கவரிமான்

rosappu ravikkaikari
நடிப்பு
சிவாஜி கணேசன், ஸ்ரீதேவி, மேஜர் சுந்தர்ராஜன், விஜயகுமார், ரவிச்சந்திரன், மாஸ்டர் சேகர், தேங்காய் சீனிவாசன், பிரமீளா, எஸ்.வரலட்சுமி, சொர்ணா

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
பாபு

படத்தொகுப்பு
ஆர்.விட்டல், டி.கே.ராஜன்

கதை, வசனம், பாடல்கள்
பஞ்சு அருணாசலம்

இயக்கம்
எஸ்.பி.முத்துராமன்

தயாரிப்பு
பி.எச்.ராஜண்ணா

தயாரிப்பு நிறுவனம்
ராஜண்ணா எண்டர்பிரைசஸ்

வெளீயீடு:
6 ஏப்ரல் 1979

கவரிமான் திரைப்படம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்தது. எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீதேவி, மேஜர் சுந்தர்ராஜன், விஜயகுமார், ரவிச்சந்திரன், மாஸ்டர் சேகர், தேங்காய் சீனிவாசன், பிரமீளா, எஸ்.வரலட்சுமி, சொர்ணா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கதை வசனம் மற்றும் பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார். இப்படத்திற்கு பாபு ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆர்.விட்டல் மற்றும் டி.கே.ராஜன் படத்தொகுப்பு செய்திருந்தனர்.

இப்படத்தினை ராஜண்ணா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் பி.எச்.ராஜண்ணா தயாரிக்க, பஞ்சு அருணாசலம் துணை தயாரிப்பாளராக இருந்துள்ளார்.

வீடியோ


*****
பாடல்கள்
1. பூ போலே உன் புன்னகையில்
படம் : கவரிமான் (1979)
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
இயற்றியவர் : பஞ்சு அருணாசலம்

வீடியோ


பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா

என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா

பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே

மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே

அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்

வா மகளே என்னைப் பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா

அம்மாவென்று வரும் கன்றுக் குட்டி
அது தாய்மையைக் கொண்டாடுது

குக்கூ என்று வரும் சின்னக் குயில்
தன் குழந்தைக்கு சோறூட்டுது

நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே

நீயின்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா

பெத்த மனம் இன்று பித்தாகியே
ஒரு சோகத்தில் பண் பாடுது

பிள்ளை மனம் பெரும் கல்லாகியே
ஒரு கோபத்தில் நின்றாடுது

எண்ணங்கள் நூறு திண்ணங்கள் நூறு
நெஞ்சுக்குள் ஓட நான் வாழ்கின்றேன்

வா மகளே என்னைப் பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா

என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா