உன்னை நினைத்து

நடிப்பு
சூர்யா, சினேகா, லைலா, ரமேஷ் கண்ணா, டெல்லி கணேஷ், தலைவாசல் விஜய்

பாடல்கள்
ர. ரவிசங்கர், கலைகுமார், ப. விஜய், ந. முத்துக்குமார்

இசை
சிற்பி

ஒளிப்பதிவு
பாலசுப்ரமணியம்

படத்தொகுப்பு
வி. ஜெய்சங்கர்

கதை, இயக்கம்
விக்ரமன்

தயாரிப்பு
கே. முரளிதரன், வி. சுவாமிநாதன், ஜி. வேணுகோபால்

தயாரிப்பு நிறுவனம்
லட்சுமி மூவி மேக்கர்ஸ்

வெளீயீடு:
10 மே 2002

வீடியோ


*****

பாடல்கள்
1. என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
படம் : உன்னை நினைத்து (2002)
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : இளையராஜா, எஸ். ஜானகி

வீடியோ


ஆஆஆ ஆஆஆ
ம்ம்ம் ம்ம்ம்

என்னைத் தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும்
பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா?
இல்லை தீ என்பதா?
அந்த ஆகாயம் நிலம் காற்று
நீ என்பதா?
உன்னை நான் என்பதா?

என்னைத் தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும்
பொன் ஊஞ்சல் நான் அல்லவா

ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

நதியாக நீயும்
இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை
கரையாகிறேன்

இரவாக நீயும்
நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை
உயிர் வாழ்கிறேன்

முதல் நாள் என் மனதில்
விதையாய் நீ இருந்தாய்
மறுநாள் பார்கையிலே
வனமாய் மாறிவிட்டாய்
நாடித் துடிப்போடு
நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்

என்னைத் தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும்
பொன் ஊஞ்சல் நான் அல்லவா

பூலோகம் ஓர் நாள்
காற்றின்றி போனால்
எந்தன் உயிர்
உந்தன் மூச்சு காற்றாகுமே

ஆகாயம் ஓர்நாள்
விடியாமல் போனால்
எந்தன் ஜீவன்
உந்தன் கையில் விளக்காகுமே

அன்பே நான் இருந்தேன்
வெள்ளைக் காகிதமாய்
என்னில் நீ வந்தாய்
பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால்
அதில் நானே திரி ஆகிறேன்
தினம் திரியாகிறேன்

என்னைத் தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும்
பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா?
இல்லை தீ என்பதா?
அந்த ஆகாயம்
நிலம் காற்று நீ என்பதா?
உன்னை நான் என்பதா?

என்னைத் தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும்
பொன் ஊஞ்சல் நான் அல்லவா

*****


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020