நிழல்கள்

நடிப்பு
நிழல்கள் ரவி, சந்திரசேகர், ராது (ரோஹினி), ராஜசேகர்

பாடல்கள்
வாலி, கங்கைஅமரன், வைரமுத்து

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
B.கண்ணன்

கதை, வசனம்
மணிவண்ணன்

திரைக்கதை, இயக்கம்
பாரதிராஜா

தயாரிப்பு நிறுவனம்
மனோஜ் கிரியேசன்ஸ்

வெளீயீடு: நவம்பர் 6, 1980


வீடியோ


     கோபியும் ஹரியும் வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள். இருவரும் சென்னையில் ஒரே அரையில் தங்கியிருக்கிறார்கள். கோபி வேலை தேடுகிறார், ஹரி மியூசிக் கம்போசராக முயற்சி செய்கிறார். இருவரும் தங்களின் நண்பர்களின் உதவியுடம் நாட்களை கடத்துகிறார்கள்.

     அவர்களின் பக்கத்து அறையில் கல்லூரி மாணவர் பிரபு தங்கியிருக்கிறார். சிகரெட் புகைப்பது, படம் வரைவது, பாடுவது என பொழுதை கழிக்கிறார் பிரபு.

     இவர்கள் மூவரும் வசிக்கும் குடியிருப்பிற்கு ஒரு குடும்பம் புதிதாக குடிவருகிறது. அந்த குடும்பத்தில் மஹா என்ற கல்லூரி மாணவி ஒருவர். அவர் பிரபு படிக்கும் அதே கல்லூரியில் படிக்கிறார். இருவரும் நண்பர்களாகிறார்கள்.

     பிரபு வீணை வகுப்பில் சேர விரும்புகிறார். ஆனால் அவர் துரதிர்ஷ்டம் அவர் சேருவதற்கு முன்பே விணை குரு இறந்துவிடுகிறார்.

     கோபி மஹாவிற்கு டியூசன் எடுக்கிறார். இருவரும் காதலில் விழுகிறார்கள்.

     இதற்கிடையே கோபி, ஹரி, பிரபு மூவரும் சில காரணங்களுக்காக கைது செய்யப்படுகிறார்கள். மஹா அவர்களை ஜாமீனில் எடுக்கிறாள்.

     பிரபு கல்லூரியில் இருந்து நீக்கப்படுகிறார். இதனால் பிரபுவின் தந்தை அவரை திட்டுகிறார். பிரபுவுக்கு ஆதரவாக மஹா வாதாடுகிறார். இதை பிரபு காதல் என தவறாக நம்புகிறார்.

     இதனிடையே மஹாவுக்கும் கோபிக்கும் இடையே காதல் என உறவினர்கள் சந்தேகப்பட்டு மஹாவின் பெற்றோரிடம் கூறவே அவர்கள் டியூசன் செல்வதை நிறுத்துகின்றனர்.

     இதனிடையே ஹரி இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி முன்பணமும் பெறுகிறார். அந்தப் பணத்தைக் கொண்டு அடகு வைத்த மஹாவின் செயினை திருப்பித் தருகிறார்கள்.

     மஹாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள். மஹா கோபியை சந்தித்து வேலை தேடும்படும் சொல்கிறார். அப்போதுதான் அவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடியும் என்று எடுத்துச் சொல்கிறார்.

     பைனான்சியர் புது இசையமைப்பாளரை விரும்பாததால் ஹரி படத்திலிருந்து விலக்கப்படுகிறார். வீட்டு வாடகை கொடுக்காததினால் வீட்டு உரிமையாளர் கோபியையும் ஹரியையும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். இருவரும் ரிக்‌ஷா தொழிலாளி மணி வீட்டில் தஞ்சமடைகிறார்கள். கோபியின் தந்தை மரணமடைந்ததாக தந்தி வருகிறது. ஊருக்குப் போக காசில்லாததால், காசி பெற்று வர வெளியே செல்லும் மணியின் மகன் சிங்கம் விபத்தில் சிக்குகிறான். ஹரி தெருவில் படம் வரைந்து காசு திரட்ட முயல்கிறான். கோபி வட்டிக்காரனை அணுகி பணம் பெற முயலுகிறான். வட்டிக்காரன் சிங்கத்தைப் பற்றி தவறாகப் பேச கோபம் கொண்ட கோபி அவனைக் கத்தியால் குத்திவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வருகிறான். ஆனால் அதற்குள் சிங்கம் இறந்துவிடுகிறான்.

