3 (திரைப்படம்)

3 (movie)
நடிப்பு
தனுஷ், சுருதி ஹாசன், சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு, பிரபு, பானுப்பிரியா, ஜீவா ரவி, ரோகிணி, படவா கோபி

ஒளிப்பதிவு
வேல்ராஜ்

படத்தொகுப்பு
கோலா பாஸ்கர்

இசை
அனிருத் ரவிச்சந்திரன்

கதை, இயக்கம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தயாரிப்பாளர்
கஸ்தூரி ராஜா

தயாரிப்பு நிறுவனம்
கோபு அர்ஜுன் பிலிம்ஸ்

வெளீயீடு:
30 மார்ச் 2012

*****

பாடல்கள்
1. ஒய் திஸ் கொலை வெறிடி
படம் : 3 (திரைப்படம்) (2012)
பாடியவர் : தனுஷ்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : தனுஷ்

வீடியோ


ஆண் : யோ பாய்ஸ் ஐ ஆம் சிங்கிங் சாங்
சூப் சாங் ஃபிளாப் சாங்

ஆண் : ஒய் திஸ் கொலை வெறி
கொலை வெறி கொலை வெறிடி
ஒய் திஸ் கொலை வெறி
கொலை வெறி கொலை வெறிடி

ஆண் : ரிதம் கரெக்ட்
ஒய் திஸ் கொலை வெறி
கொலை வெறி கொலை வெறிடி
மெயின்டைன் ப்ளீஸ்
ஒய் திஸ் கொலை வெறி அடி

ஆண் : ஆ டிஸ்டென்ஸ்ல மூனு மூனு
மூனு கலரு ஒய்ட்டு
ஒய்ட் பேக்கிரவுண்ட் நைட்டு நைட்டு
நைட்டு கலரு பிளாக்கு

ஆண் : ஆ ஒய் திஸ் கொலைவெறி
கொலை வெறி கொலைவெறிடி
ஒய் திஸ் கொலைவெறி
கொலை வெறி கொலைவெறிடி

ஆண் : ஒய்ட் ஸ்கின்னு கேர்ள்லு கேர்ள்லு
கேர்ள்லு ஹார்ட்டு பிளாக்கு
ஐஸ்சு ஐஸ்சு மீட்டு மீட்டு
மை பியூச்சர் டார்க்

ஆண் : ஒய் திஸ் கொலை வெறி
கொலை வெறி கொலை வெறிடி
ஒய் திஸ் கொலை வெறி
கொலை வெறி கொலை வெறிடி

ஆண் : மாமா நோட்ஸ் எடுத்துக்கோ
அப்பிடியே கைல ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ
ப ப ப பா ப ப ப பா
ப ப ப பா ப ப ப பா
சரியா வாசி

ஆண் : சூப்பர் மாமா ரெடி
ரெடி ஒன் டு த்ரி போர்

ஆண் : வாவ் வாட் எ சேன்ஜ் ஓவர் மாமா
ஓகே மாமா நவ் டுயூன் சேன்ஜ்சு
ஹ்ம்ம் ம்ம்ம்
கைல கிளாசு
ஒன்லி இங்கிலிஸ்

ஆண் : ஹென்ட்ல கிளாஸ்
கிளாஸ்ல ஸ்காட்ச்
ஐஸ்சு புல்லா டியரு
எம்டி லைஃப்பு கேர்ள் கம்மு
லைப் ரிவர்ஸ் கியரு

ஆண் : லவ்வு லவ்வு
ஓ மை லவ்வு
யூ ஷோவ்டு மீ பவ்வு
கவ்வு கவ்வு ஹோலி கவ்வு
ஐ வான்ட்டு ஹியர் நவ்வு

ஆண் : காட் ஐ ம் டையிங் நவ்வு
ஷீ இஸ் ஹேப்பி ஹவ்வு
திஸ் சாங் பார் சூப் பாய்ஸ்சு
வி டோன்ட் ஹேவ் சாய்ஸ்சு

ஆண் : ஒய் திஸ் கொலை வெறி
கொலை வெறி கொலை வெறிடி
ஒய் திஸ் கொலை வெறி
கொலை வெறி கொலை வெறிடி

