புஷ்பா

pushpa
நடிப்பு
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா, பஹத் பாசில், தனஞ்சயா, சுனில், அஜய் கோஷ்

ஒளிப்பதிவு
மிரோஸ்லா குபா ப்ரோசெக்

படத்தொகுப்பு
கார்த்திக் ஸ்ரீனிவாஸ் ரூபென்

இசை
தேவி ஸ்ரீ பிரசாத்

எழுத்து, இயக்கம்
சுகுமார்

தயாரிப்பாளர்
நவீன் ஏமெனி, ஒய். ரவிசங்கர்

தயாரிப்பு நிறுவனம்
மைத்ரி மூவி மேக்கர்ஸ், முட்டசெட்டி மீடியா

வெளீயீடு:
17 டிசம்பர் 2021

*****

பாடல்கள்
1. உம் சொல்றியா மாமா
படம் : புஷ்பா (2021)
பாடியவர் : ஆண்ட்ரியா ஜெரெமையா
இசை : தேவி ஸ்ரீ பிராசாத்
பாடலாசிரியர் : விவேகா

வீடியோ


சேல சேல சேல கட்டுனா
குரு குரு குருன்னு பாப்பாங்க

குட்ட குட்ட கவுனு போட்டா
குறுக்கா மறுக்கா பாப்பாங்க

சேல பிளவுசோ சின்ன கவுனோ
ட்ரெஸுல ஒன்னும் இல்லைங்க

ஆசை வந்தா சுத்தி சுத்தி
அலையா அலையும் ஆம்பள புத்தி

உம் சொல்றியா மாமா
ஊ ஊஹும் சொல்றியா மாமா

உ சொல்றியா மாமா
ஊ ஊஹும் சொல்றியா மாமா

கலரா இருக்கும் பொண்ண பாத்தா
கணக்கு பண்ண துடிப்பாங்க

கருப்பா இருக்கும் பொண்ண பாத்தா
கலையா இருக்குன்னு சொல்வாங்க

கலரோ கறுப்போ மாநிறமோ
நிறத்துல ஒன்னும் இல்லைங்க

சீனி சக்கர கட்டி சுத்தி
எறும்பா திரியும் ஆம்பள புத்தி

உம் சொல்றியா மாமா
ஊ ஊஹும் சொல்றியா மாமா

உம் சொல்றியா மாமா
ஊ ஊஹும் சொல்றியா மாமா

நெட்டையாக வளந்த பொண்ண
நிமிந்து நிமிந்து பாப்பாங்க

குட்டியாக இருக்கும் பொண்ண
குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க

நெட்டை பொண்ணோ குட்ட பொண்ணோ
திட்டம் எல்லாம் ஒன்னுங்க

தேகம் எல்லாம் மோகம் முத்தி
திருட ஏங்கும் ஆம்பள புத்தி

உம் சொல்றியா மாமா
ஊ ஊஹும் சொல்றியா மாமா

ஹே.. உம் சொல்றியா மாமா
ஊ ஊஹும் சொல்றியா மாமா

கொழுக்கு மொழுக்கா வளந்த பொண்ண
கும்முனு இருக்கு சொல்வாங்க

குச்சி உடம்பு காரி வந்தா
கச்சிதம்னு வழிவாங்க

கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ
சைசுல ஒன்னும் இல்லைங்க

அல்வா மாரி அழகச் சுத்தி
அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி

உம் சொல்றியா மாமா
ஊ ஊஹும் சொல்றியா மாமா

ஹே.. உம் சொல்றியா மாமா
ஊ ஊஹும் சொல்றியா மாமா

ஊவா ஏ ஊவா
ஊவா ஏ ஊவா

பெரிய பெரிய மனுஷனுன்னு
ஒரு சிலர் இங்கு வருவாங்க

ஒழுக்கமுன்னா நானே தான்னு
உளறி சிலரு திரிவாங்க

ஒழுக்க சீலன் ஒசந்த மனுஷன்
வெளிய போடும் வேஷம்ங்க

வெளக்க அணைச்சா போதும் எல்லா
ம்... ம்... ம்... ம்...