     இதனிடையே மஹாவின் பெற்றோர் அவளுக்கு திருமணம் நிச்சயிக்கிறார்கள். மஹா பிரபுவை சந்திக்கும் போது பிரபு அவளை காதலிப்பதாக சொல்கிறான். இதனால் அதிர்ச்சியடையும் மஹா தான் அவனை காதலிக்கவில்லை கோபியைத் தான் காதலைப்பதாகச் சொல்கிறாள். இதனால் பிரபு ஏமாற்றமடைகிறான். விரக்தியில் மஹாவை கெடுக்கத் துணிகிறான். ஆனால் மஹா கத்தியை எடுத்து தன் அருகில் நெருங்கினால் தன்னை மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டுகிறாள். இதனால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் பிரபு அந்த கத்தியை எடுத்து தன்னைத் தானே குத்திக் கொள்கிறான்.

     அதே நேரம் கோபி மஹா வீட்டிற்கு வந்து வட்டிக்கடைக்காரனை கொன்றுவிட்ட விஷயத்தை தெரிவிக்கிறான்.

     இருவரும் ஒரு முடிவு எடுத்து திருமணம் செய்து கொள்கிறார்கள். பிரபுவின் கொலைக்காக அடுத்த நாள் இருவரும் கைது செய்யப்படுகிறார்கள்.

     ஹரி ஹார்மோனியத்தை கடலில் வீசியெறிந்துவிட்டு பைத்தியமாகத் திரிகிறார்.

     கோபியாக நிழல்கள் ரவியும், மஹாலட்சுமியாக (மஹா) ராதுவும், ஹரியாக சந்திரசேகரும், பிரபுவாக ராஜசேகரும் நடித்துள்ளனர். வி, சந்திரசேகர், ராது மற்றும் ராஜசேகர் ஆகிய நால்வரும் புதுமுகங்கள்.

     இந்த படத்தில் தான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேருகிறார் மணிவண்ணன். மணிவண்ணனும் பாரதிராஜவும் சேர்ந்து இக்கதையை உருவாக்கியுள்ளார்கள். நிறம் மாறாத பூக்கள் படத்திற்கு டப்பிங் பேச முதலில் ரவியை அழைத்த பாரதிராஜா, பின்னர் தானே டப்பிங் பேசுகிறார். இருப்பினும், தனது அடுத்த படத்தில் கதாநாயகனாக வாய்ப்பளிக்கிறார். இதன் மூலம் ரவி, ‘நிழல்கள்’ ரவியாக பரிணமிக்கிறார்.

     ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ பாடல் மூலம் தான் வைரமுத்து திரையுலகில் அடியெடுத்து வைத்தார். படத்திற்கு பின்னணி இசையுடன், இசையமைத்து உள்ளார் இளையராஜா. நான்கு பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றவையாகும்.

     கே.பாலச்சந்தரின் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்துடன் சேர்ந்து இந்த படம் வெளியானது. இரு படங்களும் வேலையில்லா திண்டாட்டம் என்ற ஒரே கருவுடன் வெளிவந்தன. இருப்பினும் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ வெற்றிப் படமானது, ‘நிழல்கள்’ தோல்வியடைந்தது. இருப்பினும் 1981ஆம் ஆண்டு பன்னாட்டு இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 21 படங்களில் நிழல்கள் படமும் ஒன்றாகும். அந்த விழாவில் திரையிடப்பட்ட மற்றொரு தமிழ் திரைப்படம் அதே ஆண்டு வெளியான (5 டிசம்பர் 1980) கே.விஜயனின் ‘தூரத்து இடி முழக்கம்’ ஆகும்.

     1981ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திரை விருதுகளில் நிழல்கள் படம் இரு விருதுகளை வென்றது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இளையராஜாவுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் கிடைத்தது.

     இன்றளவும் சிறந்த தமிழ் படங்களின் பட்டியலில் ‘நிழல்கள்’ படம் இடம்பெற்றாலும், அப்படம் வெளிவந்த சமயத்தில் அது வெற்றிப்படமாக திகழவில்லை என்பது சோகமே.

*****

பாடல்கள்
1. பொன் மாலை பொழுது
படம் : நிழல்கள் (1980)
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

வீடியோ


ஹே தோ தீன் லலலா

பொன் மாலைப் பொழுது
இது ஒரு பொன் மாலைப் பொழுது

வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

இது ஒரு பொன் மாலைப் பொழுது
ம்ஹும் ஹே ஹா ஹோ ஹுஹுஹும்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்

வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

இது ஒரு பொன் மாலைப் பொழுது
வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன் மாலை பொழுது

வானம் எனக்கொரு போதி மரம்
நாலும் எனக்கது சேதி தரும்

வானம் எனக்கொரு போதி மரம்
நாலும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெரும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்

இது ஒரு பொன் மாலைப் பொழுது
வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன் மாலைப் பொழுது

