பியார் பிரேமா காதல்

pyaarpremakaadhal
நடிப்பு
ஹரீஷ் கல்யாண், ரெய்சா வில்சன்

ஒளிப்பதிவு
ராஜா பட்டாசார்ஜி

படத்தொகுப்பு
எஸ்.மணிகுமரன்

இசை
யுவன் சங்கர் ராஜா

கதை, இயக்கம்
இளன்

தயாரிப்பாளர்
யுவன் சங்கர் ராஜா, எஸ்.என்.ராஜராஜன், இர்பான் மாலிக்

தயாரிப்பு நிறுவனம்
ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ், கே புரொடக்சன்ஸ்

வெளீயீடு:
10 ஆகஸ்டு 2018

பாடல்கள்
1. ஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்
படம் : பியார் பிரேமா காதல் (2018)
பாடியவர் : சித் ஸ்ரீராம்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
இயற்றியவர் : நிரஞ்சன் பாரதி

வீடியோ


ஏ பெண்ணே
என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத
மாயம் செய்கிறாய்

உன்னை போலவே நான் இங்கே
மயங்கி கிறங்கி தான் போனேனே
போதையாக தான் ஆனேனே
தள்ளாடும் ஜீவனே

ஜன்னல் ஓரமாய் முன்னாலே
மின்னல் போலவே வந்தாயே
விண்ணை தாண்டி ஒரு சொர்க்கத்தை
மண்ணில் எங்குமே தந்தாயே

விழியே நீங்கி நீ விலகாதே
நொடியும் என் மனம் தாங்காதே
என்ன நேருமோ தெரியாதே
என் ஜீவன் ஏங்குதே

ஹா
என் உயிரினை வதைத்திடும்
அழகி நீ
என் இதயத்தில் அமர்ந்திடும்
அரசி நீ
என் உடலினில் நதியாய் ஓடும்
உதிரம் நீயடி

உன் சிரிப்பினில் கவிதைகள்
கலங்குதே
உன் மொழிகளில் இசைகளும்
தோற்குதே
உன் இரு விழி மின்னல் ஏந்த
வானம் ஏங்குதே...

உனக்குள் எந்தன்
காதல் காண்கிறேன்
வெளியில் சொல்ல
வார்த்தைகள் தேவையா
இருந்தும் உன் இதழ்கள்
அந்த வார்த்தை சொல்லுமா

குருவி போலவே என் உள்ளம்
தத்தி தாவுதே உன்னாலே
குழந்தை போலவே என் கால்கள்
சுத்தி திரியுதே பின்னாலே

தீயைப் போலவே என் தேகம்
பத்தி எரியுதே தன்னாலே
அருவி போலவே ஆனந்தம்
நில்லாமல் பாயுதே

ஏ பெண்ணே என் நெஞ்சில்
சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத
மாயம் செய்கிறாய்
ஓஹோ... ஓஹோ... ஓஹோ... ஓஓ...