|
|
கீதாஞ்சலி ![]() நடிப்பு
முரளி, நளினி, பவ்யா, சத்யராஜ், கவுண்டமணி, பூர்ணம் விஸ்வநாதன், வி.கோபாலகிருஷ்ணன் செந்தில், குமரிமுத்து, கரிகோல் ராஜ்இசை
இளையராஜாபாடல்கள்
வாலி, வைரமுத்துஒளிப்பதிவு
டி. தினேஷ்பாபுபடத்தொகுப்பு
ஆர். பாஸ்கரன், பி. கிருஷ்ணகுமார்கதை
ஆர். செல்வராஜ்வசனம்
‘வியட்நாம் வீடு’ சுந்தரம்திரைக்கதை, இயக்கம்
கே. ரங்கராஜ்தயாரிப்பு
ஆர்.டி. பாஸ்கர்தயாரிப்பு நிறுவனம்
பாவலர் கிரியேஷன்ஸ்வெளீயீடு: 12 அக்டோபர் 1985வீடியோ *****
பாடல்கள்
1. துள்ளி எழுந்தது பாட்டு
படம் : கீதாஞ்சலி (1985) பாடியவர்கள் : இளையராஜா, கே.எஸ். சித்ரா இசை : இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வீடியோ சின்ன குயிலிசை கேட்டு சந்த வரிகள போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடுதான் அதப் பாடணும் இரவோடுதான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு ஆண்: துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு சந்த வரிகள போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடுதான் அதப் பாடணும் இரவோடுதான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு ஆண்: உயிரே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது மலரே தினம் மாலை நேரம் மனம்தானே நோகுது மாலை முதல் மாலை முதல் காலை வரை சொன்னால் என்ன காதல் கதை காமன் கணை எனை வதைக்குதே துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு ஆண்: அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள்தான் ஆனது கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது நான் தேடிடும் ஹ்ம்ம் நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே வா வா கண்ணே இதோ அழைக்குது ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு சந்த வரிகள போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று உறவோடுதான் அதப் பாடணும் இரவோடுதான் அரங்கேறணும் துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு *****
2. ஒரு ஜீவன் அழைத்தது
படம் : கீதாஞ்சலி (1985) பாடியவர்கள் : இளையராஜா, கே.எஸ். சித்ரா இசை : இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வீடியோ ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழ வேண்டாம் இங்கு கண்ணீரும் விழ வேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் ஆண்: ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழ வேண்டாம் பெண்: லல லல லலலா ஆண்: இங்கு கண்ணீரும் விட வேண்டாம் பெண்: லல லலலா ஆண்: உன்னையே எண்ணியே வாழ்கிறேன் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் பெண்: ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது ஆண்: முல்லைப் பூப்போலே உள்ளம் வைத்தாய் முள்ளை உள்ளே வைத்தாய் ஹோ பெண்: என்னைக் கேளாமல் கன்னம் வைத்தாய் நெஞ்சில் கன்னம் வைத்தாய் ஹோ ஆண்: நீ இல்லை என்றால் என் வானில் என்றும் பகல் என்று ஒன்று கிடையாது பெண்: அன்பே நம் வாழ்வில் பிாிவென்பதில்லை ஆகாயம் ரெண்டாய் உடையாது ஆண்: இன்று காதல் பிறந்தநாள் என் வாழ்வில் சிறந்த நாள் பெண்: மணமாலை சூடும் நாள் பார்க்கவே ஆண்: ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது பெண்: உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் மின்னல் உண்டானது ஆண்: என்னை நீ கண்ட நேரம் எந்தன் நெஞ்சம் துண்டானது பெண்: காணாத அன்பை நான் இன்று கண்டேன் காயங்கள் எல்லாம் பூவாக ஆண்: காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னை தாயாக பெண்: மழை மேகம் பொழியுமா நிழல் தந்து விலகுமா ஆண்: இனி மேலும் என்ன சந்தேகமா பெண்: ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது ஆண்: இனி எனக்காக அழவேண்டாம் பெண் : லல லல லலலா ஆண் : இங்கு கண்ணீரும் விழவேண்டாம் பெண் : லல லலலா ஆண் : உன்னையே எண்ணியே வாழ்கிறேன் பெண் : உன்னையே எண்ணியே வாழ்கிறேன் பெண் : லல லா லா ஆண் : லல லா லா பெண் : லலல லா ஆண் : லலல லா பெண் : லல லா லா ஆண் : லல லா லா பெண் : லலல லா ஆண் : லலல லா *****
|