வருத்தப்படாத வாலிபர் சங்கம்

varuthapadatha vaalibar sangam
நடிப்பு
சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், ராஜேந்திரன், காதல் தண்டபாணி, பிந்து மாதவி

பாடல்கள்
யுகபாரதி

இசை
டி. இமான்

ஒளிப்பதிவு
பாலசுப்ரமணியெம்

படத்தொகுப்பு
விவேக் ஹர்ஷன்

வசனம்
ராஜேஷ். எம்

கதை, திரைக்கதை, இயக்கம்
பொன்ராம்

தயாரிப்பு
பி. மதன்

தயாரிப்பு நிறுவனம்
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் ஃபிக்சர்ஸ்

வெளீயீடு:
6 செப்டம்பர் 2013

வீடியோ


*****
பாடல்கள்
1. ஊதா கலரு ரிப்பன்
படம் : வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
பாடியவர்கள் : ஹரிஹர சுதன், டி. இமான்
இசை : டி. இமான்
இயற்றியவர் : யுகபாரதி

வீடியோ


தந்தானானே நானேனா ஓஓஓ

ஊதா... ஊதா...

ஊதா கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்

ஊதா கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
ஏ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடணும்
நீ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடணும்

ரோஜா... ரோஜா...

ரோஜா கலரு பொம்மி
உனக்கு யாரு மம்மி
ரோஜா கலரு பொம்மி
உனக்கு யாரு மம்மி

ஹே நில்லடி அவளுக்கு
நான் சபாஷ் போடணும்
நீ நில்லடி அவளுக்கு
நான் சபாஷ் போடணும்

ஊதா... ஊதா...

மத்தவங்க நடந்து போனா
வீதி வெறும் வீதி
நீ தெருவில் நடந்து போனா எனக்கு
சேதி தலைப்பு சேதி

மத்தவங்க சிரிப்ப பாத்தா
ஓகே வெறும் ஓகே
நீ சிரிச்சு பேசும் போது எனக்கு
வந்திடுதே சீக்கே

மத்தவங்க அழகு எல்லாம்
மொத்ததுல போரு போரு
சிங்காரி ஓன் அழகு தானே
போத ஏத்தும் பீரு பீரு
கூலிங்கானபீரு

ஊதா... ஊதா...

வானம் பொழிகிறது பூமி விளைகிறது
உனக்கேன் கொடுப்பது கிஸ்தி
எங்களோடு வயலுக்கு வந்தாயா
ஏற்றம் இறைத்தாயா
அங்கே கொஞ்சி விளையாடும்
எம் குலப் பெண்களுக்கு
மஞ்சள் அறைத்துப் பணிபுரிந்தாயா
மானங்கெட்டவனே
ஆஆஆ

ஆஆஆ
மத்தவங்க ஒரசி போனா
ஜாலி செம ஜாலி
நீ ஒரசி போன பிறகு பாத்தா
காலி ஐ ஆம் காலி

மத்தவங்க கடந்து போனா
தூசி வெறும் தூசி
நீ கடந்து போன பிறகும் குளிரு
ஏசி விண்டோ ஏசி

மத்தவங்க கண்ணுக்கெல்லாம்
சீமாட்டி நீ சேட்ட சேட்ட
என்னுடைய கண்ணுக்கு நீ
எப்பவுமே காதல் கோட்ட
நிப்பாட்டுறேன் பாட்ட...

தேங்க்ஸ்யா

ஊ ஏவ்...
ஊதா... ஊதா...

ஊதா கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்

நீ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடணும்
நீ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடணும்

ஊதா... ஊதா... ஊதா... ஆஆஆ

*****
2. இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
படம் : வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
பாடியவர் : ஜெயமூர்த்தி
இசை : டி. இமான்
இயற்றியவர் : யுகபாரதி

வீடியோ


இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா

இந்த பொண்ணுங்களே இப்படிதான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
பின்னால சுத்த வச்சி பித்துக்குளி ஆக வச்சி
இல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையாள பால்டாயில ஊத்துவாங்கடா

