|
|
ஆசை நடிப்பு
அஜித் குமார், சுவலட்சுமி, ரோகிணி, பிரகாஷ் ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், வடிவேலு, நிழல்கள் ரவிபாடல்கள்
வாலி, வைரமுத்துஇசை
தேவாஒளிப்பதிவு
ஜீவாபடத்தொகுப்பு
பி. லெனின், வி. டி. விஜயன்கதை, இயக்கம்
வஸந்த்தயாரிப்பு
மணிரத்னம், எஸ். ஸ்ரீராம்தயாரிப்பு நிறுவனம்
ஆலயம்வெளீயீடு:
8 செப்டம்பர் 1995ஆசை திரைப்படம் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில், 1995 ஆம் ஆண்டு வெளியான காதல் திரில்லர் திரைப்படமாகும். இப்படத்தில் அஜித் குமார் மற்றும் அறிமுக நடிகை சுவலட்சுமி, பிரகாஷ் ராஜ், ரோகிணி, பூர்ணம் விஸ்வநாதன், நிழல்கள் ரவி மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஒரு இராணுவ மேஜர் தனது மைத்துனியின் மீது ஆசைப்படுவதையும், அவளது காதலனுடனான உறவைக் கெடுக்க முயற்சிப்பதையும் பற்றியதாகும். இப்படத்திற்கு ஜீவா ஒளிப்பதிவு செய்ய, தேவா இசையமைத்துள்ளார். 9 செப்டம்பர் 1995 இல் வெளியான இந்தத் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் பெரு வெற்றி பெற்றது. படத்தின் தயாரிப்பின் போது பூவெல்லாம் கேட்டுப்பார், தேவா மற்றும் கண்ணே ஆகியவை இப்படத்தின் அப்போதைய தலைப்புகளாக இருந்தன. ஆனால் வசந்த் ‘ஆசை’ என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தார், ஏனெனில் அது கதாநாயகன் மற்றும் வில்லன் இருவரையும் பற்றியது. அவர்கள் (1977) படத்தின் ரஜினிகாந்த் கதாபாத்திரம் மற்றும் உதிரிப்பூக்கள் படத்தின் விஜயன் கதாபாத்திரம் ஆகியவற்றிலிருந்து ஈர்க்கப்பட்ட இயக்குநர் வசந்த், அதே பாணியில் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கினார். இப்படத்தில் முதலில் நடிகர் சிவகுமாரின் மகன் சரவணனை (பின்னர் சூர்யா) நாயகனாக படத்தில் அறிமுகம் செய்ய வசந்த் முன்வந்தார், ஆனால் அச்சமயம் நடிப்பில் சரவணனுக்கு (சூர்யா) ஆர்வம் இல்லாததால் அவர் மறுத்துவிட்டார். பின்னர் வசந்த் மற்றும் இணை தயாரிப்பாளர் எஸ். ஸ்ரீராம் இருவரும் தூர்தர்ஷனில் ஒரு வேட்டி விளம்பரத்தில் நடிகர் அஜித் குமார் நடித்ததை பார்த்துவிட்டு அவரை இப்படத்தில் நடிக்க தேர்வு செய்தனர். இப்படத்தில் நடிகர் சுரேஷ் அஜித்தின் குரலுக்கு டப்பிங் பேசினார். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு முதலில் மனோஜ் கே. ஜெயனை நடிக்க வைக்க வசந்த் எண்ணினார். ஆனால் பின்னர் தனது வழிகாட்டியான கே.பாலச்சந்தரால் பரிந்துரைக்கப்பட்ட பிறகு பிரகாஷ்ராஜை அப்பாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்தார். பெங்காலித் திரைப்படமான உத்தோரனில் சுவலட்சுமியின் நடிப்பைப் பார்த்த வசந்த், சுவலட்சுமியை நாயகியாக நடிக்க வைத்தார். பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம், கதாநாயகியின் இடத்திலிருந்து வெகு தொலைவில் இருக்க வேண்டும் என்பதற்காக வசந்த் டெல்லி பின்னணியைத் தேர்ந்தெடுத்தார். படத்தில் மாதவன் கதாபாத்திரம் ‘கறையற்ற தொழில் சாதனை’யைக் கொண்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று உறுதியளித்த பிறகு, படத்தின் ராணுவ அணிவகுப்புக் காட்சியானது, சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் படமாக்கப்பட்டது. தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குனர் வசந்தும் இசையமைப்பாளர் தேவாவும், இப்படத்திற்கு முன்பு தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் வாலி மற்றும் வைரமுத்து இருவரும் தலாமூன்று பாடல்களை எழுதியுள்ளனர். இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. வசந்துக்கு சிறந்த இயக்குனருக்கான விருது, தேவாவுக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது மற்றும் ஹரிஹரனுக்கு சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான விருது, ஆகிய மூன்று தமிழ்நாடு அரசு மாநில விருதுகளை இப்படம் வென்றது. இப்படம் இந்தியில் ‘பியார் ஜிந்தகி ஹை’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தத் திரைப்படம் 210 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. அஜித்தின் நடிப்பு கேரியரில் இத்திரைப்படம் ஒரு பெரிய திருப்புமுனையாக உருவெடுத்தது. ***** பாடல்கள்
1. மீனம்மா...
படம் : ஆசை (1995) இசை : தேவா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : பி. உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் வீடியோ ஆண் : மீனம்மா... அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையில் தான் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக் கொண்ட போதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும் ஆண் : இது மாதங்கள் நாட்கள் செல்ல பெண் : ஆ... ஆண் : நிறம் மாறிடும் பூக்கள் அல்ல.. பெண் : ஆ... ஆண் : மீனம்மா... அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே ஒளி சிந்தும் ராத்திரியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா.. பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமங்காரன் தானே மாலை போட்டு தானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா...மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால் இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும் ஆண் : துத் துத் துது... துத் துதுது..துத் துத் துது... துது இரு : துத் துத் துது... துத் துதுது..துத் துத் துது... துது ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு ஆண் : துத் துத் துது... துத் துதுது... துத் துத் துது... துது ஆண் : மீனம்மா... உன்னை நேசிக்கவும் அன்பு வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு ஆண் : உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை தொட்டு என்னென்னவோ சங்கதிகள் சொல்லி விட்டு போக பெண் : உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று ஏற்றுகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட ஆண் : இன்று மோகனம் பாட்டெடுத்தோம் பெண் : ஆ... ஆ... ஆண் : முழு மூச்சுடன் காதலித்தோம் பெண் : ஆ... ஆ... ஆண் : மீனம்மா... அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே *****
|