நினைத்தாலே இனிக்கும்

ninaithale inikkum
நடிப்பு
கமல்ஹாசன், ஜெயபிரதா, ரஜினிகாந்த், கீதா, ஜெயசுதா, சரத் பாபு, நாராயண ராவ், எஸ். வி. சேகர்

பாடல்கள்
கண்ணதாசன்

இசை
எம்.எஸ். விஸ்வநாதன்

ஒளிப்பதிவு
பி.எஸ். லோகநாத்

படத்தொகுப்பு
என்.ஆர். கிட்டு

கதை
சுஜாதா

திரைக்கதை, இயக்கம்
கே. பாலச்சந்தர்

தயாரிப்பு
ஆர். வெங்கட்ராமன்

தயாரிப்பு நிறுவனம்
பிரேமாலயா புரொடக்‌ஷன்ஸ்

வெளீயீடு:
14 ஏப்ரல் 1979


நினைத்தாலே இனிக்கும் (Ninaithale Inikkum) திரைப்படம் 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ம் நாள், சித்திரை மாதம் முதல் நாள் வெளிவந்தது.

ஆர் வெங்கட்ராமன் தயாரிப்பில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயபிரதா, ரஜினிகாந்த், கீதா, ஜெயசுதா, சரத்பாபு நாராயண ராவ், எஸ்.வி. சேகர், பூர்ணம் விஸ்வநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். தெலுங்கில் ‘அந்தமானிய அனுபவம்’ எனும் பெயரில் 1979 ஏப்ரல் 19இல் வெளியிடப்பட்டது. பின்னர் இப்படம் ‘பியாரா தரானா’ என்ற பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

பிரேமாலயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தின் பெரும்பகுதி சிங்கப்பூர் நாட்டில் படமாக்கப்பட்டது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பி.எஸ். லோகநாத், தமிழக அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதினைப் பெற்றார். என்.ஆர். கிட்டு இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்திருந்தார்.

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இப்படத்தின் சிறப்பே பாடல்கள்தான். இப்படத்தில் மொத்தம் 14 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

நம்ம ஊரு சிங்காரி, நினைத்தாலே இனிக்கும், இனிமை நிறைந்த உலகம், சம்போ சிவசம்போ, பாரதி கண்ணம்மா போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை.

ரஜினியும், கமலும் இணைந்து நடித்த கடைசி படம் இது. இப்படத்தில் தான் எஸ்.வி. சேகர் அறிமுகமானார். பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கதை, வசனத்தில் உருவானது இப்படம்.

நான்கு பேர் கொண்ட ஒரு மெல்லிசைக்குழு, ஒரு நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் செல்கிறார்கள். அங்கு நடைபெறும் ஒரு கடத்தல் முயற்சியில் நாயகன் நாயகியைக் காப்பாற்றுகிறான். ஆனால் நாயகிக்கு புற்றுநோய் என்று தெரிய வருகிறது. இருந்தாலும் அவளை மணக்கிறான் நாயகன். கடைசியில் அவள் மரணமடைகிறாள். படம் முழுவதும் பொழுது போக்காக நகர்ந்தாலும் இறுதியில் சோக முடிவைக் கொண்டு முடிகிறது.

உலகப் புகழ் பெற்ற தி பீட்டில்ஸ் மியூசிக் குழுவை மனதில் கொண்டு இப்படத்தில் இசைக்குழு உருவாக்கப்பட்டிருந்தது. பட்டையான பெல்ட், பெல்ஸ் பேன்ட் என இப்படம் அக்கால இளைஞர்களிடையே புதிய உடை கலாச்சாரத்தையே உருவாக்கியது.

இப்படத்தின் எங்கேயும் எப்போதும் பாடல் 2007ல் வெளியான பொல்லாதவன் படத்தில் பி. யோகியால் ரிமிக்ஸ் செய்து வெளியிடப்பட்டது. சம்போ சிவசம்போ பாடல் 2014ல் வெளியான சலீம் படத்தில் விஜய் ஆண்டனியால் ரீமிக்ஸ் செய்து வெளியிடப்பட்டது.

