உதய கீதம்

Udaya Geetham
நடிப்பு
மோகன், லட்சுமி, ரேவதி, கவுண்டமணி, சரத்பாபு, ஆனந்த்பாபு, கல்லாப்பெட்டி சிங்காரம், செந்தில், சார்லி, டிஸ்கோ சாந்தி, கோவை சரளா, வி. கோபாலகிருஷ்ணன், பூர்ணம் விஸ்வநாதன் ஏ.ஆர். சீனிவாசன்

இசை
இளையராஜா

பாடல்கள்
வாலி, வைரமுத்து, முத்துலிங்கம், மு. மேத்தா, எம்.ஜி. வல்லபன், நா. காமராசன்

பின்னணி
எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

ஒளிப்பதிவு
தினேஷ்பாபு

படத்தொகுப்பு
ஆர். பாஸ்கரன்

கதை
ஆர். செல்வராஜ்

வசனம்
எம்.ஜி. வல்லபன்

திரைக்கதை, இயக்கம்
கே. ரங்கராஜ்

தயாரிப்பு
கோவைத்தம்பி

தயாரிப்பு நிறுவனம்
மதர்லேண்ட் பிக்சர்ஸ்

வெளீயீடு:
13 ஏப்ரல் 1985

வீடியோ


*****
பாடல்கள்
1. என்னோடு பாட்டு பாடுங்கள்
படம் : உதய கீதம் (1985)
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
இயற்றியவர் : எம்.ஜி. வல்லபன்

வீடியோ


ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்
இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்
இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன
பாடும் போது தன நனனா
தானே கொஞ்சம் தனனன தனனன
சோகம் போகும் தன நனனா

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்
இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்

ஆண் : பார்வையில் ஆயிரம்
சூரியன் ஏன்
பாரியின் தேரிலே
முல்லையே சொல்
வானவில் வார்த்தைகள்
கேட்டதும் நீ
சேலையில் சீதனம்
மூடினாய் ஏன்

ஆண் : பெளர்ணமி
பெளர்ணமி புன்னகை
பால் மொழி கன்னிகை
உன் மடி மல்லிகை
அதில் வரும் தினம் ஒரு
புதுக் கனவு

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்
இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்
இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன
பாடும் போது தன நனனா
தானே கொஞ்சம் தனனன தனனன
சோகம் போகும் தன நனனா

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்
இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்

ஆண் : தேனிலா நாளிலே
தாரகைப் பூ
தேவதை கூந்தலில்
சூடவா நான்
சாமரம் வீசிடும்
மார்பிலே நான்
சாய்ந்ததும் ஓய்ந்ததே
சரசமும் ஏன்

ஆண் : மெளனமோ ஓ
மெளனமோ உன் மொழி
நாணமோ தாய்மொழி
எண்ணமோ கண் வழி
தினம் தினம் தொடத் தொட
தொடர் கதையோ

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்
இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்
இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன
பாடும் போது தன நனனா
தானே கொஞ்சம் தனனன தனனன
சோகம் போகும் தன நனனா

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்
இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்
இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்
இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன
பாடும் போது தன நனனா
தானே கொஞ்சம் தனனன தனனன
சோகம் போகும் தன நனனா

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள்
இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்

*****
2. தேனே தென்பாண்டி மீனே
படம் : உதய கீதம் (1985)
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
இயற்றியவர் : வாலி

வீடியோ


ஆண் : தேனே தென்பாண்டி மீனே
இசை தேனே இசைத்தேனே

ஆண் : தேனே தென்பாண்டி மீனே
இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே

ஆண் : நீதான் செந்தாமாரை ஆரீராரோ
நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ

ஆண் : தேனே தென்பாண்டி மீனே
இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே

ஆண் : மாலை வெயில் வேளையில்
மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில்
ஆடி வரும் வெள்ளமே

ஆண் : நஞ்சை புஞ்சை நாளும் உண்டு
நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு
மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான்
நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

ஆண் : தேனே தென்பாண்டி மீனே
இசை தேனே இசைத்தேனே

ஆண் : பால் கொடுத்த நெஞ்சிலே
ஈரம் இன்னும் காயலே
பால் மனத்தைப் பார்க்கிறேன்
பிள்ளை உந்தன் வாயிலே

ஆண் : பாதை கொஞ்சம்
மாறிப் போனால்
பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தால்
வாசம் விட்டு போகுமா
ராஜா நீதான்
நான் எடுத்த முத்துப் பிள்ளை

ஆண் : தேனே தென்பாண்டி மீனே
இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே

ஆண் : நீதான் செந்தாமாரை ஆரீராரோ
நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ

