சேது

sethu
நடிப்பு
விக்ரம், அபிதா, சிவகுமார், ஸ்ரீமான், எஸ்.எஸ். ராமன், மோஹன் வைத்யா, அஞ்சு மகேந்திரா, ஜோதிலட்சுமி, மனோபாலா

பாடல்கள்
பொன்னடியான், அறிவுமதி, பழனிபாரதி

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
ஆர். ரத்னவேலு

படத்தொகுப்பு
ரகு பாபு

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
பாலா

தயாரிப்பு
ஏ. கந்தசாமி

தயாரிப்பு நிறுவனம்
ஸர்மதா புரொடக்ஷன்ஸ்

வெளீயீடு:
10 டிசம்பர் 1999

வீடியோ


*****

பாடல்கள்
1. எங்கே செல்லும் இந்த பாதை
படம் : சேது (1999)
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: அறிவுமதி
பாடியவர் : இளையராஜா

வீடியோ


ஆண் : எங்கே செல்லும்
இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்

குழு : ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ
ஓஓ ஒஹோ ஓஓ ஹோ

ஆண் : எங்கே செல்லும்
இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
காலம் காலம்
சொல்ல வேண்டும்
யாரோ உண்மை அறிவார்

ஆண் : நேரத்திலே நான்
ஊர் செல்ல வேண்டும்
வழி போக துணையாய்
அன்பே வாராயோ

ஆண் : எங்கே செல்லும்
இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்

ஆண் : ஊரை விட்டு ஓ

ஓர் குடிசை
அங்கே யார் சென்று
போட்டு வைத்தார்
காதலிலே ஓர் பைத்தியமே
சொர்க்கம் அதுவென்றே
கட்டி வைத்தார்
காணும் கனவுகளில்
இன்பம் இன்பம்
உண்மை அதற்கு வெகு
தூரம் தூரம்
காதல் என்றால்
ஓ வேதனையா

ஆண் : எங்கே செல்லும்
இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
காலம் காலம்
சொல்ல வேண்டும்
யாரோ உண்மை அறிவார்

ஆண் : மண் கேட்டா
அந்த மழை பொழியும்
மேகம் பொழியாமல்
போவதுண்டா
கரை கேட்டா
அந்த அலைகள் வரும்
அலைகள் தழுவாமல்
போவதுண்டா
கண்ணீர் மழை உந்தன்
முன்னே முன்னே
காதல் மழையை பொழி
கண்ணே கண்ணே
என் உயிரே ஓ என் உயிரே

ஆண் : எங்கே செல்லும்
இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
காலம் காலம்
சொல்ல வேண்டும்
யாரோ உண்மை அறிவார்

ஆண் : நேரத்திலே நான்
ஊர் செல்ல வேண்டும்
வழி போக துணையாய்
அன்பே வாராயோ

ஆண் : எங்கே செல்லும்
இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
காலம் காலம்
சொல்ல வேண்டும்
யாரோ உண்மை அறிவார்

*****
2. மாலை என் வேதனை கூட்டுதடி
படம் : சேது (1999)
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: அறிவுமதி
பாடியவர்கள் : பி. உன்னிகிருஷ்ணன், அருண்மொழி & எஸ்.என். சுரேந்தர்

வீடியோ


ஆண் : மாலை என்
வேதனை கூட்டுதடி
காதல் தன்
வேலையை காட்டுதடி

ஆண் : என்னை வாட்டும்
வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு
எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ

ஆண் : வேதனை சொல்லிடும்
ராகத்திலே
வேகுதே என் மனம்
மோகத்திலே... ஏ

ஆண் : மாலை என்
வேதனை கூட்டுதடி
காதல் தன்
வேலையை காட்டுதடி

ஆண் : காதலில் தோற்றவர்
கதை உண்டு இங்கே ஆயிரம்
ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...

ஆண் : வேண்டாத பேச்சுக்கள்
ஏன்டா அம்பி

ஆண் : காதலும் பொய்யும் இல்லை
உண்மை கதை மண்ணில் ஆயிரம்
ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...

ஆண் : உன் காதல் சஸ்பென்ஸ்
என்ன அம்பி

ஆண் : காதல் செஞ்சா பாவம்
அந்த ஆதாம் காலத்தில்

ஆண் : எதுக்கு வீணா சோகம்
கதைய முடிடா நேரத்தில்

ஆண் : பூங்கிளி கைவரும்
நாள் வருமா... ஆ
பூமியில் சொர்கமும்
தோன்றிடுமா... ஆ...

ஆண் : மாலை என்
வேதனை கூட்டுதடி
காதல் தன்
வேலையை காட்டுதடி

ஆண் : காற்று விடும் கேள்விக்கு
மலர் சொல்லும்
பதில் என்னவோ
ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...

ஆண் : வாசங்கள் பேசாத
பதிலா தம்பி...

ஆண் : மேகம் விடும் கேள்விக்கு
வெண்ணிலவின் பதில் என்னவோ
ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...

ஆண் : கடல் ஆடும்
அலை கூட
பதில்தான் தம்பி...

ஆண் : அவளின் மௌனம் பார்த்து
பதை பதிக்கும் என் மனம்

பெண் : வேண்டாத எண்ணம்
வரும் காதல் திருமணம்

ஆண் : மோகமுள் நெஞ்சிலே
பாய்கிறதே...
என் மனம் அவள் மடி
சாய்கிறதே ஏ...

ஆண் : மாலை என்
வேதனை கூட்டுதடி
காதல் தன்
வேலையை காட்டுதடி

ஆண் : என்னை வாட்டும்
வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு
எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ

ஆண் : வேதனை சொல்லிடும்
ராகத்திலே
வேகுதே என் மனம்
மோகத்திலே... ஏ...

ஆண் : மாலை என்
வேதனை கூட்டுதடி
காதல் தன்
வேலையை காட்டுதடி

*****