நல்லதொரு குடும்பம்


நடிப்பு
சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, தீபா, தேங்காய் சீனிவாசன், மனோரமா, வி.கே. ராமசாமி, நாகேஷ், கே. பாலாஜி, விஜயலலிதா

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
ஜி.ஆர். நாதன்

பாடல்கள்
கண்ணதாசன்

படத்தொகுப்பு
பி. கந்தசாமி

கதை
பாலமுருகன்

வசனம்
ஏ.எல் நாராயணன்

இயக்கம்
கே. விஜயன்

தயாரிப்பு
கே. பாலாஜி

தயாரிப்பு நிறுவனம்
சுஜாதா சினி ஆர்ட்ஸ்

வெளீயீடு:
3 மே 1979

வீடியோ


*****
பாடல்கள்
1. சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்

படம் : நல்லதொரு குடும்பம் (1979)
பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : கண்ணதாசன்

வீடியோ


சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
என்னை பூவைப் போல சூடினாள்
சிந்து நதிக்கரை ஓரம்

மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்

மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்

கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை

சொல்லிக் கொடுத்தேன் கதை கதை
அள்ளிக் கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்

தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்

தெள்ளுத்தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்

தெள்ளுத்தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்

கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்

வான வெளியில் இதம் இதம்
சோலை வெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்

தமிழ் கீதம் பாடினாள்
என்னை பூவைப் போல சூடினாள்

சிந்து நதிக்கரை ஓரம்

*****


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020