அரண்மனை 4

Aranmanai 4
நடிப்பு
சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகிபாபு, விடிவி கணேஷ், சேஷூ, மொட்டை ராஜேந்திரன்

ஒளிப்பதிவு
கிருஷ்ணமூர்த்தி

படத்தொகுப்பு
ஃபென்னி ஆலிவர்

இசை
ஹிப்ஹாப் தமிழா

கதை, இயக்கம்
சுந்தர். சி

தயாரிப்பாளர்
குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ். அருண் குமார்

தயாரிப்பு நிறுவனம்
அவ்னி சினிமேக்ஸ், பென்ஸ் மீடியா (பி) லிமிடெட்

வெளீயீடு:
3 மே 2024

*****

அரண்மனை 1, 2, 3 வரிசையில் தற்போது இயக்குநர் சுந்தர்.சி. அவர்களின் இயக்கம் மற்றும் நடிப்பில் அரண்மனை 4 படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகிபாபு, விடிவி கணேஷ், சேஷூ, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நேர்மையான வழக்கறிஞர் சரவணன் (சுந்தர்.சி) தன்னுடைய அத்தையுடன் (கோவை சரளா) வாழ்ந்து வருகிறார். அவருடைய தங்கை செல்வி (தமன்னா) தற்கொலை செய்து கொண்டதாக சரவணனுக்கு தகவல் வருகிறது. செல்வியின் கணவரும் நெஞ்சுவலியால் இறந்து போனதாகவும் கூறப்படுகிறது. சரவணன், உடனே தனது அத்தையை அழைத்துக்கொண்டு, தங்கை தங்கியிருந்த அரண்மனைக்குச் செல்கிறார். தங்கை செல்வியும், அவரது கணவரும் இறந்தது எப்படி? அந்த வீட்டில் பறிபோக இருந்த ஓர் உயிரை சரவணன் எப்படி காப்பாற்றினார் என்பது படத்தின் கதை.

கொலை, மர்மம், அமானுஷ்யம் என இடைவேளைக்கு முன்பான திரைக்கதை சற்று வேகமாகச் செல்கிறது.

தங்கைப் பாசம், தாய்ப் பாசம், என பார்த்து பழகிய கதைக்களம் என்பதால் காட்சிகளை எளிதில் யூகித்து விடலாம்.

படத்தின் இறுதியில் வரும் சிம்ரன் குஷ்புவின் ‘அம்மன்’ பாடல் நடனம் திரையரங்கை ஆர்ப்பரிக்க வைக்கிறது.

கோவை சரளா, யோகிபாபு, சேஷூ, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் தமது பங்கை ஏற்று நடித்துள்ளனர். ஆனாலும் நகைச்சுவையின் தாக்கம் சற்றே குறைவு தான்.

ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை அருமை. இரண்டு பாடல்கள் பரவாயில்லை ரகம்.

இரவுக் காட்சிகளும், திருவிழாக் காட்சியும் கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவில் நேர்த்தியாக உள்ளன.

படத்தொகுப்பின் மூலம் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார் ஃபென்னி ஆலிவர்.

முந்தைய பாகங்களை விட இந்தப் படத்தில் ஹாரர் காட்சிகளை சிறப்பாக எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர் சி.

மலையாளப் படங்களும் , ரீரிலீஸ் படங்களும் தியேட்டர்களை ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த விடுமுறைக்கால சூழலில், பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் வெளியாகி இருக்கிறது இப்படம்.

பாடல்கள்
1. ஜோ ஜோ ஜோ
படம் : அரண்மனை 4 (2024)
பாடியவர் : மீனாக்ஷி இளையராஜா
இசை : ஹிப்ஹாப் தமிழா
பாடலாசிரியர் : கோ சேஷா

வீடியோ


நித்தம் புது தேசம் அழைக்கவே
தங்கமே கண்ணுறங்கு

புத்தும் புது நேசம் தழைக்கவே
வைரமே கண்ணுறங்கு

குத்தங் குறை இல்லா என் உறவே
ரத்தினமே கண்ணுறங்கு

பத்தமடை பாயில் பொன் எழிலே
பத்திரமாய் கண்ணுறங்கு

ஜோ ஜோ ஜோ
மைவிழியே
ஜோ ஜோ ஜோ
மான்விழியே
ஜோ ஜோ ஜோ
வான்மழையே
ஜோ ஜோ ஜோ
ஜோ ஜோ ஜோ
ஜோ ஜோ ஜோ

அந்த ஆதவன் தந்த
நன்கொடை நீயோ
நான் யாரென்று சொல்லும்
ஓர் விரல் நீயோ
என் வாழ்வெனும் வேரில்
வான் மழை நீயோ
சிறு புன்னகை ஏந்திய
பூஞ்சிலை நீயோ