ஆண் : ஒய் திஸ் கொலை வெறி
கொலை வெறி கொலை வெறிடி
ஒய் திஸ் கொலை வெறி
கொலை வெறி கொலை வெறிடி

ஆண் : ஃபிளாப் சாங்

*****

2. நீ பார்த்த விழிகள்
படம் : 3 (திரைப்படம்) (2012)
பாடியவர்கள் : ஸ்வேதா மோகன், விஜய் யேசுதாஸ்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : தனுஷ்

வீடியோ


ஆண் : நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள் ஹம்ம்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
பெண் : இது போதுமா
இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள்
நம் வசம் வருமா
உயிர் தாங்குமா
என் விழிகளில் முதல் வலி
ஆண் : நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே
வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை
மெதுவாக

ஆண் : நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள் ம்ம்ம்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா

ஆண் : நிழல் தரும்
இவள் பார்வை
வழி எங்கும்
இனி தேவை
உயிரே உயிரே
உயிர் நீதான் என்றால்
உடனே வருவாய்
உடல் சாகும் முன்னால்

பெண் : அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்

ஆண் : இதில் நீ மட்டும்
வேண்டும் பெண்ணே

ஆண் : நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே
வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை
மெதுவாக

பெண் : நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள் ம்ம்ம்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா

ஆண் : இது போதுமா
இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள்
நம் வசம் வருமா
உயிர் தாங்குமா ஓ... ஓ... ஓ...

*****

3. போ நீ போ
படம் : 3 (திரைப்படம்) (2012)
பாடியவர்கள் : மோஹிட் சவுஹான், அனிருத் ரவிச்சந்தா்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : தனுஷ்

வீடியோ


ஆண் : போ நீ போ போ நீ போ
தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ

ஆண் : நீ தொட்ட இடமெல்லாம்
எாிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட
விதி செய்தாய் அன்பே போ

ஓ..ஓ..ஓ..ஓஹோ..ஓ..ஓஹோ...ஓ..ஓஹோ
ஓ..ஓ..ஓ..ஓஹோ..ஓ..ஓஹோ...ஓ..ஓஹோ
ஓ..ஓ..ஓ..ஓஹோ..ஓ.ஓஹோ...ஓ..ஓஹோ
ஓ..ஓ..ஓ..ஓஹோ..ஓ.ஓஹோ...ஓ..ஓஹோ
ஓ..ஓ..ஓ..ஓஹோ..ஓ.ஓஹோ...ஓ..ஓஹோ

ஆண் : தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ

ஆண் : உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே..‌.
உயிர் காதல் நீ காட்டினாய்
மறவேனே பெண்ணே...
இதுவரை உன்னுடன் வாழ்ந்த
என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட
வழி இல்லையா
இருளிலே தேடிய
தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும்
விதி இல்லையா

ஓ...ஓ..ஓ..ஓஹோ..ஓ..ஓஹோ...ஓ..ஓஹோ
ஓ..ஓ..ஓ..ஓஹோ..ஓ..ஓஹோ...ஓ..ஓஹோ

ஆண் : போடி போ போடி போ
என் காதல் புாியலையா
உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும்
நீ இருந்தாய் அன்பே போ

ஆண் : நீ தொட்ட இடமெல்லாம்
எாிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட
விதி செய்தாய் அன்பே போ

ஓ...ஓ..ஓ..ஓஹோ..ஓ..ஓஹோ...ஓ..ஓஹோ
ஓ..ஓ..ஓ..ஓஹோ..ஓ..ஓஹோ...ஓ..ஓஹோ
ஓ..ஓ..ஓ..ஓஹோ..ஓ.ஓஹோ...ஓ..ஓஹோ
ஓ..ஓ..ஓ..ஓஹோ..ஓ.ஓஹோ...ஓ..ஓஹோ

ஆண் : தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிா்
வேண்டாம் தூரம் போ

*****

4. கண்ணழகா காலழகா
படம் : 3 (திரைப்படம்) (2012)
பாடியவர்கள் : தனுஷ் , ஸ்ருதி ஹாசன்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : தனுஷ்

