சின்ன தம்பி

chinnathambi
நடிப்பு
பிரபு, குஷ்பூ, மனோரமா, ராதாரவி, கவுண்டமணி, சுலக்‌ஷனா, பாண்டு

பாடல்கள்
கவிஞர் வாலி, கங்கை அமரன்

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
ரவீந்தர்

படத்தொகுப்பு
பி. மோஹன்ராஜ்

கதை, இயக்கம்
பி. வாசு

தயாரிப்பு
பாலு

தயாரிப்பு நிறுவனம்
மலர் கம்பைன்ஸ்

வெளீயீடு:
12 ஏப்ரல் 1991

*****

பாடல்கள்
1. போவோமா ஊர்கோலம்
படம் : சின்ன தம்பி (1991)
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், சுவர்ணலதா

வீடியோ


பெண்: போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

ஆண்: அரண்மனை அன்னக்கிளி
தரையில நடப்பது
நடக்குமா அடுக்குமா

பெண்: பனியிலும் வெட்டவெளி
வெயிலிலும் உள்ள சுகம்
அரண்மனை கொடுக்குமா

ஆண்: குளுகுளு அறையில
கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது
குடிசைய விரும்புமா

பெண்: சிலுசிலு சிலுவென
இங்கிருக்கும் காத்து அங்க
அடிக்குமா கிடைக்குமா

ஆண்: பளிங்கு போல உன் வீடு
வழியில பள்ளம் மேடு

பெண்: வரப்பு மேடும் வயலோடும்
பறந்து போவேன் பாரு

ஆண்: அதிசயமான பெண்தானே

பெண்: புதுசுகம் தேடி வந்தேனே

ஆண்: போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

பெண்: கொட்டுகிற அருவியும்
மெட்டுக்கட்டும் குருவியும்
அடடடா அதிசயம்

ஆண்: கற்பனையில் மிதக்குது
கண்டதையும் ரசிக்குது
இதிலென்ன ஒரு சுகம்

பெண்: ரத்தினங்கள் தெறிக்குது
முத்துமணி ஜொலிக்குது
நடந்திடும் நதியிலே

ஆண்: உச்சந்தல சொழலுது
உள்ளுக்குள்ள மயங்குது
எனக்கொண்ணும் புரியல்லே

பெண்: கவிதை பாடும் காவேரி
ஜதிய சேர்த்து ஆடும்

ஆண்: அணைகள் நூறு போட்டாலும்
அடங்கிடாம ஓடும்

பெண்: போதும் போதும் உம் பாட்டு

ஆண்: பொறப்படப் போறேன் நிப்பாட்டு

பெண்: போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

ஆண்: ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்

பெண்: காலம் யாவும் பேரின்பம்
காணும் நேரம் ஆனந்தம்

ஆண்: போவோமா ஊர்கோலம்

பெண்: பூலோகம் எங்கெங்கும்

*****