ரோசாப்பூ ரவிக்கைக்காரி

rosappu ravikkaikari
நடிப்பு
சிவக்குமார், தீபா, சிவச்சந்திரன், வினு சக்கரவர்த்தி

பாடல்கள்
புலமைப்பித்தன், கங்கை அமரன்

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
ஆர்.என்.கே. பிரசாத்

படத்தொகுப்பு
டி.பி. சேகர்

இயக்கம்
தேவராஜ் & மோகன்

தயாரிப்பு
திருப்பூர் மணி

தயாரிப்பு நிறுவனம்
விவேகானந்தா பிக்சர்ஸ்

வெளீயீடு:
18, மே 1979

வீடியோ


ரோசாப்பூ ரவிக்கைக்காரி நடிகர் சிவக்குமார் அவர்களின் 100வது படமாகும். இப்படத்தை விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இரட்டை இயக்குநர்களான தேவராஜ் மற்றும் மோகன் இயக்கத்தில் உருவான இப்படத்தை தயாரித்தவர் திருப்பூர் மணி.

இப்படம் ‘பரசங்கட கெண்டதிம்மா’ என்ற கன்னட படத்தின் தழுவல் ஆகும். அந்த கன்னட படம் கன்னட எழுத்தாளர் ஸ்ரீகிருஷ்ண அலனஹள்ளி எழுதிய ‘பரசங்கட கெண்டதிம்மா' நூலின் திரைவடிவமாகும். இப்படத்தில் தான் வினு சக்கரவர்த்தி அறிமுகம் ஆனார்.

இப்படத்தின்பாடல்களை புலமைப்பித்தனும், கங்கை அமரனும் எழுதியுள்ளார்கள். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் வரும் ‘மாமன் ஒரு நாள்’ என்ற பாடல் ஹரிகாம்போஜி ராகத்திலும், ‘என்னுள்ளே எங்கோ’ என்ற பாடல் மதுவந்தி ராகத்திலும் அமைந்துள்ளன.

வினு சக்ரவர்த்தி எழுதிய வண்டிச்சக்கரம் , முதலில் சிவகுமாருக்கு ஒரு நடிகராக100வது படமாக இருக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், சக்ரவர்த்தியும், இயக்குனர் கே. விஜயனும் தயாரிப்பாளர் திருப்பூர் மணியும் 1978 ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான பரசங்கட கெண்டெதிம்மாவைப் பார்த்தனர். இந்தப் படத்தின் மறுஆக்கம் சிவக்குமாரின் 100வது படமாக சிறப்பாகப் பொருந்தும் என்று அவர்கள் சிவகுமாரிடம் கூறினர்.

ரோசாப்பு ரவிக்கைகாரி என்று பெயரிடப்பட்ட இந்த மறுஆக்கம், தேவராஜ்-மோகன் இரட்டையர்களால் இயக்கப்பட்டது மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் கீழ் மணியால் தயாரிக்கப்பட்டது. இது தேவராஜ்-மோகனுடன் சிவகுமாரின் 14வது திரைப்படமாகும்.

வினு என்று பெயரிடப்பட்ட சக்ரவர்த்தி, ரோசாப்பு ரவிக்கைகாரி மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். அவர் பரசங்கட கெண்டெதிம்மா படத்தில் பணிபுரிந்தார், மேலும் அவரை மறுஆக்கத்திற்கு பரிந்துரைத்தது அலனஹள்ளி தான். திரைக்கதையை விஜய் கிருஷ்ணராஜ் (கிருஷ்ணா என்று பெயரிடப்பட்டவர்) எழுதி, சினிமாவில் அறிமுகமானார். டி.பி. சேகர் மற்றும் ஆர்.என்.கே. பிரசாத் முறையே எடிட்டர் மற்றும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி ஏற்காட்டில் தொடங்கி மார்ச் 5 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இது ஏற்காட்டில் உள்ள வாழவந்தி கிராமத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு 45 வேலை நாட்களில் நிறைவடைந்தது. கடைசியாக ‘உச்சி வகுந்தெடுத்து’ பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

ரோசாப்பு ரவிக்கைகாரி படம் மே 18, 1979 அன்று வெளியிடப்பட்டது. மூன்று வெட்டுக்களுக்குப் பிறகு "A" (பெரியவர்களுக்கு மட்டும்) சான்றிதழ் பெற்றது.

