-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |

ஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்
1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021 | 2022 | 2023 | 2024 | 2025 | 2026



அமரன்

Amaran
நடிப்பு
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீ குமார், ஷியாம் மோகன்

ஒளிப்பதிவு
சி. எச். சாய்

படத்தொகுப்பு
ஆர். கலைவாணன்

இசை
ஜி. வி. பிரகாஷ் குமார்

திரைக்கதை
ராஜ்குமார் பெரியசாமி, ஸ்டீபன் ரிட்சர்

இயக்கம்
ராஜ்குமார் பெரியசாமி

தயாரிப்பாளர்கள்
கமல்ஹாசன், ஆர். மகேந்திரன், விவேக் கிருஷ்ணானி

தயாரிப்பு நிறுவனம்
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா

வெளீயீடு:
31 அக்டோபர் 2024

*****

இப்படம் நமது இந்திய இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, சிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ் என்ற புத்தகத் தொடரின் தழுவலாகும்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

மேஜர் முகுந்த் வரதராஜனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தில், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீ குமார், ஷியாம் மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் முன்னணி நடிகராக நடித்துள்ள 21வது படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.

இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, சி. எச். சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

தொலைக்காட்சி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பாடல்கள்
1. ஹேய் மின்னலே
படம் : அமரன் (2024)
பாடியவர்கள் : ஹரிஹரன் மற்றும் ஸ்வேதா மோகன்
இசை : ஜி. வி. பிரகாஷ்குமார்
பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா

வீடியோ


ஆண் : ஹேய் மின்னலே
ஹே மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லோனா கண்ணாலே

பெண் : சக்கரே என் சக்கரே
மெல்மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே

ஆண் : சிநேகமோ பிரேமாமோ
ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ

பெண் : யாவுமே மாறுதே
பூமிதான் இதுவோ
சக்கரே சக்கரே சக்கரே

ஆண் : கரைமீதிலே இரு பாதமாய்
வா வாழலாம் வாழலாம்
மௌனமாய் தேடலாம்

பெண் : கடல் மீதிலே
விழும் தூறலாய்
நாம் தூறலாம்
தூரியே தீரலாம்

ஆண் : இருள் இருள் பூசிய
நெடுஞ்சாலையில்
ஒலி போல் சிரிப்பால்
விரல் விரல் சூடிய
நறும்பூவென விரலை பிடிப்பாய்

பெண் : சிறு குடை மீறிய
மலை போலவே நாள் போகுதே
பெரும் வரம் வாங்கிய
தவம் போலவே வாழ்வானதே

ஆண் : ஹேய் மின்னலே
ஹே மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லோனா கண்ணாலே

பெண் : என் உள்ளிலே என் உள்ளிலே
மெல்மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே

ஆண் : சிநேகமோ பிரேமாமோ
ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ

பெண் : யாவுமே மாறுதே
பூமிதான் இதுவோ
சக்கரே சக்கரே சக்கரே

*****

2. வெண்ணிலவு சாரல் நீ
படம் : அமரன் (2024)
பாடியவர்கள் : கபில் கபிலன், ரக்‌ஷிதா சுரேஷ்
இசை : ஜி. வி. பிரகாஷ்குமார்
பாடலாசிரியர் : யுகபாரதி

வீடியோ


ஆண்: வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ

ஆண்: வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ

பெண்: கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தோகையாகும் காலம் நீ

ஆண்: மின்னல் மோதும்
வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே எங்கும் தேடல் நீ

ஆண்: வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ
வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ

ஆண்: பாதி நீயே
என் பாதி நீயே
நீயில்லாமல்
நான் ஏது கண்ணே

பெண்: ஆதி நீயே
என் ஆயுள் நீயே
ஆணி வேரை
நீங்காது மண்ணே

ஆண்: எங்கே இருள் என்றாலும்
அங்கே ஒளி நீதானே

பெண்: கண்ணாய் எனை நீயே காக்க
கண்ணீரையும் காணேனே

ஆண்: நீண்ட தூரம்
போன போதும்
நீங்குமோ காதலே

ஆண்: வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ

பெண்: கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தோகையாகும் காலம் நீ

ஆண்: மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே எங்கும் தேடல் நீ

*****