ரோஜா

roja
நடிப்பு
அரவிந்த் சாமி, மதுபாலா, பங்கஜ் கபூர், நாசர், ஜனகராஜ்

பாடல்கள்
வைரமுத்து

இசை
ஏ.ஆர். ரஹ்மான்

ஒளிப்பதிவு
சந்தோஷ் சிவன்

படத்தொகுப்பு
சுரேஷ் அர்ஸ்

இயக்கம்
மணி ரத்னம்

தயாரிப்பு
கே. பாலச்சந்தர், புஷ்பா கந்தசாமி

தயாரிப்பு நிறுவனம்
கவிதாலயா, பிரமிட் சாய்மிரா

வெளீயீடு:
15 ஆகஸ்ட் 1992

ரோஜா திரைப்படம் 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, மதுபாலா மற்றும் ஜனகராஜ் நடித்துள்ளனர். ரோஜா திரைப்படத்தின் மூலம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ரோஜா திரைப்படம், டைம் வார இதழின் உலகின் சிறந்த திரைப்படப் பாடல்கள் கொண்ட திரைப்படங்களில் ஒன்றாக 2005 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது.

*****
பாடல்கள்
1. சின்ன சின்ன ஆசை
படம் : ரோஜா (1992)
பாடியவர் : மின்மினி
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
இயற்றியவர் : வைரமுத்து

வீடியோ


சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டு விட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டு விட ஆசை
கார் குழலில் உலகை கட்டிவிட ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை

ஏலேலோ ஏலே ஏலேலோ
ஏலேலோ ஏலே ஏலேலோ
ஏலே லே லே லே லே லே லே லோ
ஏலே லே லே லே லே லே லே லோ

சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை

*****
2. காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
படம் : ரோஜா (1992)
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
இயற்றியவர் : வைரமுத்து

வீடியோ


ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ...
காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீ தான்
கண் மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால்
வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீ தான்
கண் மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ
பாவையில்லை பாவை
தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே
சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீ தான்
கண் மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ...

*****
3. புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
படம் : ரோஜா (1992)
பாடியவர்கள் : உன்னி மேனன், சுஜாதா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
இயற்றியவர் : வைரமுத்து

வீடியோ


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே
சிறுபறவை நீயானால் உன் வானம் நானே

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊாிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை

பெண் இல்லாத ஊாிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை

உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது

இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யாா் சொன்னது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அணைக்கின்ற வேளையில்
உயிா்ப் பூ திடுக்கென்று மலரும்

நீ வெடுக்கென்று ஓடினால்
உயிா்ப் பூ சருகாக உலரும்

இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ

மலா் மஞ்சம் சேராத பெண்ணிலா
எந்தன் மார்போடு வந்தாடுதோ

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே
சிறுபறவை நீயானால் உன் வானம் நானே

புது வெள்ளை மழை

இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா

உடல் நனைகின்றது

புது வெள்ளை மழை

இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா

உடல் நனைகின்றது