ஹஹா ஹே ஹோ ஹா லலலா
ம்ஹும் ஹே ஹோ ஹா ம்ஹுஹும்

*****
2. மடை திறந்து தாவும் நதியலை நான்
படம் : நிழல்கள் (1980)
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

வீடியோ


ம்ம்ம்
தனனன்னனா ம்ம்ம்
தனனன்னனா ம்ம்ம்

தலலல்லலா தால லல்லல்லா
தலலல்லலா தால லல்லல்லா
தலலல்லலா தலாலல்ல லாலல்ல
தலல லலா லா

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோய்

தானனனனா நானனனனா
தானனனனா நானனனனா

ஹேய் ஹேய்
பபப்ப பாப்பா
பபப்ப பாப்பா
பாப்பு பூப்பூப்பூ
பாபபப்ப பாபபப்ப
பப்பா பப்பா பப்பா
பபப்ப பப்பா பப்பா பப்பா

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே ஹோய்
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் சுவரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறுகுயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோய்

ல ல லி லாலி லாலி லாலி லாலி லாலி லா
லலலோலி லலலோலி லலலோலி லலலோ
லலலோலி லலலோலி லலலோலி லலலோ
லலலோலி லலலோலி லலலோலி லலலோ
லலலோலி லலலோலி லலலோலி லலலோ

நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்களம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்களம்
இசைக்கென்ன இசைக்கின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோய்

லலலலல்லா லால்ல லலலலல்லா
லலலலல்லா லால்ல லலலலல்லா

*****
3. பூங்கதவே தாழ் திறவாய்
படம் : நிழல்கள் (1980)
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : கங்கை அமரன்
பாடியவர்கள் : தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்

வீடியோ


பூங்கதவே தாழ் திறவாய்
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய்
பெண் பாவாய்
பூங்கதவே தாழ் திறவாய்

நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாரம்

காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்..ம்ம்...

பூங்கதவே தாழ் திறவாய்

பூவாய் பெண் பாவாய்

திருத்தேகம் ம்ம்ம்...
எனக்காகும் ம்ம்ம்...

தேனில் நனைந்தது என் உள்ளம் ம்ம்ம்...
பொன்னாரம் ம்ம்ம்... பூவாடை ம்ம்ம்...

ஆடும் தோரணம் எங்கெங்கும் ம்ம்ம்...

மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்ம்...

பூங்கதவே தாழ் திறவாய்

பூங்கதவே தாழ் திறவாய்

பூவாய் பெண் பாவாய்

பொன் மாலை சூடிடும்
பூவாய் ம்ம்ம்... பெண் பாவாய் ம்ம்ம்...

ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...

ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...

*****
4. தூரத்தில் நான் கண்ட உன் முகம்
படம் : நிழல்கள் (1980)
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.ஜானகி

வீடியோ


ஆ.. ஆ.. ஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆ.. ஆஆஆ.. ஆ..

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே..
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணிப் பாடும் ராகம் ம்ம்...
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆ...

ஆஆ.. ஆஆஆ ஆஆஆ...

வேய்ங்குழல் நாதமும் கீதமும்...
ஆஆஆஆ.. ஆஆஆஆ...
ஆஆஆ ...
வேய்ங்குழல் நாதமும் கீதமும்
மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே
ஐயன் உன் தஞ்சம் என் நெஞ்சமே
தினம் அழைத்தேன்
பிரபு உனையே
பாடும் பாட்டிலே
புது ராகம் தோன்றுமா

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

காதல் எனும் கீதம் பாடி உருகும் ஒரு பேதையான மீரா

மீரா.. மீரா.. மீரா.. மீரா..

வேளை வரும்போது வந்து காக்கும் கரம் காக்கும் என்று
வீணை மீட்டும் தேவி உள்ளமே

தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு
காலை மாலை பூஜை செய்தும் கேட்கவில்லையா
கனவு போல வாழ்வில் எந்தன்

தான னான னான னான...

கவலை யாவும் மாற வேண்டும்

தான னான னான னான...

கனவு போல வாழ்விலெந்தன்
கவலை யாவும் மாற வேண்டும்
இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ
நாளும் எனை ஆளும் துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன்... மறவேன்... மறவேன்...
உன் நினைவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்
வரும் விதி தரும் அதில்
உறவுகள் பிரிவதும் ஒரு சுகம்
வானமும் மேகமும் போலவே...

வானமும் மேகமும் போலவே...
நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் மறைந்த வானில் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே
தினம் அழைத்தேன்
பிரபு உனையே
ஆடும் காற்றிலே
புது ராகம் தோன்றுமா

தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம் ம்ம்ம்...புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)
வா வா என் வீணையே - சட்டம் (1983)
தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982)
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982)
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982)
ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982)
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979)
மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964)
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978)
ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979)
கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021)
கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021