மின்னலே

நடிப்பு
மாதவன், அப்பாஸ், ரீமா சென், விவேக், நாகேஷ், கிட்டி, பாத்திமா பாபு

பாடல்கள்
வாலி, தாமரை

இசை
ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு
ஆர்.டி.ராஜசேகர், ரவி வர்மன்

படத்தொகுப்பு
சுரேஷ் அர்ஸ்

இயக்கம்
கௌதம் மேனன்

தயாரிப்பு
டாக்டர் முரளி மனோகர்

தயாரிப்பு நிறுவனம்
சி ஐ டிவி எண்டர்டெயிண்மெண்ட்

வெளீயீடு:
18 பிப்ரவரி 2001

     2001 ஆம் ஆண்டு மின்னலே திரைப்படம் வெளிவந்தது. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் மாதவன், அப்பாஸ், ரீமா சென், விவேக், நாகேஷ், கிட்டி, பாத்திமா பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

     இத்திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் அறிமுகமானார்.

     இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அமைத்தவர் ஹாரிஸ் ஜயராஜ் ஆவார். பாடல் வரிகளை வாலி மற்றும் தாமரை ஆகியோர் எழுதியுள்ளனர்.

     தாமரை எழுதிய ‘வசீகரா’ பாடல், தமிழ் திரைப்படத்தில் முதன் முதலாக பெண் ஒருத்தியின் காதல் உணர்வு, பெண் பார்வையில் எழுதப்பட்ட பாடலாக பதிவாகி இருக்கிறது.

வீடியோ


*****
பாடல்கள்
1. வசீகரா என் நெஞ்சினிக்க
படம் : மின்னலே (2001)
பாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயற்றியவர் : தாமரை

வீடியோ


வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே நான்

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சினேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குளே நான் வேண்டும்

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

தீரும்... தீரும்...

லஹிலஹிலா லஹிலஹிலா லஹிலஹிலா லஹிலஹிலா
லஹிலஹிலா லஹிலஹிலா லஹிலஹிலா லஹிலஹிலா
லஹிலஹிலஹிலஹிலஹிலஹிலஹிலஹி லா லா லா லா
லஹிலஹிலஹிலஹிலஹிலஹிலஹிலஹி லா லா லா லா

தினம் நீ குளித்ததும் என்னைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன்
தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்ல கூடத் தெரியாதே
காதலெனும் முடிவெளியில் கடிகார நேரம் கிடையாதே

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே நான்

*****


புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)
வா வா என் வீணையே - சட்டம் (1983)
தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982)
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982)
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982)
ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982)
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979)
மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964)
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978)
ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979)
கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021)
கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |



1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021