|
|
செய்திகள் (Last Updated: 18 செப்டம்பர் 2025 22:22 IST) | ||
|
காதலர் தினம் ![]() நடிப்பு
குணால், சோனாலி பிந்த்ரே, நாசர், மணிவண்ணன், கவுண்டமணி, சின்னி ஜெயந்த், பெரியார்தாசன், ராகசுதா, ரம்பா, லேகா வாசிங்டன்பாடல்கள்
வாலிஇசை
ஏ.ஆர். ரஹ்மான்ஒளிப்பதிவு
பி.சி. ஸ்ரீராம்படத்தொகுப்பு
பி. லெனின், வி.டி. விஜயன்திரைக்கதை, இயக்கம்
கதிர்தயாரிப்பு
ஏ.எம். ரத்னம்தயாரிப்பு நிறுவனம்
ஸ்ரீ சூர்யா மூவிஸ்வெளீயீடு:
14 ஏப்ரல் 1999***** பாடல்கள்
1. ரோஜா ரோஜா
படம் : காதலர் தினம் (1999) இசை : ஏ.ஆர். ரஹ்மான் பாடலாசிரியர்: வாலி பாடியவர் : பி. உன்னிகிருஷ்ணன் வீடியோ ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ஆண் : கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன் உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன் உனை வேறு கைகளில் தரமாட்டேன் நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன் ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ஆண் : நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன் நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன் உடையென எடுத்து எனை உடுத்து நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா ஆண் : உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன ஓர் நாள் உனைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே ஆண் : மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும் வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும் உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று ரோஜா ரோஜா ரோஜா ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன் ஆண் : இளையவளின் இடையொரு நூலகம் படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம் இடைவெளி எதற்கு சொல் நமக்கு உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன ஆண் : என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல் என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல் நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே ஆண் : விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே எனக்கு நீ உனைத் தர எதற்கு ஆராய்ச்சியே உனை விட வேறு நினைவுகள் ஏது ரோஜா ரோஜா ரோஜா ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன் ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா *****
2. என்ன விலையழகே
படம் : காதலர் தினம் (1999) இசை : ஏ.ஆர். ரஹ்மான் பாடலாசிரியர்: வாலி பாடியவர் : உன்னி மேனன் வீடியோ என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக் கண்டு வியந்து போகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஆண் : என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓஓஓ ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஆண் : படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே ஆண் : அழகைப் படைக்கும் திறமை முழுக்க உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது விடிய விடிய மடியில் கிடக்கும் பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி ஆண் : விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு ஆண் : பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே ஆண் : பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே உந்தன் அழகுக்கில்லை ஈடு ஆண் : என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓஓஓ ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஆண் : உயிரே உனையே நினைந்து விழி நீர் மழையில் நனைந்து இமையில் இருக்கும் இரவு உறக்கம் கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு நிலவு எரிக்க நினைவு கொதிக்க ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு ஆண் : தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன் ஆண் : உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே ஆண் : உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன்னவாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல உயிரே ஆண் : உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன்னவாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல லலலா உனை நானும் சேரும் நாள்தான் ஆண் : என்ன விலையழகே என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓஓஓ ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் *****
|