சில்லுனு ஒரு காதல்

sillunu oru kaadhal
நடிப்பு
சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சுகன்யா, சந்தானம், தம்பி ராமையா

பாடல்கள்
வாலி

இசை
ஏ.ஆர். ரஹ்மான்

ஒளிப்பதிவு
ஆர்.டி ராஜசேகர்

படத்தொகுப்பு
ஆண்டனி

கதை
ஏ.சி. துரை

திரைக்கதை, இயக்கம்
கிருஷ்ணா

தயாரிப்பு
கே.இ. ஞானவேல்ராஜா

தயாரிப்பு நிறுவனம்
ஸ்டூடியோ கிரீன்

வெளீயீடு:
8 செப்டம்பர் 2006

வீடியோ


*****
பாடல்கள்
1. முன்பே வா என் அன்பே வா
படம் : சில்லுனு ஒரு காதல் (2006)
பாடியவர்கள் : நரேஷ் ஐயர், ஸ்ரேயா கோஷல்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
இயற்றியவர் : வாலி

வீடியோ


பெண்: முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூ பூவாய் பூப்போம் வா

நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூ பூவாய் பூப்போம் வா

குழு: ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

பெண்: ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப் பூ வைத்து பூ வைத்து
பூவைக்குள் தீ வைத்தாய் ஓஓஓஓ

ஆண்: தேனே நீ மழையில் ஆட
நான் நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஹோ

பெண்: தோளில் ஒரு சில நாளில்
தனியென ஆனால்
தரையினில் மீன் ஹ்ம்ம் ஹ்ம்ம்

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
நான் நானா
கேட்டேன் என்னை நானே

ஆண்: நான் நானா
கேட்டேன் என்னை நானே

பெண்: முன்பே வா என் அன்பே வா
பூ பூவாய் பூப்போம் வா

ஆண்: நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா

பெண்: தேன் மழை தேக்குக்கு நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா

ஆண்: நீரும் செம்புலச் சேறும்
கலந்தது போலே கலந்தவர் நாம்

பெண்: முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூ பூவாய் பூப்போம் வா

ஆண்: நான் நானா
கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா

பெண்: முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூ பூவாய் பூப்போம் வா

குழு: ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி
வளையல் சத்தம்
ஜல் ஜல் ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை
வண்ணம் மின்ன

ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி
வளையல் சத்தம்
ஜல் ஜல் ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை
வண்ணம் மின்ன

*****
2. நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
படம் : சில்லுனு ஒரு காதல் (2006)
பாடியவர் : ஏ.ஆர். ரஹ்மான்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
இயற்றியவர் : வாலி

வீடியோ


ஆண் : நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது

ஆண் : நான்கு கண்ணாடி
சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

ஆண் : நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது

ஆண் : நான்கு கண்ணாடி
சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

குழு : ஓஓஓ ஓஓஓ ஓ ஓ
ஓஓஓ ஓஓஓ ஓ ஓ
ஓஓஓ ஓஓஓ ஓ ஓ

ஆண் : பேச்செல்லாம்
தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க
நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க
நீ இல்லை

ஆண் : விழியில் விழும்
தூசி தன்னை அவன் எடுக்க நீ
இங்கு இல்லை மனதில்
எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை

ஆண் : நான் இங்கே
நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள்
வருஷம் ஆனதேனோ

ஆண் : வான் இங்கே
நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும்
விளக்கமானதேனோ ஓஓஓ ஓஓஓ

பெண் : நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது

குழு : ஓஓஓ ஓஓஓ ஓ ஓ
ஓஓஓ ஓஓஓ ஓ ஓ

ஆண் : நாட்குறிப்பில்
நூறு தடவை
உந்தன் பெயரை
எழுதும் என் பேனா
எழுதியதும்
எறும்பு மொய்க்க
பெயரும் ஆனதென்ன தேனா

குழு : ஓஓஓ ஓஓஓ ஓ ஓ

ஆண் : சில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம்
கோடை ஆனதேனோ

குழு : ஓஓஓ ஓஓஓ ஓ ஓ

ஆண் : வா அன்பே
நீயும் வந்தால்
செந்தணல் கூட
பனிகட்டி போல
மாறுமே யே யே யே யே

பெண் : நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது

ஆண் : நான்கு கண்ணாடி
சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

*****