ஆனந்த விகடன், மே 27, 1979 அன்று வெளியிட்ட மதிப்பாய்வில், சிவகுமாரின் நடிப்பையும் இளையராஜாவின் பின்னணி இசையையும் பாராட்டி, படத்திற்கு 100க்கு 50 மதிப்பெண்கள் வழங்கியது.

இந்த படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது, திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. சிவகுமார் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

தமிழ் சினிமாவில் துரோகத்தையும் அதன் விளைவுகளையும் முதல் முறையாக திரையில் துணிச்சலுடன் காட்டியதற்காக ரோசாப்பு ரவிக்கைகாரி திரைப்படம் ஒரு மைல்கல்லாக மாறியது.

*****
பாடல்கள்
1. உச்சி வகுந்தெடுத்து
படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி. சைலஜா
இசை : இளையராஜா
இயற்றியவர் : புலமைப்பித்தன்

வீடியோ


உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா

ஏ ஆரிராரோ.. ஆரிராரோ...
ஆரிராரிராரோ ஆரிராரோ... ஆரிராரோ..
ஆரிராரோ... ஆரிராரோ.. ஆரிராரோ...

பட்டியில மாடுகட்டி பால கறந்துவச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க

வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க

நானனனா நானனனாநனனா ஹேய்ய். ஹேய்...
நான ஹேய்...
நானனனா நானனனானா ஹேய்...

பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க
செங்கரையான் தின்னிருக்க நியாயமில்ல
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா

*****
2. என் உள்ளில் எங்கோ
படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
பாடியவர் : வாணி ஜெயராம்
இசை : இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்

வீடியோ


என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது

உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா...

ஏன் நிறுத்திட்டீங்க...

இங்க ஒரு அழகான இடமிருக்கு...
உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா...

என் மன கங்கையில் சங்கமிக்க
சங்கமிக்க பங்கு வைக்க
பொங்கிடும் பூம்புனலில்…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பொங்கிடும் அன்பெனும் பூம்புனலில்
போதையிலே மனம் பொங்கி நிற்க
தங்கி நிற்க காலம் இன்றே சேராதோ

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது

மஞ்சளை பூசிய மேகங்களே
மேகங்களே மோகங்களே
மல்லிகை மாலைகளே…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழி மாதத்து காலைகளே சோலைகளே
என்றும் என்னை கூடாயோ

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

*****
3. மாமன் ஒரு நாள்
படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் | எஸ். பி. சைலஜா
இசை : இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்

வீடியோ


பெண்: ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

பெண்: மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனப் பண்ணி
பார்த்தேனம்மா
அவன் வாங்கிக்கச்
சொல்லித் தந்தானம்மா

ஆண்: மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

பெண்: என் மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

ஆண்: அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனப் பண்ணி
பார்த்தேனம்மா
அவன் வாங்கிக்கச்
சொல்லித் தந்தானம்மா

பெண்: என்னத்தச் சொன்னான்
ஏது சொன்னான்
சின்னபுள்ள நான்
பச்சை புள்ளை நான்
வாசத்திலே மதி மறந்து
வாங்கிகிட்டேன் நான்
வச்சிக்கிட்டேன் நான்

ஆண்: மல்லியப்பூ வாசம்
என் மாமன் மேல வீசும்
மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

ஆண்: மாங்கா தோப்போரம்
நான் மறுநா போனேனாம்
தேங்கா பூவாட்டம்
நான் சிரிச்சிக் கிட்டிருந்தேனாம்
அடி ஆத்தாடி என்னோரமா
என் மாமன் வந்தான் அங்கே

பெண்: ஏ ஏ ஏ ஏ

ஆண்: என் மாமன் வந்தான் அங்கே
ஒரு மாங்கா தந்தான் திங்க

பெண்: என்னத்தப் பண்ணான்
ஏதுப் பண்ணான்
சின்னப் பொண்ணு நான்
பச்சப் பொண்ணு நான்
ஆசையில என்னை மறந்து
வாங்கிட்டேன் நான்
தின்னுபுட்டேன் நான்

ஆண்: மாமன் தந்த மாங்கா
நல்ல மல்கோவாதாங்க
மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

