அந்த 7 நாட்கள் (Antha Ezhu Naatkal)


antha ezhu naatkal
நடிப்பு
பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா, காஜா ஷெரிப்

ஒளிப்பதிவு
பி. கணேச பாண்டியன்

படத்தொகுப்பு
ஆர். பாஸ்கரன்

இசை
எம்.எஸ். விஸ்வநாதன்

கதை, திரைக்கதை, இயக்கம்
பாக்யராஜ்

தயாரிப்பாளர்
பி.எஸ். ஜெயராமன், எம். நாச்சியப்பன்

தயாரிப்பு நிறுவனம்
ஸ்ரீனி கிரியேஷசன்ஸ், சத்யஜோதி பிலிம்ஸ்

வெளீயீடு:
26 அக்டோபர் 1981

வீடியோ


*****

பாடல்கள்
1. கவிதை அரங்கேறும் நேரம்
படம் : அந்த 7 நாட்கள் (1981)
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
இயற்றியவர் : குருவிக்கரம்பை சண்முகம்

வீடியோ


ஸஸக நிஸப நிஸஸ...
ஸஸ ஸமக நிஸப நிஸஸ...

நிஸ ஸபப பபப பதமம...
மம கமக கம கமநிப கரிஸநி...

சப்த ஸ்வரதேவி யுணரு

இனி என்னில் வரதான மருளு
நீ அழகில் மமனாவில் வாழு
என் கருவில் ஒளி தீபமேற்று

சப்த ஸ்வரதேவி உணரு

கவிதை அரங்கேறும் நேரம்...
மலர் கணைகள் பரிமாறும் தேகம்...
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்...

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்...

பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி

பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி

இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்

உன் அங்கம் தமிழோடு சொந்தம்
அது என்றும் திகட்டாத சந்தம் ம்ம்ம்...
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

கைகள் பொன்மேனி கலந்து
மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து

கைகள் பொன்மேனி கலந்து
மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து

இனி சொர்க்கம் வேறொன்று எதற்கு
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு

மனம் கங்கை நதியான உறவை
இனி எங்கே இமை மூடும் இளமை

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

நீரில் நின்றாடும் போதும்
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
அது நேரில் நீ வந்த மாயம்
இந்த நிலைமை எப்போது மாறும்

என் இளமை மழை மேகமானால்
உன் இதயம் குளிர் வாடை காணும் ம்ம்ம்...

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

*****

2. எண்ணி இருந்தது ஈடேற
படம் : அந்த 7 நாட்கள் (1981)
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், வாணி ஜெய்ராம்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
இயற்றியவர் : வைரமுத்து

வீடியோ


பெண் : எண்ணி இருந்தது ஈடேற
ஆண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ
பெண் : கன்னி மனம் இன்று சூடேற
ஆண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ

பெண் : எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இமை துள்ள தாளம் சொல்ல
இத என்ன சுரம் சொல்லி நான் பாட

ஆண் : எண்ணி இருந்தது ஈடேற
பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ
ஆண் : கன்னி மனம் இன்று சூடேற
பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ

ஆண் : எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
மெட்டி சத்தம் மெட்டு சந்தம்
மெட்டி சத்தம் மெட்டு சந்தம்
அது சுரம் சொல்லித் தரும் நீ பாடு

ஆண் : புதிய ராகம் கண்டுபிடிக்க
ரெண்டு வருஷம் நினைச்சேன்

ஆண் : புதிய ராகம் கண்டுபிடிக்க
ரெண்டு வருஷம் நினைச்சேன்
உன் குரலை கேட்ட பிறகு தானே
ராகம் கண்டு புடிச்சேன்
உன் குரலை கேட்ட பிறகு தானே
ராகம் கண்டு புடிச்சேன்

பெண் : முந்தாநேத்து சாயங்காலம்
முல்ல பூவ தொடுத்தேன்

பெண் : முந்தாநேத்து சாயங்காலம்
முல்ல பூவ தொடுத்தேன்
உன் பாட்ட கேட்டு கெறங்கி போயி
நாரத்தானே முடிஞ்சேன்
உன் பாட்ட கேட்டு கெறங்கி போயி
நாரத்தானே முடிஞ்சேன்

ஆண் : நினைச்சேன் சொல்ல தவிச்சேன்

பெண் : நான் கனவில் முத்து குளிச்சேன்

ஆண் : எண்ணி இருந்தது ஈடேற
பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ
ஆண் : கன்னி மனம் இன்று சூடேற
பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓ

ஆண் : மெட்டி சத்தம் மெட்டு சந்தம்
மெட்டி சத்தம் மெட்டு சந்தம்
அது சுரம் சொல்லித் தரும் நீ பாடு

பெண் : சாரல் மேகம் சரசம் பேசி
மனசை வந்து நனைக்கும்

பெண் : சாரல் மேகம் சரசம் பேசி
மனசை வந்து நனைக்கும்
இந்த ஆசை வேகம் பாத்து
பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்
இந்த ஆசை வேகம் பாத்து
பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்

ஆண் : தேதி பாத்து நேரம் பாத்து
இரவில் வெளக்கு அணைக்கும்

ஆண் : தேதி பாத்து நேரம் பாத்து
இரவில் வெளக்கு அணைக்கும்
உன் கூந்தல் மீது ஜாதி மல்லி
விடியும் வரைக்கும் மணக்கும்
உன் கூந்தல் மீது ஜாதி மல்லி
விடியும் வரைக்கும் மணக்கும்

பெண் : மயக்கம் உண்டு எனக்கும்

ஆண் : அட இருந்தும் என்ன தயக்கம்

பெண் : எண்ணி இருந்தது ஈடேற
ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ
பெண் : கன்னி மனம் இன்று சூடேற
ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ

ஆண் : மெட்டி சத்தம் மெட்டு சந்தம்
மெட்டி சத்தம் மெட்டு சந்தம்
அது சுரம் சொல்லித் தரும் நீ பாடு

*****