காற்று வெளியிடை

Kaatru Veliyidai
நடிப்பு
கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி, கே.பி.ஏ.சி. லலிதா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ருக்மணி விஜயகுமார், டெல்லி கணேஷ், ஆர்.ஜே. பாலாஜி, வையாபுரி

ஒளிப்பதிவு
ரவி வர்மன்

படத்தொகுப்பு
அ. ஸ்ரீகர் பிரசாத்

இசை
ஏ.ஆர். ரஹ்மான்

கதை, இயக்கம்
மணிரத்னம்

தயாரிப்பாளர்
மணிரத்னம்

தயாரிப்பு நிறுவனம்
மெட்ராஸ் டாக்கீஸ்

வெளீயீடு
7 ஏப்ரல் 2017

     மணித்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியீடு செய்த படம் தான் ‘காற்று வெளியிடை’.

     மணிரத்னம் காதலுக்காக மட்டுமில்லாமல்.. நாயகன் பைலட் என்பதாலும் பொருந்தி வருகிறபடியால் இந்த டைட்டிலை வைத்திருப்பார் போல.

     ஒரு விமான ஓட்டி, விசி மற்றும் ஒரு மருத்துவர் லீலா ஆகியோருக்கிடையேயான காதலைச் சொல்லும் காற்று வெளியிடை ஒரு அருமையான காதல் கதை. இப்படம் ஸ்ரீ நகரில் படமாக்கப்பட்டுள்ளது.

     காஷ்மீர் பார்டரில் பறக்கும் போர் விமானி கார்த்தி. ஸ்ரீநகர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் வேலைக்கு வருகிறார் அதிதி ராவ். முதல் நாளே விபத்தில் அடிபடும் கார்த்திக்கு வைத்தியம் பார்க்கிறார் அதிதி. அன்று முதலான இருவரின் சந்திப்பும் தொடர்கிறது. இருப்பினும் இருவருக்கும் இடையே ஈகோ யுத்தம் வெடிக்கிறது. இதனால் இந்த உறவு சரிவராது என அதிதி ஒதுங்க நினைக்கிறார். அப்போது, கார்கில் போருக்காக செல்கிறார் கார்த்தி, அப்போது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிறைபடுகிறார் கார்த்தி. கார்த்தி அங்கிருந்து தப்பினாரா, மீண்டும் அதிதியை சந்தித்தாரா என்பதுதான் படத்தின் கதை.

     வி.சி எனும் பைட்டர்பிளைட் பைலட் வருண் சக்ரபாணியாக கார்த்தி , ஏர்போர்ஸ் ஆபிஸராக செம மிடுக்கு காட்டியிருக்கிறார். பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பிக்கும் கார்த்தி, காதலியை நினைத்து புலம்பும் இடங்களும் , க்ளைமாக்ஸில் பாக் - ஆப்கானிஸ்தான் பார்டரில் ஒரு சரக்கு லாரியில் பாக் மிலிட்டரி வண்டிகளை துவம்சம் செய்து விட்டு ஆப்கான் பார்டரில் நுழைந்து தப்பும் இடங்களிலும் செமயாய் மிரட்டி இருக்கிறார்.

     ஜி.ஹெச் வரும் கார்த்திக்கு சிகிச்சை தரும் டாக்டர் லீலா ஆபிரகாமாக அதீதி ராவ் ஹைதி , அசத்தியிருக்கிறார். தன்னை திருமணம் செய்வதாக ரிஜிஸ்தர் ஆபிஸ்வரச் சொல்லி காக்க வைத்து கடமையே கண்ணாக இருந்த கார்த்தியிடம் புலம்பும் இடங்களில் அருமையாக நடித்திருக்கிறார்.

     நர்ஸ் அச்சம்மாவாக கே பி.ஏ.சி. லலிதா, டாக்டர். நிதியாக, நாயகியின் தோழியாக வரும் ருக்மினி விஜயக்குமார், நாயகியின் தாத்தாவாக ரிட்டயர்டு கர்னல் மித்ரனாக டெல்லி கணேஷ் , நாயகியை ஒன் சைடாக காதலிக்கும் மிலிட்டரி டாக்டர் இலியாஸ் ஹூசைனாக , ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட எல்லோரும் கச்சிதமாக நடித்துள்ளனர்.

     இந்தியாவின் எல்லையோர பகுதிகளின் இயற்கை அழகும் , பைட்டர் விமானங்கள் பறக்கும் அழகும் படம் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் விதத்தில் படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

     ஏ.ஆர் .ரஹ்மானின் இசையில், ‘வான் வருவான்’ ‘நல்லை அல்லை’, ‘அழகே’, ‘சாரட்டுவண்டியிலே’, ‘ஜூ கினி’ உள்ளிட்ட பாடல்கள் அருமை. பின்னணி இசை படத்திற்கு மெருகூட்டுகிறது.

     படத்தில் நம் இந்திய எல்லையோர விமான படை தளங்களையும் , போர் விமானங்கள் உயர, உயர பறக்கும் விதத்தையும், இமாச்சல பனிப் பிரதேசங்களையும் மிக அழகாகவும், தத்ரூபமாகவும் காட்சிப் படுத்தியிருக்கும் விதம் அருமை. ஒவ்வொரு சீனிலும் மணிரத்னத்தின் வாசம் வீசுகிறது என்பது படத்திற்கு பெரும் பலம்.

     தமிழில் வெளியான அதே நாளில் செழியா என்னும் பெயரில் தெலுங்கிலும் வெளியானது.

     2018ஆம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான (பாடல்கள்) தேசிய விருதினை ஏ. ஆர். ரகுமானும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதினை சாஷா திருப்பதியும் பெற்றனர்.

பாடல்கள்
1. வான் வருவான்
படம் : காற்று வெளியிடை (2017)
பாடியவர் : ஷாஷா திருப்பதி
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
இயற்றியவர் : வைரமுத்து

வீடியோ


வான் வருவான்
வருவான் வருவான்
வான் வருவான்
வருவான் வருவான்

வான் வருவான்
வான் வருவான்
வான் வருவான்
வான் வருவான்

வான் வருவான் தொடுவான்
மழைபோல் விழுவான்
மா்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்
அருகில் நிமிா்வான்

தொலைவில் பணிவான்
கா்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
கல்லாய் உறைவான்
உறைவான்

காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்

என் கள்ள காமுகனே
அவன் தான் வருவான்

வான் வருவான் தொடுவான்
மழைபோல் விழுவான்
மா்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்
அருகில் நிமிா்வான்
தொலைவில் பணிவான்
கா்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
கல்லாய் உறைவான்
உறைவான்

தத்தாட தத்தாட
தத்தாட தத்தாட ஹோய்
தத்தாட தத்தாட
தத்தாட தத்தாட

என்னோடு இருந்தால்
எவளோ நினைவான்
அவளோடிருந்தால்
எனையே நினைவான்

என்னை தருவான்
என் போ் மறவான்
என்னை மறந்தால்
தன் உயிா் விடுவான்

கண் கவிழ்ந்தால்
வெளிபோல் விாிவான்
கண் திறந்தால்
கனத்தில் கரைவான்

வான் வருவான் தொடுவான்
மழைபோல் விழுவான்
மா்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்
அருகில் நிமிா்வான்
தொலைவில் பணிவான்
கா்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
கல்லாய் உறைவான்
உறைவான்

காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்

காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்