பல தரப்பட்ட மக்களை கவர்ந்த இப்படம் பாடல்களுக்காகவே பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

வீடியோ


*****
பாடல்கள்
1. சம்போ சிவசம்போ
படம் : நினைத்தாலே இனிக்கும் (1979)
பாடியவர் : எம்.எஸ். விஸ்வநாதன்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
இயற்றியவர் : கண்ணதாசன்

வீடியோ


சம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ

ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்
மனிதன் யந்திரம் சிவசம்போ
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவசம்போ ஓ

ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்
மனிதன் யந்திரம் சிவசம்போ
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவசம்போ ஓ

மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்
மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்
பல்லாக்கைத் தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு
உன்னாயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு

ரம் டம் த ரி ரி ரி ...
ரம் டம் த ர ர ரி ரி ...
ரம் டிம் டம் டம்
த ர ர ரி ரி ர ரி ரி ர ர ர...

ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்
மனிதன் யந்திரம் சிவசம்போ
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவசம்போ ஓ ஓ ஓ

அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்
தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே
எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே ஏ ஏ ஏ

கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாளின்று
காலங்கள் போனாலோ தின்னானே என்பார்கள்
மதுவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு
மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு ஹோ ஹோ

ரம் டம் டம் த ரி
ரிம் டிம் டிம் ரி ரி
ரைட் ரம் ரம்
த ர ர ரி ரி ர ரி ரி ர ர ர...

ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்
மனிதன் யந்திரம் சிவசம்போ
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவசம்போ ஓ ஓ ஓ

லலலாலாரிர லலலாலாரிர லலலாலாரிர சிவசம்போ
லலலாலாரிர லலலாலாரிர லலலல்லாலாரிர சிவசம்போ

*****
2. இனிமை நிறைந்த உலகம் இருக்கு
படம் : நினைத்தாலே இனிக்கும் (1979)
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்பிரமணியம் & எல்.ஆர். ஈஸ்வரி
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
இயற்றியவர் : கண்ணதாசன்

வீடியோ


பெண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்

புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்

ஆஹா இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்

புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்

அட மன்னாதி மன்னன்மார்களே
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே

அட மன்னாதி மன்னன்மார்களே
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே

பறந்தா மேகங்கள் ஓடினால் வானங்கள்
பாடினால் கானாங்கள் ஆடுவோம் வாருங்கள்

ஆண்குழு : துத்து துதூத்து துத்து துதூத்து
துத்து துதூத்து துத்து துதூத்து

ஆண்: அடியே ராஜாத்தி
சிரிச்சா ரோஜா பூ
உனக்கா சொல்லித் தரணும் ஆஆஆ
இது தான் ராஜாங்கம்
எதுக்கு பூர்வாங்கம்
இனி யார் சொந்தம் வரனும் ஏஏஏ

அடியே ராஜாத்தி
சிரிச்ச ரோஜாப் பூ
உனக்கா சொல்லித் தரணும்
இது தான் ராஜாங்கம்
எதுக்கு பூவாங்கம்
இனி யார் சொந்தம் வரனும்

இடை தங்கம் நடை வைரம்
இதழ் பவழம் நகை முத்து
நீ விண்ணுலகப் பூந்தோட்டமா ஆ ஆ ஆ

பெண்: பருவம் ராகங்கள்
அழகே கானங்கள்
சுகமே பாடல்கள்
சேருவோம் வாருங்கள்

ஆண்குழு : துத்து துதூத்து துத்து துதூத்து
துத்து துதூத்து துத்து துதூத்து

பெண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்

புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு
ஜாலி பர்ட்ஸ்

ஆண்குழு : துத்து துதூத்து துத்து துதூத்து
துத்து துதூத்து துத்து துதூத்து

பெண்: ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா

ஆண்: கமலா கல்யாணி
வசந்தா வந்தாளா
மூணு மூணு பொண்ணுங்க
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு
மூணுக்கும் நாலரை கண்ணுங்க
ஹேஹே ஹேஹே

கமலா கல்யாணி
வசந்தா வந்தாளா
மூணு மூணு பொண்ணுங்க
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு
மூணுக்கும் நாலரை கண்ணுங்க

ஒரு கட்டு ஒரு மெட்டு
ஒரு மொட்டு ஒரு சிட்டு
அந்த மூணுக்கும்
நான் ஒருத்தன் மாப்பிள்ளை...

ஒருத்தி பி.ஏ. யாம் ஒருத்தி எம்.ஏ. யாம்
இரண்டையும் சேர்த்தாக்கா
அடுத்தது பாமாவாம்

ஆண்குழு: துத்து துதூத்து துத்து துதூத்து
துத்து துதூத்து துத்து துதூத்து

பெண்: ஆஹா இனிமை நிறைந்த
உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு
லவ்லி பர்ட்ஸ்
புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு
ஜாலி பர்ட்ஸ்