|
|
மூன்றாம் பிறை நடிப்பு
கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா, ஒய். ஜி. மகேந்திரன், காந்திமதி, பூர்ணம் விஸ்வநாதன்பாடல்கள்
கண்ணதாசன், வைரமுத்து, கங்கை அமரன்இசை
இளையராஜாபடத்தொகுப்பு
டி. வாசுகதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்
பாலுமகேந்திராதயாரிப்பு
ஜி. தியாகராஜன்தயாரிப்பு நிறுவனம்
சத்ய ஜோதி பிலிம்ஸ்வெளீயீடு:
19 பிப்ரவரி 1982வீடியோ மூன்றாம் பிறை, இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1982ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா, ஒய். ஜி. மகேந்திரன், காந்திமதி, பூர்ணம் விஸ்வநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தனது மாமனார் ஆர்.எம்.வீரப்பனுக்குச் சொந்தமான சத்யா மூவிஸ் நிறுவனத்தை கவனித்து வந்த தியாகராஜன், சொந்தமாக சத்யஜோதி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். மணிரத்னம் மற்றும் தியாகராஜன் இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்தனர், ஏனெனில் இருவரின் தந்தைகளும் வீனஸ் மூவிஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்தனர். மணிரத்னம் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திராவை தியாகராஜனிடம் அறிமுகப்படுத்தினார். பாலுமகேந்திராவின் கதையைக் கேட்டதும், தியாகராஜனின் அப்பா ‘கல்யாண பரிசு’ படம் போல இப்படம் நன்றாக வரும், ஆகவே கவலைப்படாமல் பட வேலைகளைத் துவங்கச் சொன்னார். மூன்றாம் பிறை படத்தின் கதையை பாலுமகேந்திரா தன்னிடம் கூறியபோது, இருபது நிமிடங்கள் மட்டுமே கதையைக் கேட்ட பிறகு கதாநாயகன் சீனுவாக நடிக்க ஒப்புக் கொண்டதாக கமல்ஹாசன் பின்னர் ஒரு நிகழ்வில் கூறினார். பாக்யலட்சுமி / விஜி கதாபாத்திரம் ஆரம்பத்தில் ஸ்ரீப்ரியாவுக்கு வழங்கப்பட்டது, ஆனால் அவர் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட வேலைகள் காரணமாக அப்பாத்திரத்தை ஏற்க முடியவில்லை. எனவே அந்த பாத்திரத்திற்கு ஸ்ரீதேவியை பரிந்துரைத்தார் கமல்ஹாசன். அந்த ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளின் இறுதிச் சுற்றில் ஸ்ரீதேவியின் பெயரும் இருந்தது. இறுதிச் சுற்றில் ஸ்ரீதேவி, ஷபானா ஆஸ்மிக்கு கடுமையான போட்டியை அளித்தார். இருப்பினும் அந்த ஆண்டு விருது ஷபானா ஆஸ்மிக்கு கிடைத்தது. ‘பொன்மேனி உருகுதே’ பாடலில் கமல்ஹாசன் செதுக்கப்பட்ட உடலமைப்பை பெற கடுமையாக உழைக்க வேண்டி வந்தது. இப்பாடலுக்காக சென்னையில் ஒரு வாரம் ஒத்திகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாலுமகேந்திரா இப்பாடலை ‘பிளாட் லைட்டில்’ படமாக்க விரும்பவில்லை; ஆகவே அதிகாலையில், 6 மணி முதல் 8 மணி வரையும், பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை சூரியன் மறையும் போதும் படப்பிடிப்பு நடத்தினார். எனவே பாடலை முடிக்க ஐந்து நாட்கள் ஆனது. ஆனால் ஏப்ரல் 2006 இல், ஒரு பேட்டி ஒன்றில் பாலு மகேந்திரா இப்பாடல் படத்திற்கு முற்றிலும் தேவையற்றது என்று தெரிவித்தார். இப்பாடலில் சில்க் ஸ்மிதா இருந்ததால், படத்தின் விளம்பரத்திற்கு அது உதவும் என்ற ஒரே காரணத்தால் தான் இப்பாடல் சேர்க்கப்பட்டது. படப்பிடிப்பு நடைபெற்ற அந்த நேரத்தில் பாலு மகேந்திராவால் தொடர்ச்சியாக ஒரே ரயிலை வாடகைக்கு எடுக்க முடியவில்லை. இதனால் சீனுவும் விஜியும் கெட்டிக்குப் புறப்படும் படத்தின் காட்சிக்காக ஒரு ரயிலையும், கெட்டி ரயில் நிலையத்தில் படமாக்கப்பட்ட கிளைமாக்ஸிற்காக மற்றொரு ரயிலையும் வாடகைக்கு எடுத்தார். கிளைமாக்ஸை படமாக்க கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஆனது. படத்தின் திரைக்கதையில் மழை இல்லையென்றாலும் கிளைமாக்ஸ் படமாக்கப்பட்ட நாளில் மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் காட்சியை தொடர்ந்து படமாக்க பாலுமகேந்திரா முடிவு செய்தார். ரயிலை நோக்கி நடந்து செல்லும் போது சீனு மின்கம்பத்தில் மோதிக்கொள்ளும் காட்சி திட்டமிடப்பட்டதல்ல; ஷாட்டின் நடுவில் ஹாசன் அதை நிகழ்த்தினார். அந்த காட்சியை படமாக்க, மகேந்திரன் ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து, இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு, படக்குழுவினர் அவரை கீழே விழாமல் தடுத்து நிறுத்தினர். இவ்வளவு சிரமமான நிலையிலும், அவர் அந்த ஷாட்டை சரியாக எடுத்து, ஒரே டேக்கில் ஒப்புதல் அளித்தார். இப்படத்தில் சில்க் ஸ்மிதாவின் குரலுக்கு அனுராதா பின்னணி குரல் கொடுத்தார். