தூறல் நின்னு போச்சு

thooral ninnu pochu
நடிப்பு
பாக்யராஜ், எம். என். நம்பியார், சுலக்சனா, செந்தாமரை, சூரியகாந்த், செந்தில், கரிக்கோல் ராஜு

பாடல்கள்
வாலி, முத்துலிங்கம், வைரமுத்து, சிதம்பரநாதன், கங்கை அமரன்

பின்னணி பாடியவர்கள்
கே.ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன், கிருஷ்ணமூர்த்தி, உமாரமணன்

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
B. கலைச்செல்வம்

படத்தொகுப்பு
V. ராஜகோபால்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
கே. பாக்யராஜ்

தயாரிப்பு
கோவை C.M. நஞ்சப்பன்

தயாரிப்பு நிறுவனம்
துர்கா பகவதி பிலிம்ஸ்

வெளீயீடு:
14 ஏப்ரல் 1982

வீடியோ


*****
பாடல்கள்
1. ஏரிக்கரை பூங்காற்றே
படம் : தூறல் நின்னு போச்சு (1982)
பாடியவர் : கே.ஜே. யேசுதாஸ்
இசை : இளையராஜா
இயற்றியவர் : சிதம்பரநாதன்

வீடியோ


ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்னைத் தேடி வர தூது சொல்லு

ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்னைத் தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை பூங்காற்றே

பாதமலர் நோகுமுன்னு
நடக்கும் பாதைவழி பூ விரிச்சேன்
மயிலே
பாதமலர் நோகுமுன்னு
நடக்கும் பாதைவழி பூ விரிச்சேன்
மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு
கூடித் தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால்
நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள்
கண்ணீரில் கரையுது

ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்னைத் தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை பூங்காற்றே

ஓடிச் செல்லும் வான் மேகம்
நிலவ மூடிக் கொள்ளப் பார்க்குதடி
அடியே
ஓடிச் செல்லும் வான் மேகம்
நிலவ மூடிக் கொள்ளப் பார்க்குதடி
அடியே ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு

ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்னைத் தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி

*****
2. என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே
படம் : தூறல் நின்னு போச்சு (1982)
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், கிருஷ்ணமூர்த்தி
இசை : இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்

வீடியோ


பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ
பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ
பார்வதி தாயே பணிந்தேன் நானே
பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ

டேய் யாருடா அவன் பங்கஜத்த பத்தி பாடுறவன்

நாந்தானுங்க சாமி

பங்கஜம் என்னடா பங்கஜம் என் மங்களத்த பத்தி பாடுறா

மங்களம் கடைசில தானுங்க பாடனும்

டேய் நான் சொல்றேன் முதல்லியே பாடுறா

இன்னும் அட்வான்ஸ் வாங்களைங்களே

அட்வான்சாவது கிட்வான்சாவது

தள்ளிக்கடா நாங்களே பாடுறோம்

மாமா

மாப்ள

நீ ஆரம்பி

மன்னாதி மன்னனையெல்லாம் பார்த்தவன் நான்
அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்
அப்பேர்பட்ட என்னை
பஞ்சாயத்துல நிறுத்திட்டாங்களே படுபாவிப் பசங்க

ஆமாம்

என் அருமை என்ன பெருமை என்ன அந்தஸ்து என்ன

ஆமாம்

என் குஸ்தி என்ன பஸ்தி என்ன தண்டால் என்ன

ஆமாம்

இதை நான் என்ன சொல்வேன் என்ன செய்வேன்

ஆஆஆ மாப்ளே
இதுக்கு மேல நீயே பாடுறா

அட உன் கதை எனக்கெதுக்கு மாமா
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே

ஆமாம் தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

அதக் கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

இந்த ஊரு பொண்ண நம்பி
எம்மனச தொறந்து வச்சேன்
சொந்த ஊரு சாதி சனம்
அத்தனையும் மறந்து வந்தேன்
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே

ஆமாம் தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

ஆத்தங்கரை தோப்புக்குள்ள
ஓடி விளையாண்டதும்
யாருமில்ல சமயத்துல
ஜாடையில சிரிச்சதும்
தோட்டத்துல வரப்புக்குள்ள
தொட்டு தொட்டு புடிச்சதும்
தூண்டில் போட்டு மீனை சுட்டு
ரெண்டு பேரும் கடிச்சதும்

அத்தனையும் மறந்துபுட்டு
இவன் நெஞ்சை வதைக்கிறா
அப்பனோட பேச்ச மட்டும்
பெருசாக நினைக்குறா
ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ
அம்போன்னு முழிக்குறான்
ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ
அம்போன்னு முழிக்குறான்

என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே

ஆமாம் தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

அதக் கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

ஆசை வச்ச ஆம்பிளை நான்
ஆண்டியா அலையுறேன்
அல்லும் பகல் உன்னை எண்ணி
தெருவுல திரியுறேன்
நேத்துவரை நடந்ததெல்லாம்
தெய்வம் செஞ்ச சோதனை
நீ மட்டும் மனசு வச்சா
தீந்துவிடும் வேதனை

நான் மட்டும் இல்லையினா
சன்யாசம் வாங்கிருப்பான்
காசி முதல் ராமேஸ்வரம்
காவி கட்டி போயிருப்பான்
மங்களத்த பெத்தவனே
உம்மனச மாத்திக்கடா
மங்களத்த பெத்தவனே
உம்மனச மாத்திக்கடா

என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே

ஆமாம் தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

அதக் கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

இந்த ஊரு பொண்ண நம்பி
எம்மனச தொறந்து வச்சேன்
சொந்த ஊரு சாதி சனம்
அத்தனையும் மறந்து வந்தேன்
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே

