அபூர்வ சகோதரர்கள்

apoorva sagodharargal
நடிப்பு
கமல்ஹாசன், ஜெய்சங்கர், நாகேஷ், கௌதமி, ரூபினி, மனோரமா, ஸ்ரீவித்யா, ஜனகராஜ், மௌலி, டெல்லி கணேஷ், நாசர், ஆர்.எஸ். சிவாஜி, கிரேஸி மோகன்

பாடல்கள்
வாலி

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
பி.சி. ஸ்ரீராம்

படத்தொகுப்பு
பி. லெனின், வி.டி. விஜயன்

கதை
பஞ்சு அருணாசலம்

திரைக்கதை
கமல்ஹாசன்

வசனம்
கிரேசி மோகன்

இயக்கம்
சிங்கீதம் சீனிவாசராவ்

தயாரிப்பு
கமல்ஹாசன்

தயாரிப்பு நிறுவனம்
ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல்

வெளீயீடு:
14 ஏப்ரல் 1989

*****

பாடல்கள்
1. உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
படம் : அபூர்வ சகோதரர்கள் (1989)
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

வீடியோ


உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

என்ன நெனச்சேன்
நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன்
நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்

உன்னை நினைச்சேன்
பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனச்சேன்
நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே

ஆசை வந்து என்னை
ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன்
குற்றம் சொல்ல வேணும்

கொட்டும் மழைக் காலம்
உப்பு விற்கப் போனேன்
காற்றடிக்கும் நேரம்
மாவு விற்கப் போனேன்

தப்புக் கணக்கை
போட்டுத் தவித்தேன்
தங்கமே ஞானத் தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞானத் தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்

உன்னை நினைச்சேன்
பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனச்சேன்
நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே

கண்ணிரண்டில் நான் தான்
காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன்
அத்தனையும் ஓட்டை

உள்ளபடி யோகம்
உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும்
நல்ல மரம் ஆகும்

ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்
தங்கமே ஞான தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
தங்கமே ஞான தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான்

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

*****