தங்க மகன்

நடிப்பு
ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராம், ஜெய்சங்கர், லூஸ் மோகன், தேங்காய் சீனிவாசன், வி.கே. ராமசாமி, மனோரமா, சில்க் ஸ்மிதா

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
விஸ்வம் நடராசன்

படத்தொகுப்பு
கே. ஆர். கிருஷ்ணன்

இயக்கம்
ஏ. ஜெகந்நாதன்

தயாரிப்பு
வி. தமிழழகன், G. தியாகராஜன்,

தயாரிப்பு நிறுவனம்
சத்யா மூவிஸ்

வெளீயீடு:
04 நவம்பர் 1983

*****
பாடல்கள்
1. பூமாலை ஒரு பாவை ஆனது
படம் : தங்க மகன் (1983)
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை : இளையராஜா
இயற்றியவர் : வாலி

வீடியோ


பூமாலை ஒரு பாவை ஆனது
பொன்மாலை புது பாடல் பாடுது
இதைப் பார்க்கப் பார்க்க புதுமை
இசை கேட்க கேட்க இனிமை
என்னை யார்தான் வெல்வது?
பூமாலை ஒரு பாவை ஆனது

(போட்டி பாட்டுன்னு சொல்லி பெருசா போஸ்டர்ல போட்டீங்களே ஆள் எங்கப்பா கதையாயிருக்குதே)

ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே லால லலா
லலலா லலலா லலலா லலலா
லலலல ஆஆஆஆஆ

பூமாலை ஒரு பாவை ஆகுமா?
பொன்மாலை ஒரு பாட்டுப் பாடுமா?
இது பார்க்கப் பார்க்க புதுமை
இதைக் கேட்க கேட்க கொடுமை
அட யார் தான் சொல்வது

பூமாலை ஒரு பாவை ஆகுமா?

தன்னானான்னனா
தன்னானான்னனா
தன்னானான்னனா நா ஹோய்

பாடும்போது பூங்காற்று
பாயும்போது நீரூற்று
என்னைப்போல பெண் இல்லை
பெண்ணை வென்ற ஆண் இல்லை

முட்டைபோடும் பெட்டைக் கோழியே
சேவல் கூட போராட்டமா?
கொண்டைச் சேவல் கொத்தும் வேளையில்
பெட்டைக் கோழி தாங்காதம்மா?

தப்பான தாளங்கள் போடாதே

தகதுகுது தகதகதி தகத்தா தகத்தா தகதக

தப்பான தாளங்கள் போடாதே
உப்புக்கல் வைரக்கல் ஆகாதே
நான் ஒரு நாட்டிய தேவதை பாரு

பூமாலை ஒரு பாவை ஆனது
பொன்மாலை புது பாடல் பாடுது

சாமி கூட ஆடத்தான்
சக்தி போட்டி போடத்தான்
அம்பாள் பாடு என்ன ஆச்சு
அம்பலத்தில் நின்னே போச்சு

காலைத்தூக்கி நீயும் ஆடலாம்
கடவுள் என்று பேராகுமா?
காக்கைக்கூட பாட்டுப்பாடலாம்
குயிலின் கீதம் போலாகுமா?

என்னோடு நீ வந்து மோதாதே
தகதுகுது தகதுகுது தக தக துகு தக தக

என்னோடு நீ வந்து மோதாதே
உன் பப்பு இங்கே தான் வேகாதே
ஆடலில் பாடலில் மன்னவன் பாரு
பூமாலை ஒரு பாவை ஆகுமா? ஆ
பொன்மாலை ஒரு பாட்டுப் பாடுமா?

இதைப் பார்க்கப் பார்க்க புதுமை
இசை கேட்க கேட்க கொடுமை
இதை யார்தான் சொல்வது
பூமாலை ஒரு பாவை ஆனது

தகுத்துத்தகதா
ரிசகசரிசா
தரதத் தரதத் தரதத் தா
தா தக தக திமி தகஜிம்
தா
தக திமி தகஜிம்
தரரா
தக திமி தகஜிம்
தரரா
தக திமி
தரரா
தக திமி
தரரா
தக திமி
தரரா
தக திமி
தரத்தாரர தகதிமி தக தக
தரத்தாரர தகதிமி தக தக ஹோய்

*****


புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)
வா வா என் வீணையே - சட்டம் (1983)
தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982)
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982)
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982)
ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982)
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979)
மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964)
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978)
ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979)
கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021)
கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021