ஆண் : தேனே தென்பாண்டி மீனே
இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே

*****
3. பாடு நிலாவே
படம் : உதய கீதம் (1985)
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி
இசை : இளையராஜா
இயற்றியவர் : மு. மேத்தா

வீடியோ


பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

பெண் : பாடு நிலாவே
தேன் கவிதை
பூ மலர
பாடு நிலாவே
தேன் கவிதை
பூ மலர
உன் பாடலை
நான் தேடினேன்
கேட்காமலே
நான் வாடினேன்
பாடு நிலாவே
தேன் கவிதை
பூ மலர

பெண் : நீ போகும் பாதை
என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை
என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக
ஊர்கோலமோ
என் வீடு வாராமல்
ஏன் போகுமோ

பெண் : கைதான போதும்
கை சேர வேண்டும்
உன்னோடு வாழும்
ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே
ஈடேறவே

ஆண் : பாடும் நிலாவே
தேன் கவிதை
பூ மலரே
உன் பாடலை
நான் கேட்கிறேன்
பாமாலையை
நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே
தேன் கவிதை
பூ மலரே

ஆண் : ஊரெங்கும் போகும்
என் ராகங்களே
உன் வீடு தேடும்
என் மேகங்களே
பூ மீது தேன் தூவும்
காதல் வரம்
என் நெஞ்சில்
நீ ஊதும் நாதஸ்வரம்

ஆண் : காவேரி வெள்ளம்
கை சேர துள்ளும்
ராகங்கள் சேரும்
தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே
தேன் கவிதை
பூ மலரே

பெண் : உன் பாடலை
நான் கேட்கிறேன்

ஆண் : பாமாலையை
நான் கோர்க்கிறேன்

பெண் : பாடும் நிலாவே

ஆண் : தேன் கவிதை

ஆண் & பெண் : பூ மலரே

*****
4. சங்கீத மேகம்
படம் : உதய கீதம் (1985)
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
இயற்றியவர் : முத்துலிங்கம்

வீடியோ


ஆண் : சங்கீத மேகம்
தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள்
தூவும் காலம்
நாளை என் கீதமே
எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே
எங்கும் உலாவுமே
என்றும் விழாவே
என் வாழ்விலே

ஆண் : சங்கீத மேகம்
தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள்
தூவும் காலம்

குழு: லால லால லா
லால லால லா
லாலலால லாலலால லா

ஆண் : போகும் பாதை தூரமே
வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற
ராக நதியினில்
நீ நீந்தவா

ஆண் : போகும் பாதை தூரமே
வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற
ராக நதியினில்
நீ நீந்தவா

ஆண் : இந்தத் தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்
இந்தத் தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே ஓஓஓ

ஆண் : சங்கீத மேகம்
தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள்
தூவும் காலம்

ஆண் : உள்ளம் என்னும் ஊரிலே
பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள்
ராஜ பவனிகள் போகின்றதே

ஆண் : உள்ளம் என்னும் ஊரிலே
பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள்
ராஜ பவனிகள் போகின்றதே

ஆண் : எந்தன் மூச்சும்
இந்த பாட்டும்
அணையா விளக்கே
எந்தன் மூச்சும்
இந்த பாட்டும்
அணையா விளக்கே
கேளாய் பூ மனமே ஓஓஓ

ஆண் : சங்கீத மேகம்
தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள்
தூவும் காலம்
நாளை என் கீதமே
எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே
எங்கும் உலாவுமே
என்றும் விழாவே
என் வாழ்விலே ஓஓஓ

ஆண் : சங்கீத மேகம்
தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள்
தூவும் காலம்

*****
5. உதய கீதம் பாடுவேன்
படம் : உதய கீதம் (1985)
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
இயற்றியவர் : வைரமுத்து

வீடியோ


ஆண் : ஆஆஆஆ
ஆஆஆஆ
ஆஆஆஆ

ஆண் : உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொடுவேன்
உதய கீதம் பாடுவேன்
ஒலிகளில் பூத் தொடுப்பேன்

ஆண் : உலகமெல்லாம் மறந்து போகும்
மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே

ஆண் : உதய கீதம் பாடுவேன்
உதய கீதம் பாடுவேன்

ஆண் : பிள்ளை நாளை பார்க்குமே
எனை எங்கே என்று கேட்குமே
கண்கள் நீரை வார்க்குமே
அது சிந்தும் கண்ணீர் தீர்த்தமே

ஆண் : தோளில் மாலை மாலையில்
தூக்கு மேடை காலையில்
அழுகின்ற உள்ளங்களே
வாழ்க வாழ்கவே

ஆண் : உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொடுவேன்
உலகமெல்லாம் மறந்து போகும்
மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே

ஆண் : உதய கீதம் பாடுவேன்
உதய கீதம் பாடுவேன்

ஆண் : கண்ணே தீரும் சோதனை
இரு கண்ணில் என்ன வேதனை
கண்டேன் எந்தன் ஜீவனை
என் சாவில் கூட சாதனை

ஆண் : நாளை நானும் போகிறேன்
உன்னில் நானே வாழ்கிறேன்
பூப்போன்ற உள்ளங்களே
வாழ்க வாழ்கவே

ஆண் : உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொடுவேன்
உலகமெல்லாம் மறந்து போகும்
மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே

ஆண் : உதய கீதம் பாடுவேன்
உதய கீதம் பாடுவேன்

*****
6. மானே தேனே கட்டிப்புடி
படம் : உதய கீதம் (1985)
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி
இசை : இளையராஜா
இயற்றியவர் : என். காமராஜன்

வீடியோ


ஆண் : மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோளை தொட்டுக்கடி

ஆண் : மானே தேனே கட்டிப்புடி

குழு : கட்டிப்புடி

ஆண் : மாமன் தோளை தொட்டுக்கடி

குழு : தொட்டுக்கடி

ஆண் : மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மன்மத ராசனின்
மையலை தேடுது

குழு : மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மன்மத ராசனின்
மையலை தேடுது

ஆண் : மானே தேனே கட்டிப்புடி
அட மாமன் தோளை தொட்டுக்கடி

ஆண் : ஆஹா ஆஹா ஆஹா
ஹோய் ஹோய் ஹோய்

பெண் : நாணல் பூவை போல
உள்ளம் ஆடிடுமே
நானும் நீயும் சேர்ந்தா
இன்பம் கூடிடுமே

ஆண் : கோடை மேகம் போல
உன்னை தேடி வந்தேன்
ஆசை வேகம் மீறும்
சிந்து பாடி வந்தேன்

பெண் : கன்னத்தில் என்னென்ன
செஞ்சி வச்சான்
மம்மதன் அள்ளி வச்சான்
கன்னத்தில் என்னென்ன
செஞ்சி வச்சான்
மம்மதன் அள்ளி வச்சான்

ஆண் : ஆத்தோரம்

குழு : காத்தாடுது

ஆண் : காத்தோடு

குழு : பூவாடுது

ஆண் : பூவோடு

குழு : தேன் பாயுது

ஆண் : தேனோட

குழு : தேன் சேருது

பெண் : அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது
கொஞ்சிடத்தான்
வா வா வா வா

ஆண் : மானே தேனே கட்டிப்புடி
அட மாமன் தோளை தொட்டுக்கடி

ஆண் : மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மன்மத ராசனின்
மையலை தேடுது

குழு : மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மன்மத ராசனின்
மையலை தேடுது

ஆண் : மானே தேனே கட்டிப்புடி
அட மாமன் தோளை தொட்டுக்கடி

குழு : தந்தன தந்தன தந்தா தந்தன
ஏ தந்தன தந்தன தந்தா தந்தன
ஏ தந்தானா தந்தன தந்தன
ஏ தந்தானா தந்தன தந்தன

ஆண் : அன்னம் கூட தோற்கும்
நடையாடுதடி
ஏ அம்பு கூட தோற்கும்
விழி பாடுதடி

பெண் : காதல் வேதம் பாட
இன்று தேடி வந்தேன்
மாமன் மேலே ஆசை
கொண்டு ஓடி வந்தேன்

ஆண் : உள்ளத்த மெள்ளதான்
அள்ள வந்தா
அம்மம்மா என்ன சுகம்
உள்ளத்த மெள்ளதான்
அள்ள வந்தா
அம்மம்மா என்ன சுகம்

பெண் : ஊரோரம்

குழு : தோப்பானது

பெண் : தோப்போரம்

குழு : நீரானது

பெண் : நீரோட

குழு : நீர்சேருது

பெண் : ஆனந்தம்

குழு : தான் பாடுது

ஆண் : கன்னமும் கண்களில்
சொன்னது என்னடியோ
வா வா வா வா

ஆண் : மானே தேனே கட்டிப்புடி
அட மாமன் தோளை தொட்டுக்கடி

பெண் : மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மன்மத ராசனின்
மையலை தேடுது

ஆண் : மல்லிக வாசனை

பெண் : மந்திரம் போடுது

ஆண் : மன்மத ராசனின்

பெண் : மையலை தேடுது

குழு : லா லா லா லா லல்லலா
லா லா லா லா லல்லலா
லா லா லா லா லல்லலா
லா லா லா லா லல்லலா

*****