|
|
மன்மதன் நடிப்பு
சிலம்பரசன், ஜோதிகா, கவுண்டமணி, சிந்து தொலானி, அதுல் குல்கர்னி, சந்தானம், சத்யன்பாடல்கள்
வாலி, சிநேகன், நா. முத்துக்குமார், பா.விஜய்இசை
யுவன் ஷங்கர் ராஜாஒளிப்பதிவு
ஆர்.டி. ராஜசேகர், எஸ். மூர்த்திபடத்தொகுப்பு
அந்தோணிகதை
சிலம்பரசன், ஏ.ஜே. முருகன்வசனம்
பாலகுமரன்இயக்கம்
ஏ.ஜே. முருகன்தயாரிப்பு
எஸ். கே. கிருஷ்ணகாந்த்தயாரிப்பு நிறுவனம்
இந்தியன் தியேட்டர் புரொடக்ஷன்வெளீயீடு:
12 நவம்பர் 2004வீடியோ ஏ. ஜே. முருகன் இயக்கத்தில், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த மன்மதன் திரைப்படத்தில் சிலம்பரசன் ஜோதிகா, கவுண்டமணி, சந்தானம், சிந்து துலானி மற்றும் பலர் நடித்துள்ளனர். சிலம்பரசன் இப்படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். எஸ். கே. கிருஷ்ணகாந்த் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில், 12 நவம்பர் 2004 ஆம் தேதி வெளியானது. இப்படம் 365 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்ட ஒரு வெற்றிப் படமாகும். தெலுங்கு மொழியில் ‘மன்மதா’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டும், கன்னட மொழியில் ‘மதனா’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். பா. விஜய், வாலி, சிநேகன் மற்றும் நா. முத்துக்குமார் ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதியிருந்தனர். இப்படத்தின் 6 பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 1 ஜூலை 2004 அன்று வெளியானது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வண்ணத் திருத்தம் செய்யப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் மன்மதன் ஆகும். இந்திய தனிக்கைக் குழு இப்படத்திற்கு "ஏ" சான்றிதழ் வழங்கியது. ரூபாய் ஐந்து கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், முதலில் 140 ஒளிப்பதிவுகளுடன் வெளியானது. இருப்பினும், பிற தீபாவளி வெளியீடுகளான அட்டஹாசம், நெரஞ்சா மனசு மற்றும் சத்ரபதி போன்ற படங்களின் போட்டியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. ஊடகங்களில் வந்த விமர்சனங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வாய் வார்த்தைகளால் இரண்டாவது வாரத்தில் இப்படம் அட்டகாசம் திரைப்படத்தை விட முன்னேறியது. ***** பாடல்கள்
1. மன்மதனே நீ கலைஞன் தான்
படம் : மன்மதன் (2004) இசை : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர்: சினேகன் பாடியவர் : சாதனா சர்கம் வீடியோ மன்மதனே நீ கவிஞன் தான் மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலன் தான் என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியல உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை இருபது வருடம் உன்னைப் போல் எவனும் என்னையும் மயக்கவில்லை எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை இருபது வருடம் உன்னைப் போல் எவனும் என்னையும் மயக்கவில்லை மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன் தான் மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலன் தான் நானும் ஓர் பெண் என பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன் உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன் எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டே இருக்கிறாய் எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய் அழகாய் நானும் மாறுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன் சுகமாய் நானும் மலருகிறேன் உனக்கேதும் தெரிகிறதா? ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் சரித்திரமோ ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் சரித்திரமோ மன்மதனே உன்னை பார்க்கிறேன் மன்மதனே உன்னை ரசிக்கிறேன் மன்மதனே உன்னை ருசிக்கிறேன் மன்மதனே உன்னில் வசிக்கிறேன் உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பேரை வைக்கவோ அடிமை சாசனம் எழுதித் தருகிறேன் என்னை ஏற்று கொள்ளு ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துகொள்ளு அடிமை சாசனம் எழுதித் தருகிறேன் என்னை ஏற்று கொள்ளு ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துகொள்ளு *****
|