வீடியோ


பெண்: கண்ணழகா
காலழகா
பொன்னழகா
பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும்
விரல் அழகா
என் கைகள்
கோர்த்து கொள்ளும்
விதம் அழகா

ஆண்: உயிரே உயிரே
உனைவிட எதுவும்
உயிரில் பெரிதாய்
இல்லையடி
அழகே அழகே
உனைவிட எதுவும்
அழகில் அழகாய்
இல்லையடி

பெண்: எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட
மாயங்கள் செய்கிறாய்

ஆண்: உனக்குள் பார்க்கிறேன்
உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட
நான் வழி பார்க்கிறேன்

பெண்: இதழும் இதழும்
இணையட்டுமே
புதிதாய் வழிகள் இல்லை

ஆண்: இமைகள் மூடி
அருகினில் வா
இதுப்போல் எதுவும் இல்லை

பெண்: உனக்குள் பார்க்கவா
உள்ளதைக் கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட
நான் வழி சொல்லவா

ஆண்: கண்ணழகே
பேரழகே
பெண் அழகே
என்னழகே

ஆண்: உயிரே உயிரே
உனைவிட எதுவும்
உயிரில் பெரிதாய்
இல்லையடி

*****

5. இதழின் ஒரு ஓரம்
படம் : 3 (திரைப்படம்) (2012)
பாடியவர்கள் : அஜீஷ், அனிருத் ரவிச்சந்தர்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : ஐஸ்வர்யா ஆர். தனுஷ்

வீடியோ


ஆண் : வாவ்
வாவ்உ வாவ் வாவ்
வாவ்உ வாவ் வாவ்
வாவ்உ வாவ் வாவ்
வாவ்
வாவ்உ வாவ் வாவ்
வாவ்உ வாவ் வாவ்
வாவ்உ வாவ் வாவ்

ஆண் : இதழின் ஒரு ஓரம்
சிரித்தாய் அன்பே
நிஜமாய் இது போதும்
சிரிப்பாய் அன்பே
என் நாடியை
சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம்
வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம்
மறந்தின்று உன் முன்னே
பணிய வைத்தாய்

ஆண் : ஓ ஓ ஓ வாவ்
வாவ்உ வாவ் வாவ்
வாவ்உ வாவ் வாவ்
வாவ்உ வாவ் வாவ்
வாவ்
வாவ்உ வாவ் வாவ்
வாவ்உ வாவ் வாவ்
வாவ்உ வாவ் வாவ்

ஆண் : சொல்லு நீ ஐ லவ் யூ
நீதான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் ட்ரு
வில் மேக் ஷுர் யூ
நெவெர் பீல் கோ

ஆண் : ஓ எல்லாம் மறந்து
உன் பின்னே வருவேன்
நீ சம்மதித்தால் நான்
நிலவையும் தருவேன்
உன் நிழல் தரை படும்
தூரம் நடந்தேன்
அந்த நொடியை தான்
கவிதையாய் வரைந்தேன்

ஆண் : ஓ பெண்ணே
என் கண்ணே
செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள்
பெயரை வைத்தாய்
என் நாடியை
சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம்
வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம்
மறந்தின்று
உன் முன்னே
பணிய வைத்தாய்
வைத்தாய் வைத்தாய்

‌ ஆண் : ஓ பெண்ணே
என் கண்ணே
செந்தேனே
வா முன்னே
என் உயிருக்குள்
பெயரை வைத்தாய்

ஓ பெண்ணே
என் கண்ணே
செந்தேனே
வா முன்னே
என் உயிருக்குள்
பெயரை வைத்தாய்

ஆண் : சொல்லு நீ ஐ லவ் யூ
நீதான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் ட்ரு
வில் மேக் ஷுர் யூ
நெவெர் பீல் கோ

ஆண் : ஓ பெண்ணே
சொல்லு நீ ஐ லவ் யூ
நீதான் என் குறிஞ்சிப் பூ
ஓ பெண்ணே
என் காதல் என்றும் ட்ரு
வில் மேக் ஷுர் யூ
நெவெர் பீல் கோ
ஓ பெண்ணே

*****