பூவே உனக்காக

Poove Unakkaga
நடிப்பு
விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நாகேஷ், எம்.என். நம்பியார், மலேசியா வாசுதேவன், ஜெய் கணேஷ், மீசை முருகேசன், மதன் பாப்

பாடல்கள்
பழனி பாரதி

இசை
எஸ்.ஏ. ராஜ்குமார்

ஒளிப்பதிவு
எஸ். சரவணன்

படத்தொகுப்பு
வி. ஜெய்சங்கர்

கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்
விக்ரமன்

தயாரிப்பு
ஆர்.பி. சௌத்ரி

தயாரிப்பு நிறுவனம்
சூப்பர் குட் மூவிஸ்

வெளீயீடு:
15 பிப்ரவரி 1996

வீடியோ


*****

பாடல்கள்
1. சொல்லாமலே யாா் பாா்த்தது
படம் : பூவே உனக்காக (1996)
இசை : எஸ்.ஏ. ராஜ்குமாா்
பாடலாசிரியர்: பழனி பாரதி
பாடியவர்கள் : பி. ஜெயச்சந்திரன், சுஜாதா மோகன்

வீடியோ


பெண் : சொல்லாமலே
யாா் பாா்த்தது
நெஞ்சோடுதான்
பூ பூத்தது

பெண் : சொல்லாமலே
யாா் பாா்த்தது
நெஞ்சோடுதான்
பூ பூத்தது
மழை சுடுகின்றதே
அடி அது காதலா
தீ குளிா்கின்றதே
அடி இது காதலா
இந்த மாற்றங்கள்
உன்னாலே உருவானதா

குழு : ஆஆஆ ததித தநிநிச
ஆஆஆ ததித தநிநிச

குழு : நெஞ்சத்தை தொட்டு தொட்டு
காதல் சொல்லும் பச்சைக்கிளி
மொட்டுக்கள் என்ன சத்தம்
மெல்ல வந்து சொல்லடி

பெண் : சொல்லாமலே
யாா் பாா்த்தது

ஆண் : மல்லிகைப்பூ வாசம்
என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை
முள்ளை போல குத்துகின்றது

பெண் : நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது

ஆண் : கண்ணே உன் முந்தானை
காதல் வலையா
உன் பாா்வை குற்றால
சாரல் மழையா

பெண் : அன்பே உன் ராஜாங்கம்
எந்தன் மடியா
நீ மீட்டும் பொன்வீணை
எந்தன் இடையா

ஆண் : இதயம் நழுவுதடி
உயிரும் கரையுதடி
உன்னோடுதான்

குழு : ஆஆஆ ததித தநிநிச
ஆஆஆ ததித தநிநிச

குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப் போல
பற்றிக் கொள்ளு கண்மணி

பெண் : சொல்லாமலே
யாா் பாா்த்தது

பெண் : கண்ணுக்குள்ளே
உந்தன் முகம்
ஒட்டிக்கொண்டது
சுக சொப்பனங்கள்
என்னை வந்து
சுற்றிக்கொண்டது

ஆண் : என்னை விட்டு
தென்றல் கொஞ்சம்
தள்ளிச்சென்றது
நான் உந்தன் பேரை
சொன்னபோது
அள்ளிக்கொண்டது

பெண் : அன்பே நான் எந்நாளும்
உன்னை நினைத்து
புல் மீது பூவானேன்
தேகம் இளைத்து

ஆண் : வில்லோடு அம்பாக
என்னை இணைத்து
சொல்லாத சந்தோச
யுத்தம் நடத்து

பெண் : உலக அதிசயத்தில்
ஒன்று கூடியது
நம் காதலால்

குழு : ஆஆஆ ததித தநிநிச
ஆஆஆ ததித தநிநிச

குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப் போல
பற்றிக் கொள்ளு கண்மணி

பெண் : சொல்லாமலே
யாா் பாா்த்தது
நெஞ்சோடுதான்
பூ பூத்தது

பெண் : மழை சுடுகின்றதே
அடி அது காதலா
தீ குளிா்கின்றதே
அடி இது காதலா
இந்த மாற்றங்கள்
உன்னாலே உருவானதா

பெண் : சொல்லாமலே
யாா் பாா்த்தது

*****
2. மச்சினிச்சி வர்ற நேரம்
படம் : பூவே உனக்காக (1996)
இசை : எஸ்.ஏ. ராஜ்குமாா்
பாடலாசிரியர்: பழனி பாரதி
பாடியவர்கள் : டி.எல். மகாராஜன், சுஜாதா மோகன், உன்னிகிருஷ்ணன், சுனந்தா

வீடியோ


தில்லானா கூத்துன்னா எங்கேடி அம்மா
திரிசங்கி என்றல்லோ சலியேதோ அம்மா
பொழுது விடிஞ்சாச்சு நிலமிருக்கு ஏம்மா
உச்சி வெயில் கூட குளிருதிங்க ஏம்மா
குளிருதிங்க ஏம்மா குளிருதிங்க ஏம்மா

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு
கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க
வாசல் எங்கும் கோலம் போட

நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு
கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க
வாசல் எங்கும் கோலம் போட

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

மச்சினிச்சி கொலுசு சத்தம்
வீட்ட சுத்தி பாட்டு பாட
மண்ணும் கல்லும் பாதம் தொட்டு
மல்லிகையா மாறி போக
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

தண்ணி ஊத்துறா
மஞ்ச தண்ணி ஊத்துறா
மாமன்காரன் மயங்கி நின்னா
வெண்ணி ஊத்துறா

தண்ணி ஊத்துறா
மஞ்ச தண்ணி ஊத்துறா
மாமன்காரன் மயங்கி நின்னா
வெண்ணி ஊத்துறா

பூவப்போல மனசுக்குள்ள
புயலப்போல வந்த புள்ள
திண்டுக்கல்லு பூட்ட போட்டு
பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள

பூவப்போல மனசுக்குள்ள
புயலப்போல வந்த புள்ள
திண்டுக்கல்லு பூட்ட போட்டு
பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு
கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க
வாசல் எங்கும் கோலம் போட

நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு
கட்டி வச்சேன் வந்து ஆட
தேவதைய கூட்டி வாங்க
வாசல் எங்கும் கோலம் போட

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது

*****