ஆண்: கம்மா கரையோரம்
நான் குளிச்சிக் கிட்டிருந்தேனாம்
சேலை துணி எல்லாம்
நான் தொவைச்சிக் கிட்டிருந்தேனாம்

அடி அம்மாடி என்னோரமா
என் மாமன் தானே வந்தான்
புது சேலை தானே தந்தான்

பெண்: என்னத்தப் பண்ணான்
ஏதுப் பண்ணான்
சின்னப் பொண்ணு நான்
பச்சப் பொண்ணு நான்
சேலையிலே என்ன மறந்து
வாங்கிக்கிட்டேன் நான்
கட்டிக்கிட்டேன் நான்

ஆண்: மாமன் தந்த சேலை
அந்த மல்லியப்பூ போல

பெண்: மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

ஆண்: ஒரு நா தனியா தான்
நான் வீட்டில இருந்தேனாம்
மெதுவா வந்தானாம்
நான் வரவா என்றானாம்

அடி ஆத்தாடி என்னோரமா

பெண்: புது பாய போட்டான்
அங்கே புது விதமா பாத்தான் இங்கே

ஆண்: என்னத்தப் பண்ணான்
ஏதுப் பண்ணான்
சின்னப் பொண்ணு நான்
பச்சப் பொண்ணு நான்
ஒண்ணுமறியா
கன்னி பொண்ணு நான்
மதி மயங்கி
படுத்துக்கிட்டேன்

குழு: ஹஹஹஹஹா

*****
4. வெத்தல வெத்தல வெத்தலையோ
படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்
இசை : இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்

வீடியோ


ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ

ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ
சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ

ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ
சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ

ஆண் : வண்டி சோலை செம்பட்ட நான்
வித்து வாரேன் உன்கிட்டதான்
ஏலே சோதா பயலே
சோரா நடந்து வாடா முன்னால
எட்டு வைச்சு வாடா முன்னால

ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ
சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ

(சிறுவன் : ஓரணாவுக்கு இட்லி தா பாட்டி. இட்லி வர வர இளைச்சுட்டே வருது. காலம் கெட்டு போச்சு பாட்டி.

பாட்டி: ஏ கட்டையில் போறவனே. ஓரணாவுக்கு நாலு இட்லி கல்லு குண்டாட்டம் தாரேன் இளைச்சு போச்சுன்னு சொல்றியேடா. ரெண்டணாவுக்கு ஒரு இட்லி வாங்கித் திங்கற காலம் வரும்டா.

சிவக்குமார்: பாட்டி

பாட்டி: என்ன கண்ணு

சிவக்குமார்: எனக்கு கண்ணாலம்

பாட்டி: ராசா நல்ல மனசுக்கு ஒரு குறைவு வராது நல்லா இருப்ப

சிவக்குமார்: என்னடா பார்த்துக்கிட்டு இருக்க

சிறுவன்: கோடி காலத்துல காசு கொடு

சிவக்குமார்: சேலத்துக்கு போறேன் வேற ஏதாவது வாங்கியாரட்டா

பாட்டி: கண்ணு ஆப்பத்துக்கு ஒரு மூணு தோலா ஏலக்காய், அப்புறம் ஒரு பத்து மடை பாயி. சின்னக் கருப்பட்டி அரை வீசை அப்புடியே ஒரு மூக்குப் பொடி டப்பி

சிவக்குமார்: சொல்லீட்டிங்கள்ள மறக்காம வாங்கியாறேன்)


ஆண் : கேட்டாங்க கேட்டாங்க
என்னென்ன கேட்டாங்க
கேட்டாங்க கேட்டாங்க
என்னென்ன கேட்டாங்க
பாட்டியும் ஏலக்கா வேணும்ன்னு கேட்டாங்க
பத்தமட பாயி வேணும்ன்னு கேட்டாங்க

ஆண் : சின்ன கருப்பட்டி
மூக்கு பொடி டப்பி
வாங்கி வரும்படி கேட்டாங்க

ஆண் : பொழு சாய ஊருக்கு ஊஊஊ
பொழு சாய ஊருக்கு
வீரசாக திரும்பணும்
வெகு தூரம் நடக்கணும் வேகமா வாடா

ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ
சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ

