சட்டம்

sattam
நடிப்பு
கமல்ஹாசன், மாதவி, சரத் பாபு, ஒய்.ஜி. மகேந்திரன், ஜெய்சங்கர், விஜயகுமார், கே. பாலாஜி, மனோரமா, இளவரசி, சில்க் ஸ்மிதா

இசை
கங்கை அமரன்

பாடல்கள்
வாலி, கங்கை அமரன்

பின்னணி பாடியவர்கள்
எஸ்.பி. பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம், எஸ்.பி. சைலஜா

ஒளிப்பதிவு
திவாரி

படத்தொகுப்பு
வி. சக்ரபாணி

கதை
சலீம் - ஜாவித்

வசனம்
ஏ.எல். நாராயணன்

இயக்கம்
கே. விஜயன்

தயாரிப்பு
ஆனந்தவல்லி பாலாஜி

தயாரிப்பு நிறுவனம்
சுஜாதா சினி ஆர்ட்ஸ்

வெளீயீடு:
21 மே 1983

வீடியோ


*****
பாடல்கள்
1. வா வா என் வீணையே
படம் : சட்டம் (1983)
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
இசை : கங்கை அமரன்
இயற்றியவர் : வாலி

வீடியோ


வா வா என் வீணையே
நனனா
விரலோடு கோபமா
நனனா
மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளைந்திடுமா

கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா
இளம் தென்றல் தேடும் போது
ஊடலாகுமா ஆஆஆ

வா வா என் வீணையே
நனனா
விரலோடு கோபமா
நனனா நனன் நனனா

தண்டோடு தாமரை ஆட
வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில்
நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட

தண்டோடு தாமரை ஆட
வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில்
நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட

துணை தேடுதோ
தனிமை துயர் கூடுதோ

அணை மீறுதோ
உணர்ச்சி அலை பாயுதோ

நாள் தோறும் ராத்திரி மேடையில்
ரகசிய பாஷையில் பாட

வா வா உன் வீணை நான்
நனனா
விரல் மீட்டும் வேளைதான்
நனனா

மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளைந்திடுமோ ஓஓஒ
கிள்ளாத முல்லையே
வந்தாள் உன் எல்லையே
இளம் தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமோ ஓஒஓ

சந்தோஷ மந்திரம் ஓத
சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ இன்னமும்
இன்ப நாடகம் போட

சந்தோஷ மந்திரம் ஓத
சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ இன்னமும்
இன்ப நாடகம் போட

இரவாகலாம் இளமை
அரங்கேறலாம்

உறவாடலாம் இனிய
சுரம் பாடலாம்

கேட்காத வாத்திய ஓசைகள்
கேட்கையில் ஆசைகள் தீரும்

வா வா என் வீணையே
லலலா
விரலோடு கோபமா
லலலா

மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளைந்திடுமோ ஓஓஓ

கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா

இளம் தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமோ ஓஓஓ

வா வா என் வீணையே
லலலா
விரலோடு கோபமா
லலலா

வா வா உன் வீணை நான்
நனனா
விரல் மீட்டும் வேளைதான்
நனனா நனன் நனனா

*****
2. அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
படம் : சட்டம் (1983)
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
இசை : கங்கை அமரன்
இயற்றியவர் : வாலி

வீடியோ


அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்
அடி ராதா தெளியாதா இளம் போதை
தொடு ராதா தொடராதா அதன் பாதை
கொடுத்தா நான் எடுத்தா தேன் வடியாதா

அப்பப்பா பெரிது பெரிது உன் பெண் பக்தி
அப்பப்போ அறிவேன் அறிவேன் நான் உன் சக்தி
நீதானே நான் போற்றும் சிவ லிங்கம்
இவள் மேனி சரி பாதி உன் அங்கம்
பகலும் நள்ளிரவும் பூஜைகள் தானே

அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்

ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க
அடியேனும் தான் பாலில் அபிஷேகம் நடத்த

ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க
அடியேனும் தான் பாலில் அபிஷேகம் நடத்த

நீ வாங்க வந்த வரம் என்னவோ
நீங்காமல் காட்சி தர வேண்டுமோ

நான் பார்க்க வரம் கேட்க
அருள் சேர்க்க வா ஈஸ்வரி ஹா

அப்பப்பா பெரிது பெரிது உன் பெண் பக்தி
அப்பப்போ அறிவேன் அறிவேன் நான் உன் சக்தி

புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க
ராதா மனம் அதைப் பார்த்தாலே துடிக்க

புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க
ராதா மனம் அதைப் பார்த்தாலே துடிக்க

குழலோடு வந்த கோபாலன் நான்தான்
கோபாலன் பாடும் பூபாளம் நீ

உன் பாட்டு நான் கேட்டு
பாராட்ட நாள் வேண்டுமோ ஹோ

அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்

நீதானே நான் போற்றும் சிவ லிங்கம்
இவள் மேனி சரி பாதி உன் அங்கம்

கொடுத்தா நான் எடுத்தா தேன் வடியாதா
ராதா தா தா தா

லல்லா லலலா லலலா லல லல்லல்லா
லல்லா லலலா லலலா லல லல்லல்லா

*****
3. ஒரு நண்பனின் கதை இது
படம் : சட்டம் (1983)
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை : கங்கை அமரன்
இயற்றியவர் : வாலி

வீடியோ


ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹா ஆஆ
ஹா ஆஆ ஹா
ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஒரு நண்பனின் கதை இது
ஒரு நண்பனின் கதை இது

நண்பனா பகைவனா
பாடினால் புரியலாம்
நான் பாடவோ ஓ
ஒரு நண்பனின் கதை இது

இன்ப துன்பம் இரண்டிலும்
பாதிப் பாதி இருவரும்
பகிர்ந்து கொண்டு பழகினோம்

இன்ப துன்பம் இரண்டிலும்
பாதிப் பாதி இருவரும்
பகிர்ந்து கொண்டு பழகினோம்

கண்ணாடி முன்னால் நின்று
பார்த்தாலுமே
என் விழி காண்பது
அவன் முகம் என்று வாழ்ந்த
ஒரு நண்பனின் கதை இது

தென்றல் போன்ற நண்பன்தான்
தீயைப் போல மாறினான்
சொன்ன வார்த்தை மீறினான்

தென்றல் போன்ற நண்பன்தான்
தீயைப் போல மாறினான்
சொன்ன வார்த்தை மீறினான்

ஒரு தாயின் பிள்ளை போல
உறவாடினோம்
தோழனே துரோகியாய் மாறியே
வஞ்சம் தீர்த்த
ஒரு நண்பனின் கதை இது

நண்பனா பகைவனா
பாடினால் புரியலாம்
நான் பாடவோ ஹோ

ஒரு நண்பனின் கதை இது

*****
4. நண்பனே எனது உயிர் நண்பனே
படம் : சட்டம் (1983)
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன்
இசை : கங்கை அமரன்
இயற்றியவர் : வாலி

வீடியோ


ஹே ஹே
ஹே ஹேய்

ஹே ஹே
ஹே ஹேய்

ஹே ஹே
ஹேஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹே
ஹே பபபா
பபபா

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது ஹான்

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும்
இரு மலர்கள் நீயும் நானும்
பிரியாமல் நாம் உறவாடலாம்

ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ

இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓச
ை இன்றும் என்றும் ஏற்க வேண்டும்
எனது ஆசை ஹே ஹே

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
இடையில் வந்த உரிமை என்றால்
அதற்காக நான் வழக்காடுவேன்

யாரும் உன்னை திருடிச் செல்ல
பார்த்து நிற்கும் தோழன் அல்ல
உனக்காக நான் காவல் நிற்பேன்

