ரன்

run
நடிப்பு
மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவரன், அதுல் குல்கர்னி, அனுஹாசன்,

பாடல்கள்
நா. முத்துக்குமார், பா. விஜய், யுகபாரதி, அறிவுமதி, தாமரை, விவேகா

இசை
வித்யாசாகர்

ஒளிப்பதிவு
ஜீவா

படத்தொகுப்பு
வி.டி. விஜயன்

வசனம்
மோனா. பழனிசாமி

இயக்கம்
லிங்குசாமி

தயாரிப்பு
ஏ.எம். ரத்னம்

தயாரிப்பு நிறுவனம்
ஸ்ரீ சூர்யா மூவிஸ்

வெளீயீடு:
5 செப்டம்பர் 2002

லிங்குசாமியின் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த ரன் திரைப்படத்தில், மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகை மீராஜாஸ்மின் அறிமுகமான முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.
*****

பாடல்கள்
1. காதல் பிசாசே
படம் : ரன் (2002)
இசை : வித்யாசாகர்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : உதித் நாராயண், சுஜாதா மோகன்

வீடியோ


பெண்: நா நன நா
நா நன நா
நானா நா நனா

நா நன நா
நா நன நா
நானா நா நனா

ஆண்: காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை

காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை

தனிமைகள் பரவாயில்லை
தவிப்புகளும் பரவாயில்லை
கனவென்னை கொத்தி தின்றால் பரவாயில்லை

இரவுகளும் பரவாயில்லை
இம்சைகளும் பரவாயில்லை
இப்படியே செத்துப் போனால்
பரவாயில்லை

குழு: காதல் பிசாசே
லவ் லவ் லவ் லே
காதல் பிசாசே
லவ் லவ் லவ் லே
காதல் பிசாசே
லவ் லவ் லவ் லே
காதல் பிசாசே

உல்லே லே லே
லே லே லேலோ
உல்லே லே லோ

உல்லே லே லே
லே லே லேலோ
லே லே லேலோ

உல்லே லே லே
லே லே லேலோ
உல்லே லே லோ

உல்லே லே லே
லே லே லேலோ
லே லே லேலோ

ஆண்: கொஞ்சம் உளறல்
கொஞ்சம் சிணுங்கல்
ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ

பெண்: கொஞ்சம் சிணுங்கல்
கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ

ஆண்: அய்யோ அய்யய்யோ
என் மீசைக்கும் பூவாசம் நீ
தந்து போனாயடி

பெண்: பையா ஏ பையா
என் சுவாசத்தில்
ஆண் வாசம் நீயென்று ஆனாயடா

ஆண்: அடிபோடி குறும்புக்காரி
அழகான கொடுமைக்காரி
மூச்சு முட்ட முத்தம் தந்தால்
பரவாயில்லை

ஆண்: காதல் பிசாசே காதல் பிசாசே

பெண்: ஏதோ சௌக்கியம் பரவாயில்லை

ஆண்: காதல் பிசாசே காதல் பிசாசே

பெண்: நானும் அவஸ்தையும் பரவாயில்லை

குழு: காதல் பிசாசே காதல் பிசாசே

ஆண்: கொஞ்சம் சிரித்தாய்
கொஞ்சம் மறைத்தாய்
வெட்கக் கவிதை நீ நீ நீ

பெண்: கொஞ்சம் துடித்தாய்
கொஞ்சம் நடித்தாய்
ரெட்டை பிறவி நீ நீ நீ

ஆண்: அம்மா அம்மம்மா
என் தாயோடும் பேசாத
மௌனத்தை நீயே சொன்னாய்

பெண்: அப்பா அப்பப்பா
நான் யாரோடும் பேசாத
முத்தத்தை நீயே தந்தாய்

ஆண்: அஞ்சு வயதுப் பிள்ளைபோலே
அச்சச்சோ கூச்சத்தாலே
கொஞ்சிக் கொஞ்சி
என்னைக் கொன்றால் பரவாயில்லை

பெண்: காதல் பிசாசே காதல் பிசாசே
ஆண்: ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
பெண்: காதல் பிசாசே காதல் பிசாசே
ஆண்: நானும் அவஸ்தையும் பரவாயில்லை

பெண்: தனிமைகள்
ஆண்: பரவாயில்லை
பெண்: தவிப்புகள்
ஆண்: பரவாயில்லை
கனவென்னை கொத்தி
தின்றால் பரவாயில்லை

ஆண்: இரவுகளும்
பெண்: பரவாயில்லை
ஆண்: இம்சைகளும்
பெண்: பரவாயில்லை
ஆண்: இப்படியே செத்துப்
போனால் பரவாயில்லை

குழு: லே லே உல்லே லே
லே லே உல்லே லே
லே லே உல்லே லே
லே லே உல்லே லே

லே லே உல்லே லே
லே லே உல்லே லே
லே லே உல்லே லே
லே லே உல்லே லே

*****