அந்த வானை இருக்கும் வரையில்
உன் வெளியா நான் இருப்பேன்
உன்னை அல்லும் பகலும் காத்திடவே
கருமாரியா நான் இருப்பேன்

உன் சிரிப்பினிலே மெய் மறப்பேனே
சொர்ணமே என் சொர்ணமே
உன் கண்ணீரை தினம் துடைப்பேனே
சர்வமே என் சர்வமே

உன் உச்சிதனை முகர்ந்து
உனக்கெனவே இருப்பேன்
என் உயிர் அது போனாலும்
உன் அருகினில் தான் கிடப்பேன்

ஜோ ஜோ ஜோ
மை விழியே
ஜோ ஜோ ஜோ
மான் விழியே
ஜோ ஜோ ஜோ
வான் மழையே

ஜோ ஜோ ஜோ
முத்தெழிலே
மை விழியே
ஜோ ஜோ ஜோ
மான் விழியே
கண்ணுறங்கு
ஜோ ஜோ ஜோ
வான் மழையே
பொன் எழிலே
கண்ணுறங்கு
கண்ணுறங்கு
கண்ணுறங்கு

*****

2. அச்சோ அச்சோ
படம் : அரண்மனை 4 (2024)
பாடியவர் : கரிஷ்மா ரவிச்சந்திரன்
இசை : ஹிப்ஹாப் தமிழா
பாடலாசிரியர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த்

வீடியோ


பெண் : அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ

ஆண் : வெச்சுக்க வெச்சுக்க

பெண் : அனபெல்லா கண்சாடை
எல்லாம் நம்ம பாரின் பேய்
அன்பே உந்தன் நம்பர சொல்லி
தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

பெண் : ஆசைக்கு நா ஆடிட்டேன்
உங்க இசை எல்லாம் டுயூன் போட்டேன்
காபி ஷாப்பே தேவை இல்லை
கில்லாடிக்கு பேட் எண்டே

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அச்சோ மச்சோ மச்சச்சோ
உச்சமுள்ள மச்சம் எல்லாம்
பத்திக்கிச்சோ

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அக்கம் பக்கம் மச்சச்சோ
ஆவி இந்த பாவிக்கிட்ட
சிக்கிக்கிச்சோ

குழு : அச்சச்சோ அச்சச்சோ
சிக்கிக்கிச்சோ

பெண் : ஏ அக்கம் பக்கம் யாரும் இல்ல
தன்னந்தனி காட்டுக்குள்ள

பெண் : வெக்கம் வெக்கம் ஏதும் இல்ல
வெட்டிப் பேச்சு எதுவும் தேவையும் இல்ல

பெண் : ஏ கொல கொலயா முந்தரிக்கா
திரும்பவும் பேய் வந்திருச்சா
காலையில கண் முழிச்சு
காபி ஒன்னு தந்துருச்சா

பெண் : ஏ கொல கொலயா முந்தரிக்கா
தூக்கம் போதும் எந்திரிக்கா
பால் இல்லா மேட்ச் இருக்கு
காட்ச்சு புடிக்க வந்திருக்கா

பெண் : வா நா யாருக்கு வா நா பேயுக்கு
டார்க்கா காட்டுக்குள்ள லாக்ல போயிடுது
ஆட்டம் கூடுது அட்ரனலின் ஏறுது
அசால்ட்டா ஹார்ட்குள்ள ஆட்டம்பாம் போடுது

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அச்சோ மச்சோ மச்சச்சோ
உச்சமுள்ள மச்சம் எல்லாம்
பத்திக்கிச்சோ

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அக்கம் பக்கம் மச்சச்சோ
ஆவி இந்த பாவிக்கிட்ட
சிக்கிக்கிச்சோ

பெண் : அனபெல்லா கண்சாடை
எல்லாம் நம்ம பாரின் பேய்
அன்பே உந்தன் நம்பர சொல்லி
தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

பெண் : ஆசைக்கு நா ஆடிட்டேன்
உங்க இசை எல்லாம் டுயூன் போட்டேன்
காபி ஷாப்பே தேவை இல்லை
கில்லாடிக்கு பேட் எண்டே

பெண் : நா கரண்ட் அடிக்கும்
ரோஜா செடி
கைய வைக்காத
டெவில் கிட்ட டீசென்ட்னு
தள்ளி நிக்காத

பெண் : வாட்ஸ் அப்ல ஹை சொன்னா
கோஸ்டு பண்ணாதே
லாஸ்ட் சீன பாத்து
டைம் வேஸ்ட் பண்ணாதே

குழு : அச்சோ அச்சோ பத்திக்கிச்சோ

பெண் : அச்சோ அச்சோ சிக்கிக்கிச்சோ

*****