீல் பிஃபோர்
ஐ ஹேவ் தி ஸ்கார்ஸ்

யூ வில் லேர்ன் டூ ஃபியர் மை நேம்
யுவர் ஐஸ் வில் நெவர் சீ தி சேம்
யூ கேனாட் வின் வைல் ஐஆம் அலைவ்
டுடே ஈஸ் நாட் மை டைம் டு டை
இட் ஈஸ் யுவர்ஸ்

நீ தனியா வந்தா
தலை மட்டும் உருளும்
நீ படையாய் வந்தா
சவ மலை குவியும்

நீ நரியா பதுங்க
ரோமம் கிழியும்
நீ எருவா பாய
கொம்பு முறியும்

நீ ஓடி வந்தா
முட்டி செதறும்
கூடி வந்தா
பல்லு உதிரும்

சாடி வந்தா
சங்கு பிதுங்கும்
பறந்து வந்தா
எலும்பு ஒடையும்

நீ தீயா வந்தா
அலையா அடிப்பேன்
புயலா வந்தா
மலையா தடுப்பேன்

காடா வளர்ந்தா
இடியாய் எரிப்பேன்
ஆழ் மனசுல
அழிவ வெதைப்பேன்

ஐ எம் த டெவில்
கில்லர் கில்லர்
கேப்டன் மில்லர்
கில்லர் கில்லர்
கேப்டன் மில்லர்
கில்லர் கில்லர்
கேப்டன் மில்லர்
கில்லர் கில்லர்
கேப்டன் மில்லர்

அண்ட் யூ வில் கால் மீ
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
ஹேர்ட் யூ வான்ன ஃபைட்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
பிரிங்ஸ் யூ வார் டுநைட்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
ஹேஸ் எ ஹார்ட் ஆஃப் ஸ்டோன்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
கான்ன க்ரஷ் யுவர் போன்ஸ்

நீ தனியா வந்தா
தலை மட்டும் உருளும்
நீ படையாய் வந்தா
சவ மலை குவியும்

நீ நரியா பதுங்க
ரோமம் கிழியும்
நீ எருவா பாய
கொம்பு முறியும்

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
ஹேர்ட் யூ வான்ன ஃபைட்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
பிரிங்ஸ் யூ வார் டுநைட்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
ஹேஸ் எ ஹார்ட் ஆஃப் ஸ்டோன்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
கான்ன க்ரஷ் யுவர் போன்ஸ்

ஐ ஆம் தி டெவில்
அண்ட் யூ வில் கால் மீ

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

*****