|
|
மண்வாசனை நடிப்பு
பாண்டியன், ரேவதி, விஜயன், வினு சக்ரவர்த்தி, காந்திமதி, அனிதா, கே.கே. சௌந்தர், ஜனகராஜ், சேனாபதிபாடல்கள்
பஞ்சு அருணாசலம், வைரமுத்து, கங்கை அமரன், எம்.ஜி. வல்லபன்இசை
இளையராஜாஒளிப்பதிவு
பி. கண்ணன்படத்தொகுப்பு
வி. ராஜகோபால்கதை
கலைமணிவசனம்
பஞ்சு அருணாசலம்இயக்கம்
பாரதிராஜாதயாரிப்பு
காயத்ரி பிலிம்ஸ்தயாரிப்பு நிறுவனம்
சத்யா மூவிஸ்வெளீயீடு:
29 ஜூலை 1983வீடியோ 1983 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மண்வாசனை தமிழ்த் திரைப்படத்தில், பாண்டியன் மற்றும் ரேவதி புதுமுகமாக அறிமுகம் ஆனார்கள். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியன், ரேவதி விஜயன், வினு சக்ரவர்த்தி, காந்திமதி, அனிதா, கே.கே. சௌந்தர், ஜனகராஜ், சேனாபதி மற்றும் பலர் நடிக்க, இளையராஜா இசையமைத்திருந்தார். பாரதிராஜா புதுமுக நடிகருக்கான தேடலில் இருந்த போது, நடிகர் பாண்டியன், மதுரையில் வளையல் விற்பதைக் கண்டு ஈர்க்கப்பட்டு, மண்வாசனை திரைப்படத்தில் அவரை நாயகனாக அறிமுகப்படுத்தினார். ஆஷா கெலுன்னி நாயர் என்ற இயற்பெயர் கொண்ட நடிகை ரேவதியை பாரதிராஜா புதிய கதாநாயகியாக தேர்வு செய்தார். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கும் போது, கிளிசரின் பயன்படுத்துவதை விட, ஸ்கிரிப்ட் தேவைக்கேற்ப அழுவதை உறுதி செய்ய பாரதிராஜா ரேவதியை கன்னத்தில் அறைந்தார். வெளியான போது இத்திரைப்படம் திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடியது. இந்தப் படம் தெலுங்கில் மங்கம்மாகரி மனவாடு (1984) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. *****
பாடல்கள்
1. பொத்தி வச்ச மல்லிக மொட்டு
படம் : மண்வாசனை (1983) பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி இசை : இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வீடியோ மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு பேசி பேசி ராசியானதே மாமன் பேரச் சொல்லிச் சொல்லி ஆளானதே ஆண் : ஹா ஹான் பெண்: ரொம்ப நாளானதே ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண்: பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு பேசி பேசி ராசியானதே மாமன் பேர சொல்லிச் சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே ஆண்: மாலையிட காத்து அல்லி இருக்கு தாலி செய்ய நேத்து சொல்லி இருக்கு பெண்: இது சாயங்காலமா மடி சாயும் காலமா ஆண்: முல்ல பூ சூடு மெல்ல பாய் போடு பெண்: அட வாடகாத்து சூடு ஏத்துது ஆண்: பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு பெண்: பேசி பேசி ராசியானதே மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே ரொம்பநாளானதே பெண்: ஆத்துக்குள்ள நேத்து உன்ன நெனச்சேன் வெக்க நிறம் போக மஞ்ச குளிச்சேன் ஆண்: கொஞ்சம் மறஞ்சு பாா்க்கவா இல்ல முதுகு தேய்க்கவா பெண்: அது கூடாது இது தாங்காது ஆண்: சின்ன காம்பு தான பூவ தாங்குது பெண்: பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு ஆண்: பேசி பேசி ராசியானதே மாமன் பேரச் சொல்லிச் சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே பெண்: ஆளானதே ரொம்ப நாளானதே *****
|