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா

கார்டு வாங்கி கொடுக்கிறோம்
கவிதை எழுதி கொடுக்கிறோம்
செல்லு வாங்கி கொடுக்கிறோம்
ரீசார்ஜும் பண்ணி கொடுக்கிறோம்
அன்ப கூட வாரி வாரி கொடுக்கிறோம்
அவங்க வீட்டுக்கும்தான் ரேஷன் வாங்கி கொடுக்கிறோம்
நம்ம கொடுத்ததையெல்லாம் வாங்கிகிட்ட அவங்க தான்
நமக்கு வேதனைய குடுகிறாங்க என்னடா
இதுல நீதி நேர்மை இருக்குதான்னு சொல்லுடா சொல்லுடா
பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா

ரீட்டா

வீடு வாசல் மறக்குறோம்
வெட்கம் ரோஷம் மறக்குறோம்
நல்லா தூங்க மறக்குறோம்
நண்பனையும் மறக்குறோம்
நாளு கிழமை கூட நாம மறக்குறோம்
அவங்க நெனப்புல தான் எல்லாத்தையும் மறக்குறோம்
நாம மறப்பதெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட அவங்க தான்
நம்மள போற போக்கில் மறக்குறாங்க என்னாடா
இந்த சோகம் மறக்க குடிகிறேன்னு சொல்லுடா சொல்லுடா

பொண்ணுங்களே இந்த பொண்ணுங்களே
ஏ பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா

அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
பின்னால சுத்த வச்சி பித்துக்குளி ஆக வச்சி
இல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்கடா
இல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்கடா

*****
3. பாக்காத பாக்காத...
படம் : வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ், பூஜா வித்யநாத்
இசை : டி. இமான்
இயற்றியவர் : யுகபாரதி

வீடியோ


பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத...

பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத...

நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுன்னுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்
பேச்ச குறைக்குறேன் சட்டுன்னுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத...

ஓ. எப்போ பாரு உன்ன நெனச்சு
பச்ச புள்ள போலே எளச்சு
கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா
உள்ள வர உன்ன பாப்பேன் தெளிவா

செக்க செவந்து நான் போகும்படி தான்
தன்ன மறந்து ஏன் பாக்குற
என்ன இருக்குது என்கிட்டனு
என்னை முழுங்க நீ பாக்குற
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத...

எட்டி பாத்தா என்ன தெரியும்
உத்து பாரு உண்மை புரியும்

தள்ளி இருந்து நீ பாத்தா சரியா
பக்கத்துல வந்து பாரேன் மொறையா

என்னத்துக்கு என்னை பாக்குறேன்னு
அப்ப திட்டிபுட்டு போனவ

கட்டி கொள்ள உன்னை பாக்குறேனே
கூரை பட்டு எப்போ வாங்குவ

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத...

நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்

நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்
பாக்காத பாக்காத... ஆஆஆ அய்யய்யோ பாக்காத...

*****
4. என்னடா என்னடா
படம் : வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல், சுராஜ் சந்தோஷ், சுவேதா சுரேஷ்
இசை : டி. இமான்
இயற்றியவர் : யுகபாரதி

வீடியோ


என்னடா என்னடா
என்னடா என்னடா

என்னடா என்னடா
உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே
தன்னாலே என்னவோ ஆச்சு
ஆறாமல் பொலம்பவிடும்
பார்த்தாலே பதுங்கிவிடும்
வால் பையன் நீதானடா

என்னடா என்னடா
உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே
தன்னாலே என்னவோ ஆச்சு

லலலல லாலே லாலே
லலலல லலலே லாலே
லலலல லாலே லாலே
லாலே லாலே லாலே லாலே லோ ஓஓஒ

ரரரர ரரரர ரரரர

நான் ஓயாத வாயாடி
பேசாம போனேன்
பொட்டுச் செடி நான்
மொட்டு வெடிச்சேன்
ஒழுங்கான மாதிரி நானு
வெளங்காம போகுறேனே
விடிஞ்சாலும் தூங்குற ஆளு
ஒரங்காம ஏங்குறேனே
உன்னோட பேசிடவே
உள்ளூர ஆச கூடிப்போச்சு
கண்ணாடி பாத்திரமா
என்னோட தேகம்
மாறியே போச்சு போச்சு

என்னடா என்னடா
உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே...

