மே மாதம்

may maadham
நடிப்பு
வினீத், சோனாலி, மனோரமா, எஸ். என். லட்சுமி, சத்யப்ரியா, சில்க் ஸ்மிதா, மௌனிகாசி. கே. சரஸ்வதி, ஆர். சுந்தர்ராஜன், கிருஷ்ணாராவ், ஜனகராஜ், காகா ராதாகிருஷ்ணன்

பாடல்கள்
வைரமுத்து

இசை
ஏ.ஆர். ரஹ்மான்

ஒளிப்பதிவு
பி.சி. ஸ்ரீராம்

படத்தொகுப்பு
பி. லெனின், வி.டி. விஜயன்

கதை
பாலு

வசனம்
கிரேஸி மோகன்

இயக்கம்
வீனஸ் பாலு

தயாரிப்பு
ஜி. வெங்கடேஸ்வரன்

தயாரிப்பு நிறுவனம்
ஜி.வி. பிலிம்ஸ்

வெளீயீடு:
9 செப்டம்பர் 1994

வீடியோ


1994 ஆம் ஆண்டு வீனஸ் பாலு இயக்கிய மே மாதம் திரைப்படத்தில் வினீத், சோனாலி, மனோரமா, எஸ். என். லட்சுமி, சத்யப்ரியா, சில்க் ஸ்மிதா, மௌனிகாசி. கே. சரஸ்வதி, ஆர். சுந்தர்ராஜன், கிருஷ்ணாராவ், ஜனகராஜ், காகா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

1994ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் நாள் வெளியிடப்பட்ட இப்படம் 1953 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படமான ரோமன் ஹாலிடேயை அடிப்படையாகக் கொண்டது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வைரமுத்துவின் பாடல்களை எழுதியுள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் லவ் யூ ஹமேஷா (2022) என்ற ஹிந்தித் திரைப்படத்தில் மீண்டும் பயன்படுத்தியுள்ளார்.

1990 இல் தொடங்கிய ஜி.வி. பிலிம்ஸின் வெற்றிப் பயணத்தை முறியடித்து, வணிக ரீதியாக இந்தத் திரைப்படம் தோல்வியடைந்தது.

இந்தத் திரைப்படம் 1998 இல் ஹ்ருதயஞ்சலி என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

*****
பாடல்கள்
1. மார்கழிப் பூவே
படம் : மே மாதம் (1994)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர் : ஷோபா சங்கர்

வீடியோ


மார்கழிப் பூவே
மார்கழிப் பூவே
உன் மடி மேலே
ஓரிடம் வேண்டும்
மார்கழிப் பூவே
மார்கழிப் பூவே
உன் மடி மேலே
ஓரிடம் வேண்டும்

மெத்தை மேல் கண்கள்
மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால்
கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள்
மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால்
கனவுகள் கொள்ளை

மார்கழிப் பூவே
மார்கழிப் பூவே
உன் மடி மேலே
ஓரிடம் வேண்டும்

ஆஆஆ ஆஅஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ அ ஆஆ
ஆஅஆ ஆஆஆ

பூக்களைப் பிரித்து
புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால்
முயல் போல் குதிப்பேன்

நான் மட்டும் இரவில்
தனிமையில் நடப்பேன்
நடை பாதைக் கடையில்
தேநீர் குடிப்பேன்

வாழ்க்கையின் ஒரு பாதி
நான் என்று வசிப்பேன்
வாழ்க்கையின் மறு பாதி
நான் என்று ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே
நான் என்றும் மிதப்பேன்

மார்கழிப் பூவே
மார்கழிப் பூவே
உன் மடி மேலே
ஓரிடம் வேண்டும்

வெண்பா பாடி
வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து
விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட
வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து
விடும் மைனாக்கள்

வெண்பா பாடி
வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து
விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட
வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து
விடும் மைனாக்கள்

காவேரி மணலில்
நடந்ததுமில்லை
கடற்கரை அலையில்
கால் வைத்ததில்லை
சுதந்திர வானில்
பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில்
நனைந்தும் இல்லை

சாலையில் நானாகப்
போனதுமில்லை
சமயத்தில் ஆணாக
ஆனதும் இல்லை
ஏழை மனம் காணும் இன்பம்
நான் காணவில்லை

மார்கழிப் பூவே
மார்கழிப் பூவே
உன் மடி மேலே
ஓரிடம் வேண்டும்
மார்கழிப் பூவே
மார்கழிப் பூவே
உன் மடி மேலே
ஓரிடம் வேண்டும்

மெத்தை மேல் கண்கள்
மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால்
கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள்
மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால்
கனவுகள் கொள்ளை

மார்கழிப் பூவே
மார்கழிப் பூவே
உன் மடி மேலே
ஓரிடம் வேண்டும்

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்

*****