|
|
கலைஞன் ![]() நடிப்பு
கமல்ஹாசன், பிந்தியா, நாசர், சிவரஞ்சனி, சின்னி ஜெயந்த்பாடல்கள்
வாலிஇசை
இளையராஜாஒளிப்பதிவு
ஜெயனன் வின்சென்ட்படத்தொகுப்பு
பி. மோகன்ராஜ்வசனம்
ராஜாராம் ரகுநாத்இயக்கம்
ஜி. பி. விஜய்தயாரிப்பு
ராம்குமார்தயாரிப்பு நிறுவனம்
சிவாஜி பிலிம்ஸ்வெளீயீடு:
14 ஏப்ரல் 1993வீடியோ கலைஞன் திரைப்படம் 1993 ஆம் ஆண்டு வெளியான திரில்லர் திரைப்படமாகும். ஜி.பி. விஜய் எழுதி இயக்கத்தில் ராம்குமார் கணேசன் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கமல்ஹாசன், பிந்தியா, நாசர், சிவரஞ்சனி, சின்னி ஜெயந்த், அஜய் ரத்னம் மற்றும் பலர் நடித்துள்ளனர். 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியான கலைஞன் படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூலில் சாதனை படைத்தது. இயக்குநர் ஜி.பி.விஜய் பிரதாப் போத்தனிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். 1989 ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரதாப் போத்தன் இயக்கிய வெற்றி விழா திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றினார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது, சுரங்கப்பாதையில் ஒரு ஆக்ஷன் காட்சியை படமாக்கிக்கொண்டிருக்கும்போது, வேகமாக வந்த கார் ஒன்று கமல்ஹாசனின் முதுகுத்தண்டில் மோதியது; இதன் விளைவாக தாடை இடப்பெயர்ச்சி , மூக்கு வெடிப்பு மற்றும் மூன்று எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. ஆனால் பின்னர் கமல்ஹாசன் இப்பிரச்சனைகளிலிருந்து குணமடைந்தார். ***** பாடல்கள்
1. எந்தன் நெஞ்சில் நீங்காத
படம் : கலைஞன் (1993) இசை : இளையராஜா பாடலாசிரியர்: கவிஞர் வாலி பாடியவர்கள் : கே. ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி வீடியோ ஆண்: எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீ தானா வா பெண்: எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா மார்கழிப் பூவே எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே பெண்: உனக்கென பிறந்தவள் நானா நிலவுக்கு துணை இந்த வானா ஆண்: வாழ்ந்தேனே உறவின்றி முன்னால் வந்தாயே உறவாகா இந்நாள் பெண்: எந்தன் நெஞ்சில் ஹோ ம்ஹும் ம்ஹும் ம்ஹும் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீ தானா வா ஆண்: எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா ஆண் குழு: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஸகரி ம கரிஸநி ஸநிப ம பநி ஸகரி பெண்: சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும் நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும் ஆண்: உதடுகள் உரசிடத்தானே வலிகளும் குறைந்திடும் மானே பெண்: நான் சூடும் நூலாடை போலே நீ ஆடு பூ மேனி மேலே ஆண்: எந்தன் நெஞ்சில் ஹோ ம் ம் ஹும் ம் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா பெண்: இசையின் ஸ்வரங்கள் தேனா ஆண்: இசைக்கும் குயில் நீ தானா வா பெண்: எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா ஆண்: எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா *****
|