ஆமாம் தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

அதக் கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

ஆமாம் உங்க மனமே

*****
3. தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
படம் : தூறல் நின்னு போச்சு (1982)
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
இசை : இளையராஜா
இயற்றியவர் : வைரமுத்து

வீடியோ


பெண்: தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

பெண்: தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

ஒரு தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம்
மெதுவாய் பருகியபடி

தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
ஆண்: காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்
பெண்: அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம்
சந்தித்தால் தெரியும்
இவளின் கனவு
கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்

ஆண்: தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
பெண்: ஆடும் பொம்மை மீது
ஜாடை சொன்ன மாது

ஆண்: லாலா லால லாலா
லால லால லாலா

பெண்: கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளில் நீராடினாள்

ஆண்: ராராரரா ராராரரா
ராராரரா ராராரரா

ஆண்: அன்பே ஆடை கொடு
எனை அனுதினம் அள்ளிச் சூடிவிடு

பெண்: இதழில் இதழால்
கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட
மடி கொடு

ஆண்: தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

பெண்: மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம்
மெதுவாய் பருகியபடி

ஆண் & பெண்: தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

*****
4. பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
படம் : தூறல் நின்னு போச்சு (1982)
பாடியவர்கள் : கே.ஜே. யேசுதாஸ், உமா ரமணன்
இசை : இளையராஜா
இயற்றியவர் : முத்துலிங்கம்

வீடியோ


ஆஆஆஆ
ஆஆஆஆ
ஆஆஆஆ

தந்தனத்தனா
தந்தனத்தனா
தந்தனத்தனா
தந்தனத்தனா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

மாலை அந்தி மாலை
இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை
இந்த வேளை மோகமே

நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே

மேக மழை நீராட
தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
னன னன னன னன னா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

தந்தனத் தனத் தனத் தனத் தனா
தந்தனத்தனா தந்தனத்தனா
தந்தனத்த தந்தனத்தனா

பூவை எந்தன் தேவை
உந்தன் தேவை அல்லவோ
பூவை எந்தன் தேவை
உந்தன் தேவை அல்லவோ

மன்மதன் கோயில் தோரணமே
மார்கழி திங்கள் பூ முகமே

நாளும் இனி சங்கீதம்
ஆடும் இவள் பூந்தேகம்

அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்
னன னன னன னன னா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

*****
5. தாலாட்ட நான் பொறந்தேன்
படம் : தூறல் நின்னு போச்சு (1982)
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்
இசை : இளையராஜா
இயற்றியவர் : வாலி

வீடியோ


லுலுலுலுலாய்
ஆரிராரிராரோ
ஆரிராரிராரோ

தாலாட்ட நான் பொறந்தேன்
தாலே தாலேலோ
தலையாட்ட நீ பொறந்த
ஆரோ ஆரிராரோ

அத்தை பெத்த அன்ன கிளியே
ஆசை ரோசாவே
புத்தி கொஞ்சம் முத்துனாதான்
கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்

தாலாட்ட நான் பொறந்தேன்
தாலே தாலேலோ
தலையாட்ட நீ பொறந்த
ஆரோ ஆரிராரோ

ஊரில் நூறு பொண்ணிருக்க
உன்னை போய் நான் புடிச்சேன்

ஊரில் நூறு பொண்ணிருக்க
உன்னை போய் நான் புடிச்சேன்

ஆறு வயசு அம்மா உன் மனசு
ஆத்தாடி ஆளை விடும்மா

கட்டிலதான் விட்டுவிட்டு
தொட்டிலையும் ஆட்டவா
அம்மணி கும்பிடு
என்னை நீ விட்டுடு

தாலாட்ட நான் பொறந்தேன்
தாலே தாலேலோ
தலையாட்ட நீ பொறந்த
ஆரோ ஆரிராரோ

காதல் பாஷை தெரியவில்லே
காட்டும் ஜாடை புரியவில்லே

காதல் பாஷை தெரியவில்லே
காட்டும் ஜாடை புரியவில்லே

தாகம் இருக்கு
தண்ணீரும் இருக்கு
தாளாத ஆசை எனக்கு
சத்தம் இட்டு முத்தமிட்டா
ஊரை எல்லாம் கூட்டுவ
உன்னை நான் கட்டினா
என்ன தான் பண்ணுவேன்

தாலாட்ட நான் பொறந்தேன்
தாலே தாலேலோ
தலையாட்ட நீ பொறந்த
ஆரோ ஆரிராரோ

அத்தை பெத்த அன்ன கிளியே
ஆசை ரோசாவே
புத்தி கொஞ்சம் முத்துனாதான்
கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்

தாலாட்ட நான் பொறந்தேன்
தாலே தாலேலோ
தலையாட்ட நீ பொறந்த
ஆரோ ஆரிராரோ

*****


புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே (1991)
மாமன் ஒரு நாள் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
பொத்தி வச்ச மல்லிக மொட்டு - மண்வாசனை (1983)
பொன்மேனி உருகுதே - மூன்றாம் பிறை (1982)
மார்கழிப் பூவே - மே மாதம் (1994)
பூங்காற்று புதிதானது - மூன்றாம் பிறை (1982)
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் - அபூர்வ சகோதரர்கள் (1989)
ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி (1980)
எந்தன் நெஞ்சில் நீங்காத - கலைஞன் (1993)
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - இதயம் (1991)
மீனம்மா... - ஆசை (1995)
இனிமை நிறைந்த உலகம் இருக்கு - நினைத்தாலே இனிக்கும் (1979)
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021 | 2022 | 2023