மௌன ராகம்

mouna ragam
நடிப்பு
மோகன், ரேவதி, கார்த்திக், வி.கே ராமசாமி, பூர்ணம் விஸ்வநாதன்

ஒளிப்பதிவு
பி.சி. ஸ்ரீராம்

படத்தொகுப்பு
பி. லெனின், வி.டி. விஜயன்

கலை
தோட்டா தரணி

பாடல்கள்
வாலி

இசை
இளையராஜா

கதை, இயக்கம்
மணிரத்னம்

தயாரிப்பாளர்
ஜி.வெங்கடேஷ்வரன்

தயாரிப்பு நிறுவனம்
சுஜாதா பிலிம்ஸ்

வெளீயீடு:
15 ஆகஸ்டு 1986


*****

பாடல்கள்
1. சின்னச் சின்ன வண்ணக்குயில்
படம் : மௌன ராகம் (1986)
பாடியவர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழுவினர்
இசை : இளையராஜா
இயற்றியவர் : வாலி

வீடியோ


லாலாலாலா லாலாலாலா

லாலாலாலா லாலாலாலா

லலலாலா லாலாலா

லலலாலா லாலாலா

லலலாலா லாலாலா லாலாலா லாலாலா

லாலாலா லாலாலா லாலாலாலா

சின்னச் சின்ன வண்ணக்குயில்
கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா

புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்

புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன்மொட்டு
நானா நானா

சின்னச் சின்ன வண்ணக்குயில்
கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா

ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகை சூடிக் கொண்டேன்

மன்மதன் பாடல் ஒன்று
நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்

சொல்லத்தான் எண்ணியும்
இல்லையே பாஷைகள்

என்னமோ ஆசைகள்
எண்ணத்தின் ஓசைகள்

மாலை சூடி ம்ம் ம்ம்

மஞ்சம் தேடி ம்ம் ம்ம்

மாலை சூடி ம்ம் ம்ம்

மஞ்சம் தேடி ம்ம் ம்ம்

காதல் தேவன் சந்நிதி
காண
காணக் காண
காண

சின்னச் சின்ன வண்ணக்குயில்
கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா

புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்

புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன்மொட்டு
நானா நானா

சின்னச் சின்ன வண்ணக்குயில்
கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா

ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

மேனிக்குள் காற்று வந்து

மெல்லத்தான் ஆடக் கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம்
கங்கை போல் ஓடக் கண்டேன்
இன்பத்தின் எல்லையோ
இல்லையே இல்லையே
அந்தியும் வந்ததால்
தொல்லையே தொல்லையே

காலம் தோறும் ம்ம் ம்ம்
கேட்க வேண்டும் ம்ம் ம்ம்

காலம் தோறும் ம்ம் ம்ம்
கேட்க வேண்டும் ம்ம் ம்ம்

பருவம் என்னும் கீர்த்தனம்
பாட
பாடப் பாட
பாட

சின்னச் சின்ன வண்ணக்குயில்
கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா

புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்

புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன்மொட்டு
நானா நானா

சின்னச் சின்ன வண்ணக்குயில்
கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா

சின்னச் சின்ன வண்ணக்குயில்
கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா

*****

2. நிலாவே வா செல்லாதே வா
படம் : மௌன ராகம் (1986)
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
இயற்றியவர் : வாலி

வீடியோ


ஆஆஆ
ஆஆஆ

ஆஆஆஆ
ஆஆஆஆ

நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே
அணைத்தேனே

நிலாவே வா
செல்லாதே வா

காவேரியா கானல் நீரா
பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லைப்பூவா
சொல்லு கொஞ்சம் நில்லு
ஆம்மாடியோ நீதான்
இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம்
நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே
சொல்லில் வைத்தாய் முள்ளை

நிலாவே வா
செல்லாதே வா

பூஞ்சோலையில் வாடைக் காற்றும்
வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும்
ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை
தந்தால் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை
சொன்னால் என்ன மானே
ஆகாயம் தாங்காத
மேகம் ஏது கண்ணே

நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன் வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேனே

நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்

*****