எனது மனமும் எனது நினைவும்
உனது வசமே

நமக்கு ஏது பிரித்துப் பார்க்க
இரண்டு மனமே ஹே ஹே

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

லாலல்லா லாலல்லா லாலல்லா
லாலல்லா லாலல்லா லாலல்லா

*****
5. தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு
படம் : சட்டம் (1983)
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி. சைலஜா
இசை : கங்கை அமரன்
இயற்றியவர் : கங்கை அமரன்

வீடியோ


விஸ் யூ எ பிராஸ்பரஸ் நியூ இயர்

ரூ ருத்து தரத்த
ரூ ருத்து தரத்த தா
ரத்த தா ரத்த ரா ரத்த தா ததத்த தா

தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு
யோகம் என் யோகம்தான்
எனை நேரில் வெல்ல யாரும் இல்லை
நேரம் என் நேரம்தான்
எதிர்க்க யார்
எனி சேலன்ஞ்சர் ஹக்கூ
எஸ் தேர் இஸ் ஒன்

தாங்க்யூ வெரி மச்
ஏ ஹா ஹா ஏ ஹா ஹா
நான்தான் ராஜா ஏண்டி ரோஜா
நான்தான் ராஜா ஏண்டி ரோஜா
கர்வம் கூடாதம்மா
என் முன்னே உந்தன் ஆட்டம் எல்லாம்
இங்கே செல்லாதம்மா
மயக்கமா ஹு ஹூ

ஹா
எது வேண்டும் டிஸ்கோ டான்ஸா
ஹா
பலிக்காது உந்தன் பாச்சா
ஹா
என் மேனி மிருதங்கம்தான்
ஹா
எங்கெங்கும் புது தஞ்சம்தான்

பரதம் உண்டு
தகஜினு தகஜினு தகஜினு
கதக்கும் உண்டு
தீன தீன திரனா

பரதம் உண்டு
கதக்கும் உண்டு
டிஸ்கோ டான்சும் உண்டு
ஜதி போட்டுப் பாரு நீயும் இன்று
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு
யோகம் என் யோகம்தான்

என் முன்னே உந்தன்
ஆட்டம் எல்லாம்
இங்கே செல்லாதம்மா
மயக்கமா மா மா மா

ஹாஹ ஹாஹ ஹா ஹா
ஹோஹோ ஹோஹோ ஹோஹோ
ஹேஹே ஹு ஹூ
ஹோஹோ ஹு ஹூ

எங்கெங்கும் ரசிகர்கள் கூட்டம்
என் மீது தினசரி நாட்டம்
நடந்தாலும் அது ஒரு ஆட்டம்
நாடெங்கும் பல வித மன்றம்

பஞ்சாப் பாங்க்ரா
பல்லே பல்லே பல்லே பல்லே
பல்லே பல்லே பல்லே பல்லே
பல்லே பல்லே பல்லே ஹஹ்ஹா ஹா ஹா

இதுதான் ஆந்திரா
தந்து னக்குன தாகத னக்குன
தந்து னக்குன தாகத னக்குன
தன்தின தாகத னக்குன
தின்னா தின்னா தின்னா

கதகளிக்கோ கேரளா
தன்தன் னான தன்தன் னான
தை தை தை தை
தன்தன் னான தன்தன் னான
தை தை தை தை

பஞ்சாப் பாங்ரா
இது தான் ஆந்திரா
கதகளிக்கோ கேரளா
எது வேண்டும் கேட்டுப் பாரு இங்கே

நான்தான் ராஜா ஏண்டி ரோஜா
அட நான்தான் ராஜா ஏண்டி ரோஜா
கர்வம் கூடாதம்மா
என் முன்னே உந்தன் ஆட்டம் எல்லாம்
இங்கே செல்லாதம்மா
மயக்கமா ஹா ஆ
கம் ஆன் கிஸ் மீ

*****