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். பாடல் வரிகளை கண்ணதாசன், வைரமுத்து மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதியுள்ளனர். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பணியாற்றி கடைசி திரைப்படம் இதுவாகும். "கண்ணே கலைமானே" எனும் பாடல் தான் அவர் இறப்பதற்கு முன்பாக எழுதிய கடைசி பாடலாகும். இப்படம் தமிழகத்தில் 45 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பல திரையரங்குகளில் இப்படம் வெள்ளி விழா கண்டது. சென்னையில் உள்ள சுபம் திரையரங்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடியது. இந்த திரைப்படம் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் மற்றும் பாலுமகேந்திராவிற்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுகள் கிடைத்தன. இப்படத்திற்கு பாலுமகேந்திராவிற்கு சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம்பேர் விருது கிடைத்தது. சிறந்த திரைப்படம் (மூன்றாம் பரிசு), சிறந்த நடிகர் (கமல்ஹாசன்) மற்றும் சிறந்த நடிகை (ஸ்ரீதேவி) உட்பட ஐந்து தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் இப்படம் வென்றது. மூன்றாம் பிறை தெலுங்கில் வசந்த கோகிலா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. பாலுமகேந்திரா இந்தப் படத்தை ஹிந்தியில் சத்மா (1983) என்ற பெயரில் மறுஆக்கம் செய்தார், அதில் ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் ஸ்மிதா ஆகியோர் மீண்டும் நடித்தனர். ஆனந்த விகடன் இதழ் 7 மார்ச் 1982 தேதியிட்ட இதழில் இப்படத்தின் விமர்சனத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவியின் நடிப்பு, இளையராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மற்றும் பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டி, படத்திற்கு 100க்கு 53 மதிப்பெண்கள் கொடுத்து பாராட்டியது. *****
பாடல்கள்
1. பூங்காற்று புதிதானது
படம் : மூன்றாம் பிறை (1982) பாடியவர் : கே. ஜே. யேசுதாஸ் இசை : இளையராஜா இயற்றியவர் : கண்ணதாசன் வீடியோ பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும் பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும் வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும் மரகதக் கிள்ளை மொழி பேசும் மரகதக் கிள்ளை மொழி பேசும் பூவானில் பொன்மேகமும் உன் போலே நாளெல்லாம் விளையாடும் புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும் பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி பொன்வண்டோடும் மலர் தேடி பொன்வண்டோடும் மலர் தேடி என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால் நீ எந்தன் உயிர் அன்றோ பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும் பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது *****
1. பொன்மேனி உருகுதே
படம் : மூன்றாம் பிறை (1982) பாடியவர் : எஸ். ஜானகி இசை : இளையராஜா இயற்றியவர் : கங்கை அமரன் வீடியோ பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே பனிகாற்றிலே தனனா நனனா நனனா பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே பனிகாற்றிலே தனனா நனனா நனனா இரு விழியும் தூங்காது இனிமை சுகம் வாங்கும் மனது இனியும் இது தாங்காது இளமேனி வாடுதே தனலாகவே ஹா இளங்காற்று வீசுதே அனலாகவே பதில் இல்லையோ தனனா நனனா நனனா பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே பனிகாற்றிலே தர ரா ருருரு டுடுடு அருவி என ஆசை எழுந்து அனைக்கும் சுகம் பார்க்காதோ உருகும் மனம் உன்னை நினைந்து உணர்வுகளை சேர்க்காதோ உனக்காக ஏங்குதே ஒரு பூவுடல் உறவாடும் இன்பமோ திருப்பார் கடல் பதில் இல்லையோ பபபா பபபா பபபா பொன்மேனி உருகுதே என் ஆசை ஆ பெருகுதே ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே பனிகாற்றிலே தனனா நனனா நனனா *****
|