இதயம்

idhayam
நடிப்பு
முரளி, ஹீரா, சின்னி ஜெயந்த், மனோரமா, ஜனகராஜ், விஜயகுமார், டைப்பிஸ்ட் கோபு, குமரிமுத்து, குண்டு கல்யாணம், மீசை முருகேசன், சில்க் ஸ்மிதா, பிரபுதேவா, ராஜுசுந்தரம், பாரதிராஜா, கங்கை அமரன்

பாடல்கள்
கவிஞர் வாலி, பிறைசூடன்

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
அப்துல் ரெஹ்மான்

படத்தொகுப்பு
பி. லெனின், வி.டி. விஜயன்

கதை, இயக்கம்
கதிர்

தயாரிப்பு
டி. ஜி. தியாகராஜன், ஜி. சரவணன்

தயாரிப்பு நிறுவனம்
சத்ய ஜோதி பிலிம்ஸ்

வெளீயீடு:
6 செப்டம்பர் 1991

1991ஆம் ஆண்டு வெளிவந்த இதயம் திரைப்படம் கதிர் இயக்கிய முதல் திரைப்படமாகும். முரளி, ஹீரா நடித்த இக்காதல் திரைப்படம் 1990களின் ஒரு மிகச்சிறந்த வெற்றிப்படமாகவும், பின்னர் வந்த காதல் கருக்கொண்ட பல திரைப்படங்களுக்கு ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தது. இப்படத்தில் முரளி, ஹீரா, சின்னி ஜெயந்த், மனோரமா, ஜனகராஜ், விஜயகுமார், டைப்பிஸ்ட் கோபு, குமரிமுத்து, குண்டு கல்யாணம், மீசை முருகேசன், சில்க் ஸ்மிதா, பிரபுதேவா, ராஜுசுந்தரம், பாரதிராஜா, கங்கை அமரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல் வரிகளை வாலியும் பிறைசூடனும் எழுதியுள்ளனர். இயக்குனர் கதிரும் இளையராஜாவும் சேர்ந்து பணிபுரிந்த ஒரே திரைப்படம் இதுவாகும்.

நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பல்வேறு திறமைகளை பிற்காலத்தில் வெளிப்படுத்திய பிரபுதேவா, இப்படத்திற்கு முன்பே அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் பின்னணியில் ஆடியிருந்தாலும், இத்திரைப்படத்தின் ‘ஏப்ரல் மேயிலே’ பாடலில் தான் முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார்.

அதே ‘ஏப்ரல் மேயிலே’ பாடலில் பிரபுதேவாவின் அண்ணனும் மற்றொரு புகழ்பெற்ற நடன அமைப்பாளருமான ராஜூ சுந்தரமும் பின்னணியில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதைக்குப் பொருத்தமான நடிகர்கள் கிடைக்காததால் இப்படம் சுமார் ஒன்றரை வருடம் தாமதமானது. பின்னர் நடிகர் முரளி இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

காதிகிராப்ஃட் விளம்பரத்தில் ஹீரா நடிச்சிருதார். அதன் மூலம் ஹீராவை கண்டுபிடித்து புதுமுகமாக நடிக்க வைத்தனர். முதலில் ஹீரா சம்மதிக்கலை என்றாலும், பிறகு தயாரிப்பாளர் சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜனின் வற்புறுத்தலின் பேரில் நடிக்க சம்மதித்தார்.

பின்னர் இப்படம் தெலுங்கில் ஹ்ருதயம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

சத்யஜோதி ப்லிம்ஸ் தயாரித்த இந்த இதயம் திரைப்படம், பெரிய அளவில் வசூலையும், வெற்றியையும் பெற்றது. அதுமட்டுமல்லாது, நடிகர் முரளிக்கு இதயம் முரளி என்ற பெயரையும் பெற்றுத் தந்தது. என்கிற கதாபாத்திரத்தை வாழ்வியலோடு இணைத்தது.

இன்றளவும் காதலைச் சொல்லமுடியாமல் சுற்றித் திரிபவர்களை ‘இதயம் முரளி’ என்கிற அடைமொழியோடு நமது சமூகம் குறிப்பிடுவதில் அடங்கியிருக்கிறது இப்படத்தின் வெற்றி.

*****

பாடல்கள்
1. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
படம் : இதயம் (1991)
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
பாடியவர் : கே. ஜே. யேசுதாஸ்

வீடியோ


பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா

பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில்
அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில்
அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா

ஆறாத ஆசைகள் தோன்றும்
எனைத் தூண்டும்
ஆனாலும் வாய் பேச
அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும்
அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை
நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்

பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில்
அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில்
அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா

யாப்போடு சேராதோ
பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ
காற்று பனிக்காற்று
வினா தாள் போல் இங்கே
கனா காணும் காளை
விடை போலே அங்கே
நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு எந்நாளோ

பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில்
அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த
ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில்
அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா

*****


புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே (1991)
மாமன் ஒரு நாள் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
பொத்தி வச்ச மல்லிக மொட்டு - மண்வாசனை (1983)
பொன்மேனி உருகுதே - மூன்றாம் பிறை (1982)
மார்கழிப் பூவே - மே மாதம் (1994)
பூங்காற்று புதிதானது - மூன்றாம் பிறை (1982)
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் - அபூர்வ சகோதரர்கள் (1989)
ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி (1980)
எந்தன் நெஞ்சில் நீங்காத - கலைஞன் (1993)
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - இதயம் (1991)
மீனம்மா... - ஆசை (1995)
இனிமை நிறைந்த உலகம் இருக்கு - நினைத்தாலே இனிக்கும் (1979)
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021 | 2022 | 2023