வெளக்க அணைச்சா போதும் எல்லா
வெளக்கமாறும் ஒண்ணுதாங்க

உம் சொல்றியா மாமா
ஊ ஊஹும் சொல்றியா மாமா

உம் சொல்வோமே பாப்பா
ஊ ஊஹும் சொல்வோமா பாப்பா

உம் சொல்றியா மாமா
ஊ ஊஹும் சொல்றியா மாமா

உம் சொல்வோமே பாப்பா
ஊ ஊஹும் சொல்வோமா பாப்பா

உம் சொல்றியா மாமா
ஊ ஊஹும் சொல்றியா மாமா

*****

2. சாமி சாமி
படம் : புஷ்பா (2021)
பாடியவர் : ராஜலட்சுமி
இசை : தேவி ஸ்ரீ பிராசாத்
பாடலாசிரியர் : விவேகா

வீடியோ


படம் : புஷ்பா (2021)
பாடியவர் : ராஜலட்சுமி
இசை : தேவி ஸ்ரீ பிராசாத்
பாடலாசிரியர் : விவேகா

நீ அம்மு அம்மு சொல்லயிலே
பொண்டாட்டியா பூரிக்கிறேன்
சாமி... என் சாமி

நா சாமி சாமி சொல்ல
நீ என் புருசனான ஃபீலிங்கு தான்
சாமி... என் சாமி

நீ எதிர எதிர நடக்கயில...
நீ எதிர எதிர நடக்கயில...
ஏழுமலையான் தரிசனம் தான் சாமி
நீ பக்கம் பக்கம் நின்னா
அந்த பரமேஸ்வரன் போல தான சாமி

நீ இல்லாம நான் போகும் பாதை
கல்லும் முள்ளும் குத்துதுடா
சாமி... என் சாமி

என் சாமி வாய்யா சாமி
மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி

என் சாமி

சாமி

வாய்யா சாமி

சாமி

மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி

லுங்கிய ஏத்தி கட்டி
லோக்கலா நடக்கையில...

லுங்கிய ஏத்தி கட்டி
லோக்கலா நடக்கையில...
அங்கமே அதிருதடா சாமி

காம்புகிள்ளி வெத்தல போட்டு
கடிச்சு நீ கொதப்பயில
என் உடம்பு செவக்குதடா சாமி

உன் கட்ட குரல கேக்கயில...

ஏ... ஏ... ஏ... ஏ... ஏ...

உன் கட்ட குரல கேக்கயில...
என் கட்ட துள்ளுது சாமி
நீ சட்ட பட்டன அவுத்து விட்டா
சரக்கு போத சாமி

ரெண்டு குண்டு கண்ணையும் சுழட்டும்போது
தண்டுவடத்துல நண்டு மேயுது
சாமி என் சாமி

என் சாமி வாய்யா சாமி
மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி

என் சாமி

சாமி

வாய்யா சாமி

சாமி

மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி

புது சேல கட்டி வந்தும்
புகழ்ந்து நீ சொல்லலனா...

புது சேல கட்டி வந்தும்
புகழ்ந்து நீ சொல்லலனா...
சேலைக்கான செலவு வேஸ்ட் சாமி

கூந்தலில சிரிக்கும் பூவ
கொஞ்சம் நீயும் பாக்கலனா
பூ மனசு புழுங்கி போகும் சாமி

என் ஓரம் சாரம் தெரியும் அழக...

அ... அ... அ... அ... அ...

என் ஓரம் சாரம் தெரியும் அழக
உத்து பாரு சாமி

நீ உத்து பாக்கலன்னா மனம்
செத்து போகும் சாமி

என் அத்தன அழகும் நீ இல்லனா
ஆத்துல கரச்சா பெருங்காயம்
சாமி... என் சாமி

என் சாமி வாய்யா சாமி
மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமி

என் சாமி

சாமி

வாய்யா சாமி

சாமி

மன்மத சாமி மந்திர சாமி
போக்கிரி சாமிபுதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே (1991)
மாமன் ஒரு நாள் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
பொத்தி வச்ச மல்லிக மொட்டு - மண்வாசனை (1983)
பொன்மேனி உருகுதே - மூன்றாம் பிறை (1982)
மார்கழிப் பூவே - மே மாதம் (1994)
பூங்காற்று புதிதானது - மூன்றாம் பிறை (1982)
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் - அபூர்வ சகோதரர்கள் (1989)
ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி (1980)
எந்தன் நெஞ்சில் நீங்காத - கலைஞன் (1993)
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - இதயம் (1991)
மீனம்மா... - ஆசை (1995)
இனிமை நிறைந்த உலகம் இருக்கு - நினைத்தாலே இனிக்கும் (1979)
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021 | 2022 | 2023