(தாத்தா: போ

சிறுமி: தாத்தா நீர் மோர் ஊத்து

தாத்தா: நீ கேட்டா நீர் மோர் என்ன பானகமே தரேன் ஹஹ நீ என்ன கட்டிக்கிறியா

குழு: சிரிப்பு

தாத்தா: வாடா வா செங்கா வா என்னடா இது

சிவக்குமார்: எனக்கு கண்ணாலமுங்க

தாத்தா: டே உன் கண்ணாலத்துக்கு அப்பறம் உன் பொண்டாட்டிக்கு மொத ராத்திரி மொத ஆசீர்வாதம் நான் தான் பண்ணுவேன் சம்மதமா

சிவக்குமார்: ஆகட்டுங்க

குழு: சிரிப்பு

சிவக்குமார்: டே கொண்ணவாயா எதுக்குடா இந்த ஆளுங்க சிரிக்கிறாங்க)


ஆண் : சொன்னாங்க சொன்னாங்க
தாத்தாவும் சொன்னாங்க
சொன்னாங்க சொன்னாங்க
தாத்தாவும் சொன்னாங்க
பொண்டாட்டி கட்டிக்க
வேணும்ன்னு சொன்னாங்க
முன்னாடி கூட்டிட்டு
வாடான்னு சொன்னாங்க

ஆண் : கல்யாணம் செஞ்ச
அன்னைக்கு ராத்திரி
ஆசி வாங்கணும்மின்னாங்க
நெசமாக வருவேங்க ஆஆஆ
நெசமாக வருவேங்க
வயசான மனுஷங்க
வாயார மனசார
வாழ்த்தணும் நீங்க

ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ
சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ

(சிவக்குமார்: ஏண்டா சட்டி

சிறுவன்: அண்ணே

சிவக்குமார்: பயில்வான் ஐயா கள்ளுக்கடையில தான இருப்பாரு

சிறுவன்: ஆமாண்ணே

சிவக்குமார்: கும்பிடறேங்க ஐயா

பயில்வான்: செம்பட்டய்யா வாடா வா ஹா ஹா

சிவக்குமார்: ஒரு நல்ல சேதிங்க

பயில்வான்: அல்லாம் எனக்கு தெரியும்டா. உனக்கு கண்ணாலம்

சிவக்குமார்: ஆமாங்க

பயில்வான்: கட்டாயம் நா வாரேன்

சிவக்குமார்: நல்லதுங்க

பயில்வான்: நில்றா நில்லோ சேலத்துக்கு போயிட்டு வாரப்போ

சிவக்குமார்: மூணு தோளாவுக்கு பாதாமும் பிஸ்தாவும் வாங்கியாரணும் அவ்வளவு தானுங்க

பயில்வான்: ம்ஹும் ஏழு தோலாவுக்கு பாதாம் பிஸ்தா மூணு தோலாணுக்கு முந்திரியும் திராட்சையும் வாங்கிட்டு வா அல்லாம் எனக்கில்லடோ உனக்குத்தான். கண்ணாலத்துக்கு முன்னால இதெல்லாம் சாப்புட்டு நல்லா உடம்ப தயார் பண்ணிக்க ம்ம்ம்

சிவக்குமார்: நான் என்னங்க குஸ்தியாங்க படிக்க போறேன்

பயில்வான்: குஸ்தி ரொம்ப சுலபம். இது அப்படியில்ல ஏய் நான் போதையில இருக்கிறன் எதாவது சொல்லிபுடுவேன். நீ போடா கண்ணு

சிவக்குமார்: வாங்கடா)


ஆண் : இப்படி வாடான்னு
பயில்வானும் சொன்னாங்க
இப்படி வாடான்னு
பயில்வானும் சொன்னாங்க
ஏழு தோலானுக்கு பாதாமும் பிஸ்தாவும்
மூணு தோலானுக்கு முந்திரி திராட்சையும்
வாங்கிட்டு வாடா தின்னுட்டு போடா
வந்திடும் உனக்கு வீரமுன்னாங்க
நான் திங்க போறேன் ஏஏஏ
நான் திங்க போறேன்
அப்புறம் பாரு
நம்மூர் காளையா
முட்டிப் பாக்க போறேன்

ஆண் : வெத்தல வெத்தல வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ
சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ

ஆண் : வண்டிச் சோலை செம்பட்ட நான்
வித்து வாரேன் உன்கிட்டதான்
ஏல சோதா பயலே
சோரா நடந்து வாடா முன்னால
எட்டு வைச்சு வாடா முன்னால

*****