நீ லேசாக பார்த்தாலும் லூசாகிப் போறேன்
பச்ச நெருப்பா பத்திகிடுறேன்
விளையாட்டுப் பொம்மைய போல
ஒடஞ்சேனே நானும் கூட
அநியாயம் பண்ணுற காதல்
அடங்காம ஆட்டம் போட
பொல்லாத உன் நெனப்பு எப்போதும்
போட்டி போட்டுக் கொல்ல
போகாத கோயிலுக்கும் நான் போயி
பூசை பண்ணுறேன் என்ன சொல்ல
என்னடா

ஹோ என்னடா

ஹோ என்னடா என்னடா
உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே
தன்னாலே என்னவோ ஆச்சு
ஆறாமல் பொலம்பவிடும்
பார்த்தாலே பதுங்கிவிடும்
வால் பையன் நீதானடா

என்னடா என்னடா
என்னடா என்னடா

*****
5. ஊர காக்க உண்டான சங்கம்
படம் : வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
பாடியவர்கள் : சிவகார்த்திகேயன், அந்தோனி தாசன்
இசை : டி. இமான்
இயற்றியவர் : யுகபாரதி

வீடியோ


சில்லாவூரு திண்டுகல்லு
சின்னாளம் பட்டி பக்கம் சொல்லு
நம்ம சிலுக்குவார் பட்டி சிங்கம்
செம்பு கலக்காத தங்கம்
அது வச்சிருப்பதோ
வருத்தப்படாத வாலிபர் சங்கம்

சார் ஓப்பன் ஹே ஹேஹே

அண்ணே அன்புக்கு அன்னை தெரசா
அறிவுக்கு அப்துல் காலம்
அடக்கத்துல நெல்சன் மண்டேலா
அடடடடா
நம்ம போஸ்பாண்டி அண்ணன் குடுத்த ஐந்நூறு
அஞ்சு லட்சமா நினைச்சுகிட்டு
நம்ம அல்லி நகரத்து அடிய கொஞ்சம்
அடிச்சு தான் காட்டுவோமா

ஊர காக்க உண்டான சங்கம்
உயிர குடுக்க உருவான சங்கம்
இல்ல இது இல்ல
நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இவிங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்

நீதி நேர்மை காக்கின்ற சங்கம்
நெஞ்ச நிமித்தி போராடும் சங்கம்
இல்ல இது இல்ல
இதுக்கு மேல நா என்னத்த சொல்ல

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இவிங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்

ஆழம் தெரியாம கால வச்சு
அடியும் சருக்கிருவோம்
ஹேய் ஊரு நடுவால பேனர் வச்சி
பட்டய கிளப்பிடுவோம்

போற வழி போவோம்
பெரும் புள்ளிய போல தான் வாழ்வோம்

கண்ட எடத்துல வெத்தல போடுவோம்
காசு பணத்துக்கு சண்டைய போடுவோம்
சண்ட நடக்கையில் கட்டய போடுவோம்
சந்தடி சாக்குல ஆட்டய போடுவோம்
நாங்க...

அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம்
அழகு பொண்ணுனா கவிதை சொல்லுவோம்
இணைஞ்ச காதல பிரிக்க எண்ணுவோம்
எங்கள நாங்களே புகழ்ந்து தள்ளுவோம்
நாங்க...

செம வாலு... செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு

வருத்தப்படாத வாலிபர் சங்கம்... இங்காரு
இவிங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்...
கொன்றுவேன் பாத்துக்கோ

மோதும் புலியாக லந்தடிபோம்
மொறைச்சா பயந்திருவோம்
அப்பறம்
நேரம் தெரியாம தூங்கிருவோம்

மோதும் புலியாக லந்தடிபோம்
மொறைச்சா பயந்திருவோம்
ஏ நேரம் தெரியாம தூங்கிருவோம்
நெறைய பேசிருவோம்

வெயிலடிக்குது மழையடிக்குது
அலையடிக்குது புயலடிக்குது
பற பறக்குது குறு குறுக்குது
பருவ பொண்ணுனா ஷாக் அடிக்குது
ஏங்க?

கொடி பறக்குது வெடி வெடிக்குது
குலுங்க குலுங்க கிளி சிரிக்குது
பறை அடிக்குது தவுல் அடிக்குது
மனசுக்குள்ளார மணி அடிக்குது
நாங்க...
செம வாலு... செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு

வருத்தப்படாத வாலிபர் சங்கம்...
அடியேங்காத்தா
இவிங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இனிமே எல்லாம் அப்டித்தான்...

*****