|
|
பசும்பொன் நடிப்பு
சிவாஜி கணேசன், பிரபு, சிவக்குமார், ராதிகா, சரண்யா, பொன்வண்ணன், விக்னேஷ், வடிவேலு, இளவரசு, யுவராணி, செண்பகம், பெரிய கருப்பு தேவர், தேனி குஞ்சரம்மாள்பாடல்கள்
வைரமுத்துஇசை
வித்யாசாகர்ஒளிப்பதிவு
B. கண்ணன்படத்தொகுப்பு
K. பழனிவேல்கதை, வசனம்
சீமான்திரைக்கதை, இயக்கம்
பாரதிராஜாதயாரிப்பு
V. மோகன், V. நடராஜன்தயாரிப்பு நிறுவனம்
ஆனந்தி பிலிம்ஸ்வெளீயீடு:
14 ஏப்ரல் 1995வீடியோ பசும்பொன் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில், சீமான் கதை, திரைக்கதை எழுதி வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பிரபு, சிவக்குமார், ராதிகா, சரண்யா, பொன்வண்ணன், விக்னேஷ், வடிவேலு, இளவரசு, யுவராணி, செண்பகம், பெரிய கருப்பு தேவர், தேனி குஞ்சரம்மாள் மற்றும் பலர் நடித்திருந்தனர். ***** பாடல்கள்
1. தாமரைப் பூவுக்கும்
படம் : பசும்பொன் (1995) இசை : வித்யாசாகர் பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : சுஜாதா மோகன், கிருஷ்ணசந்தர் வீடியோ தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல பெண்: கம்பங் கூழில் போட்ட உப்பு கஞ்சி எல்லாம் சேர்தல் போல கண்ட போதே இந்த மூஞ்சி நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள ஆண்: நாக்குல மூக்கையே ஹேஹே தொட்டவன் நானடி பார்வையால் உசுரையே ஓகோ தொட்டவ நீயடி பெண்: தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல ஆண்: மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல ஆண்: ஐயாறெட்டு நெல்லைப் போல அவசரமா சமஞ்ச அயித்த மக பஞ்சத்துக்கு ஆதரமா அமஞ்ச பெண்: குட்டிபோட்ட பூனைப் போல காலச் சுத்திக் கொழஞ்ச பாவமென்னு நீவி விட்டா கல்லுப் போட துணிஞ்ச ஆண்: சொந்தக்காரன் நான்தானே தொட்டுப் பாக்கக் கூடாதா பெண்: கன்னம்தொடும் கை ரெண்டும் கீழே கொஞ்சம் நீளாதா ஆண்: இந்த நாட்டில் தீண்டமைதான் இன்னும் உள்ளதா பெண்: வயசுக்கு வந்தப் பூ ஒகோ ஆசையே பேசுமா வண்டுக்கும் பூவுக்கும் ஒகோ சண்டையா சத்தமா ஆண்: தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல பெண்: மாமன அள்ளி நான் தாவணி போட்டுக்க மாலையும் சூடவில்ல பெண்: கம்மாக்குள்ள ஒத்த மரம் அங்கே போவோம் மாமா கம்மாத்தண்ணி வத்தும் போது திரும்பிறுவோம் மாமா ஆண்: நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன் நீயும் கொஞ்சம் வாம்மா அங்கே இங்கே கையிப்படும் சொல்லிபுட்டேன் ஆமா பெண்: நிலாக் கறையை அழிச்சாலும் உன்னைத் திருத்த முடியாது ஆண்: பொரட்டிப்போட்டு அடிக்காம ஆமை ஓடு ஒடையாது பெண்: போகப் போக மாமனுக்கு புத்தி மாறுது ஆண்: கிள்ளவா அள்ளவா ஓகோ சொல்லடி செய்யலாம் வேட்டியா சேலையா ஒகோ பட்டிமன்றம் வைக்கலாம் பெண்: தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல ஆண்: மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல பெண்: கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சி எல்லாம் சேர்தல் போல ஆண்: கண்ட போதே இந்த மூஞ்சி நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள பெண்: மாமனே மாமனே ஒகோ ஓங்கிட்ட ஒட்டவா பூமிக்கும் வேருக்கும் ஓகோ சண்டையா சத்தமா *****
|